தமிழ்த் தேசிய கூட்டணியும் வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களும் தமிழ் ஈழம் என்ற பிரிவினைவாதக் கோரிக்கையைக் கைவிட வேண்டும். அவ்வாறு செய்தால், தற்போதுள்ள அதிபருக்கு அதிக அதிகாரம் இருக்கும் வகையிலான ஆட்சி முறையை முடிவுக்குக் கொண்டுவரத் தயாராக இருக்கிறேன்.
– மகிந்த ராஜபக்ஷே, இலங்கை அதிபர்
———-
ராஜபக்ஷே செல்கின்ற பாதை முழுமையாக சட்டத்துக்கு விரோதமானது. உச்சகட்ட ஊழல் நடக்கின்றது. ஒப்பந்தங்களில் எந்தளவுக்கு பணம் கொள்ளை அடிக்கப்-படுகின்றது என்பது எனக்குத் தெரியும். தங்களின் குடும்பத்தை வளர்த்துவிடுகிறார்கள். அதற்காக பொதுச் சொத்துகள் சுரண்டப்-படுகின்றன. அன்று ஊழல் குற்றச்சாட்டில் அவரைச் சிறையில் அடைக்காமல் விட்டதற்காக நான் மக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். அவர் மூன்றாவது தடவையாக அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு அரசமைப்புச் சட்டப்படி தகுதியை இழந்துவிட்டார்.
– சரத் என்.சில்வா, இலங்கை உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி
———–
சொல்றேங்க!
ஓ… இது தான் மேட்டரா? திரும்ப அதிபராக முடியாது. ஆக, அதிபருக்கு அதிகாரத்தைக் குறைத்துவிட்டால், பிரதமராக அதிகாரம் பெறலாமல்லவா?
ராஜபக்சே ஏன் கழுத்துத் துண்டைக் கழற்றிப் போடுறான்னு தெரியுதா?