1948ஆம் ஆண்டு தந்தை பெரியாரின் ஆணைப்படி திராவிடர் கழகம் நடத்திய இரண்டாம் ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்ற திராவிடர் கழக வீராங்கனைகளைக் கைது செய்த காவல்துறையினர் அவர்களைப் போராட்ட இடத்திற்குத் தொடர்பில்லாத, பல கிலோ மீட்டர்களுக்கு அப்பால் இறக்கி விட்டனர் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?





