Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

அவருக்கு 30 வயதுக்குள் இருக்கலாம்.
புது மணமகள் போல
கை நிறைய கண்ணாடி வளையல்கள்…
அவசரக் கோலத்தில் வைக்கப்பட்டதாய் தெரியும்
தலை நிறைய பூங்கொத்துக்கள்…
வீங்கிய முகம்….
பதினாறாம் நாளுக்கன்னு
எழவு வீழ்ந்து…
ஓலமாய் கத்துகிறார்
அம்மாவைப் பெற்றவள். இவன் செத்தான்
தாலியறுத்தான்…
பதிலுக்கு எம்பொண்ணு செத்திருந்தா
புதுத் தாலி கட்டியிருப்பான்
கிடுகிடுக்கிறாள் பாட்டி

சார்மினார் பந்தலில் கிழவன்
என்னா பேச்சு பேசுறா பாத்தியா
ஆம்பளைக்கூட்டம்
நெளிகிறது…

– மணிவர்மா