புரட்சியாளர் அம்பேத்கரின் ஜாதியை ஒழிக்கும் வழி உரையை நூலாக,
தந்தை பெரியார் வெளியிட்டு 90 ஆண்டுகள் ஆகின்றன.
இந்தியச் சமூகம், சமூகத் திறன் பெற்ற நிலையில்லை. அதிலுள்ள தீமைகளைக் களைவதற்கு இடைவிடாது முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்” என்பதை அம்பேத்கர் ஆய்வு மற்றும் அனுபவ ரீதியாகச் சொல்லி இருக்கிறார். உள்ளங்கையில் இருக்கும் ரேகை போல ஜாதி அமைப்பு முறை பறந்து விரிந்து இருக்கிறது. இதை முற்றாவதாக ஒழிக்க இடைவிடாது முயற்சிகள் தேவை என்பது, தொடர் சங்கிலியாக சமூகம், பெண்கள், வாழ்வியல், மொழி, பொருளாதாரம், பாலினம், அரசியல் என்று அனைத்து விதத்திலும் பின்னிப் பிணைந்திருப்பதால் தான், என்பதை உணர முடியும். இதற்கு எடுத்துக்காட்டாக ஜெய்ப்பூர் சமஸ்தானம் சக்வாராவில் தீண்டத்தகாதவர்கள் விருந்து உண்டு கொண்டிருக்கும் போது ஹிந்துக்கள் அவர்களை அடித்துத் துரத்தினர். காரணம் அவர்கள் சாப்பிட்டார்கள் என்பதல்ல, மாறாக உணவில் நெய் சமைத்து சாப்பிட்டது தான். அதாவது ஆடம்பரப் பொருளாக நெய் பார்க்கப்பட்டிருந்தால் இத்தாக்குதல் நிகழ்ந்திருக்காது. ஆனால், நெய் ஹிந்துக்களின் கெளரவத்தோடு தொடர்புடையது. நீங்கள் எப்படி அதைப் பயன்படுத்தலாம் என்பது தான் இங்குப் பிரச்சினை. ஹிந்து மதத்தில் ஜாதியின் தாக்கம் அல்லது உள்நுழைவு எந்த அளவிற்கு அனைத்து இடங்களிலும் பிரதிபலிக்கிறது என்பது மிக முக்கியமான ஒன்று. அதனால் தான் ஜாதி ஒழிப்பு என்பது சமூகப் பண்பாட்டு மாற்றத்திலிருந்து தொடங்கி, ஹிந்துத்துவத்தின் அடிப்படைகளை முழுமையாக உடைத்து, புதிய வாழ்வியல் பண்பாட்டு முறையைப் பின்பற்றுவதன் மூலமும் பரப்புவதன் மூலமும் தான் சாத்தியமாகும்.
ந்தியச் சமூகம், சமூகத் திறன் பெற்ற நிலையில்லை. அதிலுள்ள தீமைகளைக் களைவதற்கு இடைவிடாது முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்” என்பதை அம்பேத்கர் ஆய்வு மற்றும் அனுபவ ரீதியாகச் சொல்லி இருக்கிறார். உள்ளங்கையில் இருக்கும் ரேகை போல ஜாதி அமைப்பு முறை பறந்து விரிந்து இருக்கிறது. இதை முற்றாவதாக ஒழிக்க இடைவிடாது முயற்சிகள் தேவை என்பது, தொடர் சங்கிலியாக சமூகம், பெண்கள், வாழ்வியல், மொழி, பொருளாதாரம், பாலினம், அரசியல் என்று அனைத்து விதத்திலும் பின்னிப் பிணைந்திருப்பதால் தான், என்பதை உணர முடியும். இதற்கு எடுத்துக்காட்டாக ஜெய்ப்பூர் சமஸ்தானம் சக்வாராவில் தீண்டத்தகாதவர்கள் விருந்து உண்டு கொண்டிருக்கும் போது ஹிந்துக்கள் அவர்களை அடித்துத் துரத்தினர். காரணம் அவர்கள் சாப்பிட்டார்கள் என்பதல்ல, மாறாக உணவில் நெய் சமைத்து சாப்பிட்டது தான். அதாவது ஆடம்பரப் பொருளாக நெய் பார்க்கப்பட்டிருந்தால் இத்தாக்குதல் நிகழ்ந்திருக்காது. ஆனால், நெய் ஹிந்துக்களின் கெளரவத்தோடு தொடர்புடையது. நீங்கள் எப்படி அதைப் பயன்படுத்தலாம் என்பது தான் இங்குப் பிரச்சினை. ஹிந்து மதத்தில் ஜாதியின் தாக்கம் அல்லது உள்நுழைவு எந்த அளவிற்கு அனைத்து இடங்களிலும் பிரதிபலிக்கிறது என்பது மிக முக்கியமான ஒன்று. அதனால் தான் ஜாதி ஒழிப்பு என்பது சமூகப் பண்பாட்டு மாற்றத்திலிருந்து தொடங்கி, ஹிந்துத்துவத்தின் அடிப்படைகளை முழுமையாக உடைத்து, புதிய வாழ்வியல் பண்பாட்டு முறையைப் பின்பற்றுவதன் மூலமும் பரப்புவதன் மூலமும் தான் சாத்தியமாகும்.
அறிவுக் கொடையாளர் பெரியார்!
ஜாதியை அழித்தொழிக்கும் பணியில் சம காலகட்டத்தில் செயல்பாடுகள் மூலம் இவ்வேலைகளைச் செய்து கொண்டிருந்த பெரியாரும், அம்பேத்கரும் ஒரே சிந்தனையின் அடிப்படையில் செயல்பட்டதன் தொடக்கமாக லாகூர் ஜாத்பட்தோடக் மண்டல் மாநாட்டுக்காக அம்பேத்கர் தயாரித்த உரையை மாநாட்டில் வாசிக்க அனுமதிக்காத நிலையில் பெரியார் அவ்வுரையைப் பெற்று தமிழில் ‘ஜாதியை ஒழிக்க வழி’ எனும் தலைப்பில் புத்தகமாக வெளியிட்டார். இருவருக்கும் யார்யாரென்று தெரியாத காலகட்டத்திலேயே அவர்களுக்குள்ளான கருத்தியல் நெருக்கம் இயற்கையாக இணைந்திருக்கிறது எனலாம். இந்த இணைப்பு, வரலாற்றில் மிக முக்கியமாக இன்று வரையில் திகழ்கிறது. அதன் ஆணி வேரைத் தேடிச் சென்றால் ஓர் இடத்தில் பெரியார் இப்படிச் சொல்கிறார். ‘நான் செய்யும் இந்தப் பணிகளை வேறொருவர் செய்ய முன்வந்தால் செய்திருந்தால் அவர்களை வழியென சென்று ஆதரிப்பேன்’ என்று சொல்லியிருக்கிறார். பெரியார் சொல்லியவர் மட்டுமின்றி செய்துக்காட்டக் கூடியவர் என்பதற்கு முதல் உதாரணம் தான் இப்புத்தகம். இதைத் தொடர்ந்து கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை, இங்கர்சால் ரசல், பகத்சிங், மேயோ, லெனின், டாக்டர். பராஞ்சிபே போன்ற முற்போக்காளர்கள் எழுத்துகளைத் தேடித் தேடி வழியென ஆதரித்து தமிழ்ச் சமூகத்திற்குக் கொடுத்த கொடையாளர் பெரியார். இந்நிலைப்பாட்டில் தான் ஜாதி ஒழிக்கும் வழி புத்தகத்தையும் அம்பேத்கரையும் தமிழ் மண்ணில் அறிமுகப்படுத்தினார் பேரறிவாளர் பெரியார்.
ஜாதியின் கட்டமைப்பு:
ஒரு வர்க்கப் போராட்டம் மட்டுமேயல்ல
மராட்டியத்தில் பேஷ்வாக்களின் ஆட்சியில் தெருவில் வரும் ஹிந்துக்களின் மீது தீண்டத்தகாதாரின் நிழல்பட்டால்கூடத் தீட்டாகிவிடும் எனக்கூறி தீண்டத்தகாதாரைப் பொது இடங்களில் நடக்கக் கூட அனுமதிக்கவில்லை – பொது இடத்தில் எச்சில் துப்பினால் ஹிந்துக்கள் தெரியாமல் மிதித்துவிட்டால் தீட்டு – ஹிந்துக்கள் தவறி என்பதை எடுத்துக்கூறி தீண்டத்தகாதாரைத் தொட்டுவிடாமல் தவிர்க்க, தீண்டத்தகாதாரின் கையிலோ கழுத்திலோ கருப்புக் கயிறு கட்டியிருக்க வேண்டும் என்பது நிபந்தனை என்று பல்வேறு அடக்குமுறைகளை உழைக்கும் மக்கள் மீது வன்முறையைக் கையாண்டது ஹிந்து மதம் என்று பட்டியலிடுகிறார் அம்பேத்கர். மேலும் மனுவின்படி எத்தகையச் சட்டங்களை அம்மக்கள் மீது திணித்தனர் என்று வரிசைப்படுத்தியும் ஜாதியை ஒழிக்கும் வழி நூலில் எடுத்துக்காட்டுகிறார்.
டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் தனது புகழ்பெற்ற “சாதி ஒழிப்பு” உரையில், ஜாதியை வர்க்கப் பிரிவினையாக மட்டும் பார்க்காமல், அது வர்க்கங்களைச் சிதைக்கும் ஓர் “அடுக்குமுறைச் சாதனம்” என்று வரையறுக்கிறார். வர்க்கம் என்பது திறமை மற்றும் உழைப்பின் அடிப்படையில் மாறக்கூடிய ஒரு தன்மையைக் கொண்டது. ஆனால், ஜாதி என்பது பிறப்பின் அடிப்படையில் ஒரு மனிதனின் தகுதியைத் தீர்மானித்து, அவனை ஒரு குறுகிய வட்டத்திற்குள் அடைத்து வைக்கிறது.
அம்பேத்கர் இதை மிகக் கடுமையாக விமர்சிக்கிறார்: “ஒரு தொழிலாளியை அவனது இயல்புக்கு மாறாக, அவன் பிறப்பால் பெற்ற தொழிலைச் செய்யச் சொல்வது, அவனது சுதந்திரத்தைப் பறிப்பது மட்டுமல்ல, சமூகத்தின் உற்பத்தித் திறனையும் சிதைக்கும் செயலாகிறது.” ஜாதி அமைப்பானது உழைப்பைப் பிரிப்பதில்லை, மாறாக உழைப்பாளர்களைப் பிரிக்கிறது. இது ஒவ்வொரு தனிமனிதனையும் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் முடக்கி, சமூகப் பங்களிப்பிற்கான வாய்ப்புகளை மறுக்கிறது. இதனால், ஜாதி என்பது ஒரு பொருளாதாரத் தடையாகவும் மாறிவிடுகிறது என்பதே அவரின் மெய்யியல் கருத்து. மேலும் பொருளாதார அதிகாரம் மட்டுமே ஒரே அதிகாரம் என்பதை யாவரும் ஏற்றுகொள்ள மாட்டார்கள். அதையும் தாண்டிப் பல தருணங்களில் தனி மனிதனின் சமுதாய அந்தஸ்து மட்டுமே அவரது ஆட்சி உரிமைக்கும் அதிகாரத்திற்கும் ஆதாரமாக அமைந்து விடுகிறது. இந்தியச் சூழல் இப்படி இருக்கையில் ஜாதி அதற்கு சட்ட வலிமை கொடுக்கும் மதங்களை எதிர்க்காமல் வெறும் பொருளாதாரச் சீர்திருத்தம் மட்டும் பேசினால் சமத்துவம் எப்படி சாத்தியமாகும் என்பதைக் கேள்வியாக வைக்கிறார். ஜாதி அமைப்பின் பொருளாதார வேறுபாடுகளை ஒழிக்க வேண்டியது அவசியமே, பொருளாதாரம் ஜாதிக்குள் பெரும் பங்கு வைப்பது உண்மை. ஆனால் ஹிந்து மதத்தை ஒழிக்காமல் ஜாதியைத் துடைத்தெரியாமல் அதற்குள் தன்னகத்தே கொண்டிருக்கும் பொருளாதார நில ஒடுக்குமுறை, விடுதலையாக மாற என்ன வாய்ப்புள்ளது என்றும் கேள்வி எழுப்புகிறார். மக்களின் பொருளாதாரச் சிக்கலுக்கு காரணமே திட்டமிடப்பட்ட ஜாதி அமைப்பும் ஹிந்து மதமும் தான் என்பதைத் தெளிவாகச் சுட்டியிருப்பார் அம்பேத்கர்.
சுதந்திரம் என்பதே குறிக்கோள் என்றால், ஒரு மனிதன் இன்னொரு மனிதனின் மேல் ஆதிக்கம் செலுத்துவதை ஒழிப்பதே சுதந்திரத்தின் பொருள் என்றால் பொருளாதாரச் சீர்திருத்தம் ஒன்று மட்டும்தான் நாம் மேற்கொள்ளத்தக்க சீர்திருத்தம் என்பதை வலியுறுத்த முடியாது. ஒரு சமுதாயத்தில் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் அதிகாரத்திற்கும் ஆதிக்கத்திற்கும், மதமும் சமுதாயமும் அடிப்படைகளாக இருந்தால் அந்தக் கட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய அவசியமான சீர்திருத்தம், மதச் சீர்திருத்தமும், சமுதாயச் சீர்திருத்தமுமேயாகும் என்கிறார். மேலும் சோசலிஸ்டுகளைப் பார்த்து முதலில் சமுதாய அமைப்பைச் சீர்திருத்தி அமைக்காமல் பொருளாதாரச் சீர்திருத்தத்தைக் கொண்டுவர முடியுமா? என்ற கேள்வியை எழுப்புகிறார்.
“சமூகக் கலவை” இன்மை:
பிரிந்து கிடக்கும் தீவுகள்
அம்பேத்கர் முன்வைக்கும் மிக முக்கியமான வாதம் “சமூகப் பரிமாற்றம்” (Social Intercourse) பற்றியது. ஓர் ஆரோக்கியமானச் சமுதாயம் என்பது அதன் உறுப்பினர்களிடையே பொதுவான நோக்கம், பரஸ்பர நம்பிக்கை மற்றும் கருத்துப் பரிமாற்றம் கொண்டதாக இருக்க வேண்டும். ஜாதி இந்தத் தொடர்பைத் திட்டமிட்டுத் துண்டிக்கிறது. ஜாதி என்பது மக்களை ஒருவருக்கொருவர் கலந்து பழகவிடாமல் தடுக்கும் ஒரு “தடை” (Compartmentalization) ஆகும்.
இதன் விளைவாக, ஒரு ஜாதியினர் மற்ற ஜாதியினருடன் உணவைப் பகிர்ந்து கொள்வதில்லை, மண உறவுகளை ஏற்படுத்திக் கொள்வதில்லை. இத்தகையத் தொடர்புகள் இல்லாதவரை, ஒரு “சமூக உணர்வு” (Public Conscience) உருவாக வாய்ப்பே இல்லை. அம்பேத்கர் இதை ஒரு கப்பல் விபத்துடன் ஒப்பிடுகிறார். ஒரு கப்பல் பல அறைகளாகப் பிரிக்கப்பட்டிருந்தால், அதில் நீர் புகும்போது எப்படி அந்த அறைகள் தனித்தனியாக மூழ்கிப் போகின்றனவோ, அதுபோலவே இந்தியச் சமூகமும் ஜாதி அறைகளால் பிரிக்கப்பட்டிருப்பதால், ஒற்றுமை என்ற உணர்வு ஏற்படாமல் சமூகப் பிளவு ஏற்பட்டுள்ளது. ஒரு சமூகத்திற்குள் சகோதரத்துவம் (Fraternity) இருக்க வேண்டுமானால், அதில் தொடர்புகள் தடையின்றி இருக்க வேண்டும். ஜாதி அந்தத் தொடர்பையே வேரறுக்கிறது.
புனித நூல்களின் அதிகாரம் மற்றும் ஜாதி
அம்பேத்கர் ஜாதி ஒழிப்பிற்கான தனது வாதத்தை வெறும் சமூகக் கண்ணோட்டத்தில் மட்டும் நிறுத்தவில்லை; அது மதத்தோடு எவ்வாறு பிணைக்கப்பட்டுள்ளது என்பதையும் உற்று நோக்குகிறார். ஜாதி அமைப்பு இத்தனை காலம் அழியாமல் இருப்பதற்கு அதன் அடிப்படையாக இருக்கும் “சாஸ்திரங்கள் மற்றும் மத நூல்களே” காரணம் என்கிறார்.
அதற்கு எடுத்துக்காட்டாக, ”ராமாயணத்தில் ராமன், சம்புகனைக் கொன்ற கதை நிரூபிக்கிறது. ராமன் சம்புகனைக் கொன்றது தேவையற்ற, காரணமற்ற செயல் என்று சிலர் ராமன் மீது குற்றம் கூறுகிறார்கள். ஆனால் இவ்வாறு குறை கூறுவது நிலைமையை முற்றிலும் தவறாகப் புரிந்து கொள்வதாகும். ராமராஜ்யம் சதுர்வர்ண முறையை அடிப்படையாகக் கொண்ட அரசு. அரசன் என்ற முறையில் ராமன் சதுர்வர்ண முறையைக் காப்பாற்றக் கடமைப்பட்டிருக்கிறான். எனவே தனது வகுப்பிலிருந்து அத்துமீறி பிராமண வகுப்பினுள் நுழைய முயன்ற சூத்திரனான சம்புகனைக் கொல்வது அவனது கடமையாயிற்று. அதனால்தான் ராமன் சம்புகனைக் கொன்றான். இதிலிருந்து சதுர்வர்ண முறையைப் பராமரிப்பதற்குத் தண்டனை முறை அவசியமாகிறது என்பதும் புலனாகிறது. சாதாரண தண்டனை மட்டும் போதாது, அது மரண தண்டனையாக இருக்க வேண்டும். அதனால்தான் ராமன் சம்புகனுக்கு குறைவான தண்டனை அளிக்கவில்லை. அதனால்தான் மனுஸ்மிருதி, வேதத்தை ஓதுகின்ற அல்லது கேட்கின்ற சூத்திரனின் நாக்கை வெட்ட வேண்டும், காதில் ஈயத்தை உருக்கி ஊற்ற வேண்டும் என்பது போன்ற கடுமையான தண்டனைகளை விதிக்கிறது. சதுர்வர்ண முறையை ஆதரிப்பவர்கள், மனிதர்களை நான்கு வகைகளாகப் பிரிப்பது சாத்தியம் என்றும், இருபதாம் நூற்றாண்டின் நவீன சமூகத்தில் மனுஸ்மிருதி கூறும் தண்டனைகளை மீண்டும் கொண்டு வர முடியும் என்றும் தெளிவுபடுத்துகிறார்.
“ஒரு சட்டம் அல்லது பழக்கம் தவறானது என்று தெரிந்தும், அதைப் புனிதமானது என்று கருதி பின்பற்றுவதுதான் சமூகத்தின் மிகப்பெரிய துரதிர்ஷ்டம்” என்பது அம்பேத்கரின் வாதம். “ஜாதியை ஒழிக்க வேண்டுமானால், ஜாதியைப் போற்றும் சாஸ்திரங்களின் அதிகாரத்தை மக்கள் தூக்கியெறிய வேண்டும்”. மதம் என்பது தனிமனிதனை மேன்மைப்படுத்த வேண்டுமே தவிர, ஒருவனை உயர்ந்தவன் என்றும் மற்றொரு
வனைத் தாழ்ந்தவன் என்றும் பிரிக்கக்கூடாது. மதத்தின் பெயரால் செய்யப்படும் பாகுபாடு, அந்த மதத்தையே மனிதாபிமானமற்றதாக மாற்றுகிறது. ஜாதி ஒழிப்பு என்பது வெறும் சமூகச் சீர்திருத்தம் மட்டுமல்ல, அது மதத்தின் பெயரால் நடத்தப்படும் அடக்குமுறைக்கு எதிரான கலகமுமாகும்.
மனநிலையும் அதிகாரமும்:
ஜாதி ஒழிப்பின் சவால்
ஜாதியை ஒழிப்பது குறித்து அம்பேத்கர் மிகத் தெளிவான பார்வையை முன்வைக்கிறார். ஜாதி ஒழிப்பு என்பது ஏதோ ஒரு சலுகை வழங்குவதல்ல; அது சமூகத்தின் மனநிலையில் ஏற்பட வேண்டிய புரட்சி. ஜாதியால் பயனடையும் மேல் ஜாதியினர், தாங்களாக முன்வந்து இந்த அமைப்பை மாற்ற மாட்டார்கள் என்று அவர் திட்டவட்டமாகக் கூறுகிறார். ஏனென்றால், அதிகாரம் ஒருவரை அந்த அதிகாரத்தைத் தக்கவைக்கத் தூண்டுகிறது.
அம்பேத்கர், “ஜாதி என்பது வெறும் மக்களின் ஒரு தொகுப்பு அல்ல, அது ஒரு மனநிலை” என்கிறார். ஒருவன் தன் ஜாதியை உயர்த்திப் பிடிப்பதன் மூலமே தான் கெளரவமானவன் என்று நம்பும் வரை, அந்த மனநோய் நீங்காது. எனவே, ஜாதியை ஒழிப்பது என்பது ஒடுக்கப்பட்ட மக்களின் கைகளிலேயே உள்ளது. அவர்கள் தங்கள் மீதான அடக்குமுறையை உணர்ந்து, ஜாதி என்ற அடையாளத்தைத் தூக்கியெறிந்து, சுயமரியாதையுடனும் கல்வியுடனும் போராடும்போதுதான் இந்த அமைப்பு ஆட்டம் காணும். “நீங்களே ஓர் அமைப்பிற்குள் உங்களைச் சிறை வைத்துக்கொண்டு, மாற்றத்தை எதிர்பார்ப்பது வீண்” என்று ஜாதி உணர்வைச் சுமந்து கொண்டிருக்கும் ஒவ்வொருவருக்கும் அம்பேத்கர் எழுப்பும் கேள்வி, இன்றும் பொருத்தமானதாக இருக்கிறது.
“ஜாதி என்பது ஹிந்துக்கள் கலந்து உறவாடுவதற்குத் தடையாக உள்ள கற்சுவரோ, கம்பி வேலியோ அல்ல. ஜாதி என்பது ஓர் எண்ணம், ஒரு மனநிலை. எனவே ஜாதியை ஒழிப்பது ஒரு பவுதிகத் தடையை அழிக்கும் செயல் அல்ல; மக்களின் எண்ணத்தில் மாற்றம் ஏற்படுத்தும் செயல். ஜாதி ஒரு தீமையாயிருக்கலாம். மனிதனுக்கு மனிதன், மனிதத் தன்மையற்ற முறையில் நடந்து கொள்வதற்கு அது காரணமாயிருக்கலாம். ஆயினும் ஹிந்துக்கள் ஜாதிமுறையைப் பின்பற்றுகிறார்கள் என்றால் அதற்குக் காரணம் அவர்கள் மனிதத் தன்மை அற்றவர்கள் என்பதோ விபரீத புத்தி கொண்டவர்கள் என்பதோ அல்ல. அவர்கள் ஆழ்ந்த மதப்பற்றுக் கொண்டவர்களாயிருப்பதனாலேயே ஜாதிமுறையைப் பின்பற்றுகிறார்கள். ஜாதிமுறை
யைப் பின்பற்றுவது மக்களின் தவறு அல்ல. ஜாதிமுறையை அவர்கள் உள்ளத்தில் ஊற வைத்திருக்கும் மதத்தைத்தான் இதற்குக் குறை கூறவேண்டும். இது சரியான கருத்து என்றால் நீங்கள் எதிர்த்துப் போராட வேண்டியது ஜாதிமுறை
யைப் பின்பற்றும் மக்களை அல்ல; ஜாதியைப் போற்றுகின்ற மதத்தைக் கற்பிக்கும் சாஸ்திரங்களைத்
தான் நீங்கள் எதிர்க்கவேண்டும். சமபந்தி போஜனம்
செய்யாதவர்களையும், கலப்பு மணம் செய்யாதவர்
களையும் கண்டித்தும் கேலி செய்தும் பேசுவதோ, அவ்வப்போது, சமபந்தி போஜனங்களும் கலப்பு
மணங்களும் நடத்துவதோ ஜாதியை ஒழிக்கும் நோக்கம் நிறைவேற உதவாது. சாஸ்திரங்கள் புனிதமானவை என்ற நம்பிக்கையை ஒழிப்பதே
இதற்குச் சரியான வழியாகும். மக்களின் நம்பிக்கை
களையும் கருத்துகளையும் சாஸ்திரங்களே உருவாக்கும் நிலை தொடர அனுமதித்தால் உங்கள்
நோக்கம் எப்படி நிறைவேறும்? சாஸ்திரங்களின் அதிகாரத்தை எதிர்க்காமல், சாஸ்திரங்களைப் பின்பற்றி மக்கள் செய்யும் செயல்களை மட்டும்
குறை கூறுவது பொருத்தமற்றது. சாஸ்திரங்கள் மூலம் மக்களின் மனதில் ஊறிப்போயிருக்கும் நம்பிக்கைகள்தான் அவர்களின் செயல்களுக்
கெல்லாம் காரணம்: சாஸ்திரங்கள் புனிதமானவை என்ற நம்பிக்கை ஒழியாதவரை அவற்றை அடிப்படையாகக் கொண்ட நடத்தைகளில் மாற்றம் ஏற்படாது” என்று ஜாதி ஒழிக்கும் வழியை நுட்பமாக ஜாதி ஒழிக்கும் வழி நூலில் கூறுகிறார்.
ஜனநாயகம் மற்றும் மனிதநேயம்
ஜாதி ஒழிப்பு என்பது வெறும் சமூகப் பணி
மட்டுமல்ல, அது இந்திய ஜனநாயகம் தழைப்பதற்
கான முதல் கட்டமாகும். சமத்துவம், சுதந்திரம் மற்றும் சகோதரத்துவம் ஆகிய மூன்று கொள்கை
களுக்கும் ஜாதி நேர்எதிரானது. ஜாதி இருக்கும் வரை ஒரு தேசமாக நாம் ஒன்றிணைவது சாத்திய
மற்றது. மனிதநேயம் மறுத்து போகும் மையக் குவியலின் இடமாக ஜாதி உள்ளது. ஜாதி ஒழிப்பின் மூலம் மட்டுமே, மனிதன் தன் பிறப்பால் மதிக்கப்படாமல், தன் குணத்தாலும் அறிவாலும் மதிக்கப்படும் ஒரு சூழல் உருவாகும்.
ஜாதி ஒழிப்பு என்பது மிக நீண்ட போராட்டமாகும். ஆனால், ஜாதி என்ற பிடியிலிருந்து விடுபடுவது ஒவ்வொருவரின் கடமையாகும். ஜாதியை வெறும் மரபாகக் கருதாமல், அதை ஒரு சமூக நோயாகக் கருதி அதை அகற்றுவதே, அம்பேத்கர் கனவு கண்ட சமத்துவ இந்தியாவிற்கு நாம் செய்யும் உண்மையான மரியாதை. மனிதனை முழு மனிதனாகக் கருதும் ஒரு ஜனநாயகச் சமூகத்தை உருவாக்க, ஜாதி என்ற சுவரை இடிப்பது காலத்தின்
கட்டாயமாகும். அடுத்த தலைமுறையும் சம்பிரதாயம்,
மரபு, பழக்க வழக்கம், குடும்ப வழக்கம் என்று ஜாதிக்கு அச்சாரமிடும் பழக்கத்தை ஒழித்து பகுத்தறிவு வழியில் செல்வோம்.
ஜாதி புனிதமானது என்ற எண்ணத்தை மக்கள் மனதில் பதிய வைத்திருக்கும் மதம்தான் எல்லாக் கேடுக்கும் மூலகாரணம் என்று இந்துக்களிடம் கூற
வேண்டும். இதற்கு உங்களுக்குத் தைரியம் இருக்
குமா? எனும் அம்பேத்கரின் கேள்விக்கு பதிலுரை
யாய் எழுதுவோம் ஜாதிய ஹிந்து மதத்தை அழித்
தொழிக்க நாங்கள் தயார் என்று…. ஹிந்து மதத்தைக் காக்கும் நூல்களை ஒழிக்க ‘ஜாதியை ஒழிக்கும் வழி’ நூலைப் படிப்போம் பரப்புவோம்!




