1) கே: பி.ஜே.பி.யுடன் சேரவே காங்கிரசைத் தி.மு.க. கடுமையாக விமர்சிக்கிறது என்ற காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம்தாகூரின் குற்றச்சாட்டை எப்படிப் பார்க்கி
றீர்கள்?
– க. ஹேமந்த், ஏர்வாடி
ப: வடிகட்டிய பொய் – திட்டமிட்டே பரப்பப்படும் விஷமச் செய்தி Disinformation! கேரளத்தில் பா,ஜ.க.
வோடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ரகசியக் கூட்டு வைத்திருக்கிறது என்று ராகுல்காந்தி சொன்னது போல!
2) கே: தமிழ்நாட்டில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி என்று ஒன்று தற்போது இல்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
யின் தலைவர் பெ.சண்முகம் கூறியுள்ளது சரியா?
– ந. முகிலன், சேந்தமங்கலம்
ப: அதிசயம்! ஆனால், நம்பத்தான் வேண்டும்! இரயில் சிநேகிதம் தானா?
3) கே: ‘இந்தியா’ கூட்டணி உருவாக்கப்
பட்ட காரணத்தால் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. பெரும்பான்மை பெறமுடியாமல்
வலுக் குறைந்தது. எனவே, பா.ஜ.க. ஆட்சியை அகற்றி இந்தியாவைக் காக்க எதிரணியின் வலிமையை அதிகரிக்க சரியான வழி என்ன?
– ப. சந்திரசேகரன், கடம்பூர்
ப: 9.6.2026ஆம் தேதி
யிட்ட ‘விடுதலை’ நாளேட்டில்
விரிவான விளக்கம் உள்ளது. படியுங்கள் தோழரே!
ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றி பெற வாய்ப்புள்ள கட்சியின் வேட்பாளரை ‘பொது எதிரியை வீழ்த்த’ நிறுத்திடும் ஒரு திட்டத்திற்குப் பா.ஜ.க. – ஆர்.எஸ்.எஸ். எதிர்ப்பாளர்களை ஒருங்கிணைக்க வேண்டும்; ஆனால் காங்கிரஸ் கட்சியின் இளந்தலைமை இதை உணர்ந்ததாகவோ, புரிந்துகொண்ட
தாகவோ தெரியவில்லையே!
4) கே: இடது கம்யூனிஸ்ட் கேரளாவில் காங்கிரசுடன் கடும் எதிர்ப்பில், காழ்ப்பில் இருந்தாலும் ‘இந்தியா’ கூட்டணியில் நீடிப்பது போல, தி.மு.க. காங்கிரசுடன் கடும் எதிர்ப்பில் இருந்தாலும் ‘இந்தியா’ கூட்டணியில் நீடிக்கலாமா?
– சு. ஆசைத்தம்பி, மொரப்பூர்
ப: தி.மு.க. சுயமரியாதை இயக்கத்தின்
வார்ப்படம்! உணர்த்த வேண்டியவர்
களுக்கு உறைக்கும்படிச் செய்ய வேறுவழியில்லை.
5) கே: நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு கூட்டணியும், சட்டமன்றத் தேர்தலில் வேறு கூட்டணியும் அமைத்தால் தீர்வு ஏற்படுமா?
– தே. லதா பிளாரன்ஸ், செய்யூர்
ப: நல்ல யோசனைதான்; அத்தைக்கு மீசை முளைக்கட்டும்; அப்புறம் ‘சித்தப்பா’ என்று அழைக்கலாம்!
6) கே: “கரப்பான் பூச்சி ஜனதா பார்ட்டி” செயல்பாடுகளை எப்படிப் பார்க்கிறீர்கள்?
– த. அய்யப்பன், மயிலாடுதுறை
ப: ஊழல் ஒழிப்பு முகமூடியை மட்டும் வைத்து அவர்களது சுயஉரு
வத்தைப் பார்க்கத்தவறி, ஏமாந்து
விடக்கூடாது! சந்தர்ப்பவாத நாடகமாடிடும் சமூகநீதிக்கு எதிரான கூட்டமா என்பதைப் பார்க்கவேண்டும்.
ஊழல் ஒழிப்பை, மற்ற உண்மையான போர் வீரர்கள் கையில் எடுத்து
விடக்கூடாது என்பதற்காகவே வேஷம் போடும் வினையாளர்களா என காலம் சொல்லும். எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.
7) கே: தங்கள் கட்சியின் ஓர் உறுப்பினர் அமைச்சராவதால், அவர் சார்ந்த ஒட்டுமொத்தச் சமுதாயமும் அதிகாரம் பெறுவதாய் கருதுவது அறியாமை
தானே! அச்சமுதாயம் முழுமையும் அதிகாரம்பெற, உயர்வுபெற போராடுவதுதானே சரியாக இருக்கமுடியும்?
– வி.வேலாயுதம், பரமக்குடி
ப: கேள்வியும் நீங்களே, பதிலும் நீங்களே – நன்றி!
8) கே: மாநிலத்தின் ஆளுநர் தான் சார்ந்த ஒன்றிய அரசின் கொள்கைகளைத் தன் மாநிலத்தில் திணிப்பது சட்டப்படி சரியா? தப்பு என்றால் நீதிமன்றத்தில் தீர்வு பெறலாமா?
– எம்.தண்டபாணி, பொள்ளாச்சி
ப: உருட்டைக்கு நீளம். புளிப்பில் அதற்கு அப்பன் என்ற கதைதான்!
9) கே: அண்ணாமலையின் புதிய கட்சி ஆர்.எஸ்.எஸ்.இன் புதிய முயற்சி என்ற கணிப்பு சரியா?
– எஸ்.சரஸ்வதி, அய்யப்பன்தாங்கல்
ப: ‘விடுதலை’(7.6.2026)யில் வெளி
வந்துள்ள செய்தி
யாளர் சந்திப்புப் பதிவே இதற்கு விளக்கமான பதில் – படித்துக் கொள்ளவும். {
