Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

அய்யாவின் மனம்

விருதுநகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அய்யா அவர்கள் பேசிக் கொண்டிருந்தபோது, கூட்டத்தின் முன்வரிசையில் உட்கார்ந்திருந்தவர் திடீரென கத்தியுடன் அய்யாவை நோக்கிப் பாய்ந்துள்ளார். சிறிதும் பதற்றமடையாத அய்யா அவர்கள், அந்த நபரின் கையை எட்டிப் பிடித்துள்ளார். அய்யாவின் தொண்டர்கள் அந்த நபரைத் தாக்க ஆயத்தமாகிவிடவே, அய்யா அனைவரையும்  அமைதியாக இருக்கும்படிக் கேட்டுக் கொண்டுள்ளார்.

பின்னர் அந்த நபரை மேடையில் தன் அருகிலேயே அமர வைத்துவிட்டு, தொடர்ந்து உரையாற்றிய அய்யா அவர்கள் கூட்டம் முடிந்ததும், பத்திரமாக அவரது வீட்டில் கொண்டுபோய் விடும்படி தொண்டர்களுக்குக் கட்டளையிட்டுள்ளார்.

கூட்டம் முடிந்ததும் அந்த நபரைப் போலீசில் ஒப்படைப்பார் என நினைத்தவர்களுக்கு அய்யாவின் செயல் ஆச்சரியத்தைக் கொடுத்ததாம்.