கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை
யிலிருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் கடற்பகுதி CRZ-IVA எல்லைக்குள் 4 ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க இந்துஸ்தான் ஆயில் நிறுவனம் முடிவு. இத்திட்டத்திற்கு CRZ அனுமதிகோரி தமிழ்நாடு கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்திடம் விண்ணப்பம் செய்துள்ளது. அந்நிறுவனம் செயல்பட்டு வரும் கிணறுகளில் எண்ணெய் இருப்பு குறைந்ததால் மேற்கொண்டு 4 கிணறுகள் அமைக்க இந்துஸ்தான் ஆயில் நிறுவனம் முடிவு செய்துள்ளது. கடல் பகுதிகளில் ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்கும் செயல்பாடு மிகுந்த சூழல் தாக்கம் உடையது. இது கடல்வாழ் உயிரினங்களுக்கு பெரும் ஆபத்தை விளைவிக்கும். கடல் பகுதிகளின் வெப்பம் அதிகரித்து அதன் சமநிலை சீர்குலைந்துள்ள நிலையில் இதுபோன்ற திட்டங்கள் கடற்பகுதி இயற்கை வளங்களை அழிக்கும். மீனவர்களின் வாழ்வாதாரமும் கடுமையாகப் பாதிக்கும். 2025இல் தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு கடற்பகுதியில் அமைக்கப்படும் ஹைட்ரோகார்பன் கிணறுகளுக்கும் எதிரானதாகவே இருந்தது. அதே நிலைப்பாட்டைத் த.வெ.க. அரசும் எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம். இத்திட்டத்திற்கான CRZ அனுமதி விண்ணப்பத்தைத் தமிழ்நாடு கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் பரிந்துரைக்கக் கூடாது எனக் கோருகிறோம்.
– பூவுலகின் நண்பர்கள்…
