Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

ஞானசூரியன்

‘க

ுடிஅரசு’ பதிப்பகம் தொடங்கப்பட்டு, 1929ஆம் ஆண்டு முதல் வெளியீடாக ‘ஞானசூரியன்’ என்னும் சிவானந்த சரஸ்வதி எழுதிய புத்தகம் வெளிவந்தது. 150 பக்கங்களைக் கொண்ட இந்நூலின் விலை 4 அணா மட்டுமே.

கானாடுகாத்தான் வயிசு.சண்முகனார் அவர்களால் ‘ஞானசூரியன்’ நூல் 1928ஆம் ஆண்டு இறுதியில் வெளியிடப்பட்டவுடனேயே அது குறித்து வைதீகபுரி அலற ஆரம்பித்துவிட்டது.

அந்நூலின் மீது புகார் அளித்தது, அதன் பேரில் விசாரணை நடந்தது தொடர்பான செய்திகள் இதோ:

“ராமநாதபுரம் ஜில்லாக் கலெக்டர் கனம் மாக்வீன் அவர்களிடமிருந்து ‘ஞானசூரியன்’ நூல் பற்றி தேவக்கோட்டை சப்-டிவிஷனல் ஆபிசருக்கு ஒரு ரிப்போர்ட் வந்திருக்கிறது. அதாவது:

சிவானந்த சரஸ்வதியால் எழுதப்பட்டு, காரைக்குடி ‘ஊழியன்’ அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்பட்ட ‘ஞானசூரியன்’ என்ற புத்தகம்.

மேற்குறித்த ‘ஞானசூரியன்’ புத்தகம் (கானாடுகாத்தான் வயிசு.சண்முகம் செட்டியாரால் காரைக்குடி ஊழியன் அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்பட்டது.) அதன் பிரதி ஒன்று இத்துடன் வருகிறது. மேற்படி புத்தகத்தைப் படித்துப் பார்த்ததில் விளக்கமில்லாத பாஷை அதில் எழுதப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. (குறிப்பிட்ட பக்கங்களுக்கு நகல் இத்துடன் வருகிறது).

அதோடு அந்தப் புத்தகம் பொதுஜனங்
களிடையில் அடிப்படையான பகைமையும் உண்டாக்கக் கூடியதாகவுமிருப்பதாகத் தெரிகிறது. அச்சிட்டோரிடமும், வெளியிட்
டோரிடமும் காரணங்கேட்டு குறிப்புடன் (Remarks உடன்) அனுப்பி வைக்கவும்.

விளக்கமில்லாத பாஷைகள் கண்டுள்ள பக்கங்கள் 66, 67, 87, 88, 115, 116, 118, 119.

மேற்குறிப்பிட்ட ரிப்போர்ட்டுக்குக் காரணம் கூறும்படி திருப்பத்தூர் (தற்போது சிவகங்கை மாவட்டம்) மாஜிஸ்ட்ரேட்டிடமிருந்து வந்த சம்மனுக்கு ஆஜராகி திரு. வயிசு. சண்முகம் செட்டியாரவர்களால் எழுதிக்கொடுத்த (Explanation) சமாதானம் வருமாறு:-

தங்கள் முன் ஆஜராகும்படி நேற்று எனக்குக் கிடைத்த சம்மனுக்கு நான் தங்களிடம் நேற்று ஆஜராகி நேரில் தாங்கள் கூறியபடி சம்மனில் கண்ட “ஞானசூரியன்” என்ற புத்தக சம்பந்தமாக இந்த விவரம் தங்கட்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.

புத்தகத்தினுடைய நோக்கம் எந்தவிதமான பகைமையும் வைத்ததில்லை.

மலையாளத்தில் பிறந்து சமஸ்கிருத பயிற்சிப் பெற்ற சுவாமி சிவானந்த சரஸ்வதி என்ற ஒரு சந்நியாசியால் எழுதப்பட்ட தனியான ஆராய்ச்சி நூல் இது.

அவர் சமஸ்கிருதத்திலும், மலையாளத்திலும் மிக்க பழக்கமுள்ளவர்.

அவர் வடநாட்டில் படிப்பை அபிவிருத்தி செய்து கொண்டவர். ஆகையால் தமிழ் பாஷையில் அவருக்கு சிறு பழக்கமே உண்டு.

இன்னும் இருக்கிறது.

(நூல்: தந்தை பெரியாரின் புத்தகப் புரட்சி ப:19. ஆசிரியர் கி.வீரமணி)