| உ |
லக மக்கள் தொகை எவ்வளவு தெரியுமா? 788.44 மில்லியன். அதில்,
619 மில்லியன் மக்களுக்கு முதுகு வலி இருப்பதாக உலக சுகாதார மையம் சொல்கிறது. அதை விட உலகில் உள்ள ஒவ்வொருவரும் ஒரு முறையாவது முதுகு வலியால் பாதிக்கப்படுவார்கள் என்று எச்சரிக்கையும் விடுக்கிறது. வயது வரம்பு இன்றி எல்லோரும்
பாதிக்கப்படுவார்கள் என்றும், வயது மூப்பி
னால் பாதிப்பு அதிகரிக்கும் என்றும் அதிலும் பெண்கள் அதிகம் பாதிப்படைவார்கள் என்றும்
சொல்கிறது. ஆனால், குறிப்பிட்ட பின்னணி
யின்றி உருவாகும் முதுகு வழியே 90 விழுக்காடு என்றும் சொல்லி வியப்பைக் கூட்டுகிறது.
குறிப்பிட்ட பின்னணியின்றி என்று சொல்வது,
இதனால் தான் வலிக்கிறது அல்லது இந்த உப நோய்களால் தான் வலிக்கிறது என்று உறுதிப்படுத்த முடியாமல் பல்வேறு துணைக் காரணங்கள் கொண்டு இருப்பதைக் குறிக்கிறது. எனவே, நாமே பின்னணிக் காரணங்களை கண்டு பிடிப்போம். வலி என்பது எல்லோருக்கும் ஒரே காரணமும், பின்னணியும் கொண்டு இருக்க வேண்டும் என்பதில்லை. எனவே, நான் சொல்லப் போவது பார்முலா தானே ஒழிய
விடை கிடையாது. இந்தப் பார்முலாவை வைத்து
உங்கள் வலிக்கான காரணமும் புரியும், அதற்
கான விடையும் கிடைக்கும். எல்லாவற்றுக்கும் அடிப்படை அவற்றின் அமைப்பு முறை.
அறிவோம் வாருங்கள்
தசைகளை எல்லாம் கழட்டி வைத்து விட்டு வெறும் எலும்புகளைக் கற்பனை செய்யுங்கள். மண்டை ஓடு, அதன் தொடர்ச்சியாய் 33 முதுகெலும்புகள். இந்த 33 எலும்புகள் தான் தலைக்குக் கீழும், இடுப்புக்கு மேலும் உள்ள உங்கள் உடல் அமைப்பைத் தீர்மானிக்கிறது. இதன் இடுக்குகளில் இருந்து முதுகுத் தண்டின் வழி நரம்புகள் வெளி வந்து கொண்டிருக்கும். அதில் முதல் ஏழு கழுத்தையும், அதன் தொடர்ச்சி
யான அடுத்த பன்னிரண்டு மேல்முதுகையும், அடுத்த அய்ந்து கீழ் முதுகு அல்லது இடுப்புப் பகுதியாகவும், அதன் கடைசி அய்ந்து இடுப்பெலும்புகளோடு இணைந்தும் கொள்கிறது.
இதில் கீழ் முதுகுப் பகுதியில் உள்ள அய்ந்து எலும்புகளின் இடுக்கில் இருந்து தான் கால்களுக்கு நரம்புகள் செல்கிறது. இந்த எலும்புகளுக்கு இடையில் இருக்கும் மெத்தைகளின் மீதான அழுத்தம் அவற்றை வெளியே பிதுங்க வைத்து அவை அந்த நரம்புகளோடு உரசுவதையே “L3-L4-L5 டிஸ்க்” பல்ஜ் என்று நாம் அழைக்கிறோம்.
வெறும் எலும்புகளை அறிந்தால் எப்படி?
முதுகில் தசைகள் இல்லையென்றால் முன் உடலில் இருக்கும் தசைகளின் இழுசக்தியில் நாம் எப்போதும் குனிந்தே இருந்திருப்போம். ஆடு, மாடுகளைப் போல. நாம் நிமிர வேண்டும் என்றால், மொத்த முதுகெலும்புகளும் ஒரு சேர எதிர் சக்தியை உருவாக்கினாலே முன் உடலில் உள்ள தசைகளைக் கடந்து நாம் நிமிர முடியும். எனவே,ஏராளமான தசைகள் கழுத்து முதல் இடுப்பு வரை கயிறுகளைப் போல அங்கும் இங்குமாய் ஒட்டி, பிடித்து, இழுத்து வைத்திருக்கும். கடைசி விலா எலும்பில் இருந்து ஒரு தசை இடுப்பு
எலும்போடு, இடுப்பில் இருந்து துவங்கி முதுகெலும்புகளோடு சேர்ந்து கடைசியில் கையில் சென்று முடியும் தசைகள் என்றும் எப்படி
யெல்லாம் எதிர் சக்தியில் நாம் நிமிருவோமோ அப்படியெல்லாம் ஏராள
மான தசைகள் இருக்
கிறது. இப்படிப்பட்ட தசை
களின் கட்டமைப்பே நம்மை நிமிர வைத்திருக்கிறது. இதில் நாம் தெரிந்துக் கொள்ள
வேண்டிய முக்கியமான விடயம், நாம் எதுவுமே செய்யவில்லை என்றாலும் கூட நம்முடைய தசைகளுக்கான சுமை என்பது அதிகம்.
நம்முடைய தவறுகள் என்ன?
நாம் நேராக நிமிர்ந்து உட்காரும்போதே நம்மை நிமிர்த்த அத்தனைச் சுமைகளை எதிர்கொள்ளும் தசைகள், நாம் மெத்தைகளில் கோணல் மாணலாய் உட்காரும்போதும், ஒரு பக்கமாய் சாய்ந்து, மொத்தமாய் சாய்வதற்கும் படுப்பதற்கும் இடையில் தவழும்போதும் எத்தனைப் பெரிய அழுத்தங்களுக்குத் தசைகள் ஆட்படும்?
அப்படியே குனிந்து பொதிகளை, பைகளை, தண்ணீர்க் கேன்களைத் தூக்கும்போது உங்கள் முன் உடலின் இழுசக்தி, புவியீர்ப்பு விசையின் அழுத்தம், நீங்கள் தூக்கப் போகும் பொருளின் எடை என்றும் மூன்றையும் ஒரு சேர தூக்க முயலும்போது அந்தத் தசைகள் எப்பாடு
படும்?
தொப்பை இருந்தால், உங்கள் உடல் அமைப்பு முறையில் சில மாற்றங்கள்
நிகழும். உங்கள் தொப்பை
யின் எடையைச் சமாளிக்க சற்றே இயல்பை விட
நிமிர முயற்சி செய்வோம்.
அப்படி முயலும்போதெல்
லாம் நம்முடைய முதுகுத் தசைகள் இயல்பை விட அதிக அழுத்தங்களுக்கு உள்ளாகும்.
இருசக்கர வாகனம் ஓட்டும்
போது, உங்கள் தலைக்கவசத்தின் எடைக்கு ஏற்ப உங்கள் தலை முன்னுக்கு இழுக்
கும், நீங்கள் சுமக்கும் பேக் பாக் உங்கள் உடலைப் பின்னுக்கு இழுக்கும். இதற்கிடையில் சாலையில் உள்ள பள்ளங்களின் அதிர்வுகள் இன்னும் தசைகளுக்கு அழுத்தங்களை அதிகரிக்கும்.
இப்படி ஏராளமான காரணங்கள் உண்டு. இயங்கியல் முறையில் நாம் கொடுக்கும் பேரழுத்தங்களே கடைசியில் வலியாக மாறுகிறது. நான் செய்யும் தவறும், நீங்கள் செய்யும் தவறும் ஒன்றாக இருக்க வாய்ப்புகளே இல்லை. ஆனால், அதனால் பாதிப்புக்கு உள்ளாகும் தசைகள் ஒன்றாக இருக்கலாம். நாம் என்ன செய்தாலும் உடல் உங்களைத் தற்காத்துக் கொள்ளவே முயலும். ஆனால், அதன் எல்லைகடந்த அழுத்தங்களே தசைகளில் ஏற்படும் தாக்கங்கள், எலும்புகளின் இடையில் இருக்கும் மெத்தைகளின் நான் ரோபோட் போல தான் இருக்க வேண்டுமா என்று பிதுங்குதலும் டிஸ்க் பல்ஜும். நீங்கள் சொல்வதைப் பார்த்தால் கேட்கலாம்; இல்லை என்னை விட உடல் பருமன் கொண்டவர்கள் என்னை விட பெரிய தொப்பையைக் கொண்டவர்கள் இயல்பாக இருக்கிறார்களே என்று கேட்கலாம்.
எல்லோரும் நீங்களும் ஒன்று இல்லை, அவர்களின் இயங்கியலும் உங்கள் இயங்கியலும், வாழ்வியலும் ஒன்று இல்லை. நீங்கள் சாலைகளில் பார்ப்பதை வைத்தோ, அல்லது இணையத்தில் பார்ப்பதை வைத்தோ அவர்கள் வலியற்று இருக்கிறார்கள் என்று நம்பிக் கொள்ளாதீர்கள்.
நீங்கள் ரோபோட் போல இருக்க வேண்டாம். வேண்டவே வேண்டாம். நான் சொல்வதெல்லாம் உங்கள் வேலைக்கு ஏற்ப உங்கள் உடலைத் தயார்ப்படுத்துங்கள். நீங்கள் அதிக பொதிகளைச் சுமக்க வேண்டுமா? தரையில் இருந்து பொதிகளோ, தண்ணீர்க் கேன்களோ தூக்க வேண்டுமா? நீண்ட நேரம் உட்கார வேண்டுமா? உடலைச் சுழற்றி வேலை செய்வது தான் உங்கள் வேலை முறையா? நீண்ட நேரம் நிற்க வேண்டுமா? இவற்றுக்கெல்லாம் பயிற்சிகள் மாறுபடலாம். அமைப்பு முறை தெரியும், அதற்குரிய பயிற்சிகளைச் செய்து தயார்ப்படுத்துங்கள்.
என்ன பயிற்சி செய்ய வேண்டும்?
இதற்கு முன், உங்கள் உடலின் அமைப்பு முறை எப்படி இருக்கிறது? எந்தெந்தத் தசைகளில் இறுக்கம் இருக்கிறது, எந்தெந்தத் தசைகள் இழுசக்தி இன்றி இருக்கிறது? எந்தெந்தத் தசைகளைப் பலப்படுத்த வேண்டும்? எவற்றையெல்லாம் சமன்படுத்த வேண்டும்? முன் உடற் தசைகளோடு இவற்றை எப்படிச் சமன் செய்வது? உங்களின் தொழில் சார்ந்து இருக்கிற வேலைகள் என்னென்ன? இவற்றையெல்லாம் அறியாமல் யாராவது இந்தப் பயிற்சிகளை மட்டும் செய்யுங்கள் வலி நீங்கும் என்று சொன்னால், அவர்கள் உங்களை ஏமாற்றுகிறார்கள் என்று பொருள்.
எனவே, உடல் இயங்கும் பார்முலா தெரிந்துக் கொண்டோம். உங்கள் தேவைகளுக்கு ஏற்ப இயன்முறை மருத்துவரின் மேற்பார்வையோடு உடற்பயிற்சிகளைக் கண்டறிந்து உங்களுக்கான பயிற்சிகளைச் செய்யுங்கள். அந்த 619 மில்லியனில் நாம் இல்லாமல் இருப்போம், இனி வரும் தலைமுறைக்கு இதைக் கற்பிப்போம்.
தொடரும்…
