Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

அதிசயம் பாரீர்!

மோடி ஆட்சி செய்யும் குஜராத்தின் மெஹசனா [Mehsana dist] மாவட்டத்தில் உள்ள பால் கூட்டுறவு நிறுவனங்கள் தலித் மக்களிடமிருந்து பாலினை வாங்குவதில்லை. காரணம், மேல் ஜாதியினர் தலித்கள் வளர்க்கும் தலித் பசுக்களிடம் இருந்து பெறப்படும் பாலினை வாங்க மாட்டார்களாம்.

ஜாதிவெறி மாடுகளைக்கூட விட்டு வைக்காம தலித் கோமாதா பார்ப்பன கோமாதானு பிரிக்கப்படும் கொடுமை இந்தியாவைத் தவிர வேறு எங்கும் பார்க்க முடியாது. இந்து மதத்தைக் காக்க புது அவதாரம் எடுத்திருக்கும் மோடியின் ராஜ்ஜியத்தில்தான் இந்தக் கூத்து நடப்பதாக ஹிந்து பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

தனது மாநிலத்தின் அவலத்தையே தடுக்க வழியில்லாத ஆதிக்க ஜாதிகளின் அட்டூழியங்களை ஊக்குவிக்கும் இவர்தான் நாளைய இந்தியாவின் பிரதமராம்.

இந்தியாவில் தலித், முஸ்லிம், பழங்குடியின மக்களின் வாழ்க்கைத் தரம் மோசமாக உள்ள மாநிலங்களில் குஜராத்தும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

மோடி வித்தை காட்டும் கூலி வேலை கேடிகளே, இவைதான் மோடியின் குஜராத் வளர்ச்சி என்னும் வேதனை உண்மைகள்?

— _ முகநூலிலிருந்து