Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

தி.மு.க. மறுப்புத்தெரிவிப்பது முக்கியம்!

1)     கே:  திரிணாமுல், சிவசேனா (உத்தவ்) கட்சிகளிலிருந்து அதிருப்தி எம்.பி.கள் விலகி, ஒன்றிய பி.ஜே.பி.க்கு ஆதரவு தெரிவித்திருப்பது,
பி.ஜே.பி.யின் நோக்கிற்கு சட்டங்களைத் திருத்த வழிவகுத்து, அழிவுக்கு இட்டுச் செல்லுமே! இதற்குத் தீர்வு என்ன?

          – மு. கரிகாலன், தஞ்சை

        ப: அரசியல் சட்டத்தையோ, நீதிமன்றத் தீர்ப்புகளையோ பொருட்படுத்தாமல், கட்சித்தாவல் தடைச்சட்டம் என்பதும், அய்.நா.சபை போல பேசா மடந்தைத்தனமுடையதாக உள்ள நிலையில், ஒரே இறுதித் தீர்வு ஒன்றிய ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. அகற்றப்படும் காலத்தால் எதிர்நோக்கிக் காத்திருப்பதும், கடமையாற்றுவதும் தான்!

2)    கே:  பி.ஜே.பியுடன் தி.மு.க. கூட்டணியா? என்ற கேள்விக்கு, நயினார் நாகேந்திரன், அது தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும் என்று கூறிய பதில், தி.மு.க.வின் நம்பகத்தன்மையைப் பாதிக்காதா? தி.மு.க. என்ன எதிர்வினை ஆற்ற வேண்டும்?

    – நி. திருமலை, முசிறி.

ப:   நிச்சயமாக அது உண்மையாக இருக்க வாய்ப்பிருக்காது. தி.மு.க. முன்பு ஒருமுறை செய்த தவறான முடிவு போல எக்காரணம் கொண்டும் அப்படி ஒரு தவறு செய்யாது என்றே உறுதியாக நம்புகிறோம் – இதனை தி.மு.க. முளையிலே கிள்ளியெறியும் விதமாக மறுப்புரை அளிப்பதும் முக்கியம் – இந்தக் காலகட்டத்தில்!

3)     கே:  “பி.எம்.ஸ்ரீ” திட்டத்தை நிபந்தனைகளுடன் ஏற்போம்; என்ற கேரள முதல்வரின் நிலைப்பாடு ஏற்புடையதா?

    – க. விஷ்ணு, செஞ்சி.

        ப: முன்பிருந்த இடதுசாரி மார்க்சிஸ்ட் ஆட்சியே இதில் தடுமாறியது; காங்கிரஸ் கட்சி இதே நிலையில் அந்த ஆட்சியில் பி.ஜே.பி.யோடு இரகசிய ஒப்பந்தம் என்று கூறி ஆட்சியைப் பிடித்தது, இப்போது பகிரங்கமாக இப்படியென்றால், பதவிப்பசி எதையும் செய்யும் என்பதுதான் இது!

4)    கே: கொள்கைக் கூட்டணியாக தி.மு.க.வுடன் பயணித்தவர்கள், அணி மாறிவரும் சூழலில் தி.மு.க.வுக்குத் தாய்க்கழகத்தின் வழிகாட்டல் என்ன?

– சு. தீபக், காரியாபட்டி.

        ப: தொடர்ந்து ‘விடுதலை’யில் வரும் அறிக்கைகளைப் படியுங்கள் புரியும். சொந்தக்காலில் நின்று தி.மு.க. வென்று காட்டவேண்டிய தருணம் நெருங்கி விட்டது.

5)     கே: கொள்கை எதிரியான பி.ஜே.பி.
ஆளும் ஒன்றிய அரசுடன் இணக்கமாகத் த.வெ.க. அரசால் செல்ல முடியுமா?

–      ம. சாந்தி, விழுப்புரம்.

        ப: “இணக்கம்” என்பதற்குப் பொருள் ‘சரணாகதி’ அல்லது ‘இரட்டை நிலைப்
பாடு’ என்பது பொருளாக ஆகிவிடக் கூடாது.

6)    கே: எங்கெங்கும் செய்திகளில் மோசடிப் பிரச்சாரங்கள் நிகழ்ந்து
வரும் சூழலில் திராவிடர் கழகம் இதனை எப்படி எதிர்கொள்ள
விருக்கிறது?

– ப. பாஸ்கர், ஆவடி.

        ப: இது பற்றி 20.06.2026ஆம் தேதி ‘விடுதலை’யில் வெளிவந்த முழு அறிக்கை சரியான, தெளிவான விடையாகும்.

7)     கே: சுற்றுச்சூழல் தொழிலாளர் பாதுகாப்புக்கென பல துறைகள் செயல்பட்டாலும் திருவள்ளூரில் வாயுக் கசிவு காரணமாக
7 பேர் கொல்லப்பட்டுள்ளார்களே?

– க. சுமதி, தாம்பரம்.

        ப: மிகவும் வேதனை தரும் செய்தி. அந்த துயர மரணங்களின் எண்ணிக்கை தற்போது 13ஆக உயர்ந்
துள்ளது மிகவும் கொடுமை. தொழிற்சாலைகளில் போதிய பாதுகாப்பு விதிகளில் சமரசத்திற்கு இடமின்றி, கண்காணித்து மனித உயிர்களைப் பாதுகாக்க வேண்டும்..

     அதுபோலவே பட்டாசு தொழிற்
சாலை மரணங்களும் விபத்தும் கூட!

8)    கே: “அ.தி.மு.க. எங்கள் பங்காளி; அதனுடன் தி.மு.க. கூட்டணி வைத்தால் என்ன தவறு?” என்ற ஆர்.எஸ்.பாரதியின் கேள்விக்குத் தங்கள் பதில் என்ன?

–      ந. இளங்கோ, சீர்காழி.

        ப: சரியான பதில் – சிந்திக்க வேண்டியது
அ.தி.மு.க.விலிருந்து தி.மு.க.வில்
தனிநபர்கள் வந்து சேரும்போது
ஏற்கும் நிலையில் தி.மு.க. என்பதி
லிருந்து பிரிந்தவர்கள் கூட்டு வைத்தால் தத்துவப்படி தவறு எதுவும் இல்லையே!

     முன்பு எம்.ஜி.ஆர் இணைப்பதற்குத் தயாரானார் என்ற வரலாறு – மறந்துவிட்டது.

9)     கே: இந்து அறநிலையத்துறை சார்ந்து, த.வெ.க. அரசின் நிலைப்
பாடு ஏற்புடையதா?

–      உ. பலராமன், மதுரை.

        ப: எந்த நோக்கத்தில் சட்டம் வந்ததோ அதனைச் செயல்படுத்தும் நோக்கில் அனைத்து ஜாதி அர்ச்சகர் படிப்பு, அர்ச்சகர் நியமனப் பிரச்சினையில் அவரும், அரசும் நடந்து கொள்ளுவதைப் பொறுத்தே மதிப்பிடுவது முக்கியம்.

      மற்ற பத்திரிகை விளம்பரச் செய்திகளை வைத்து அல்ல!  {a