| த |
மிழ்நாட்டில் புதிய அரசு பொறுப்
பேற்கும் முன்பே ஒன்றிய அரசின் கல்வித் துறை சார்பில் தமிழ்நாடு
தலைமைச் செயலாளருக்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டி
ருந்தது. ஒன்றிய அரசின் பி.எம்.ஸ்ரீ பள்ளிகளுக்கு உடனே அனுமதி வழங்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மாணவர் பிரிவான ஏ.பி.வி.பி அமைப்பினர் முதலமைச்சரை நேரில் சந்தித்து பி.எம்.ஸ் ரீ பள்ளிகளுக்கு அனுமதி தர வேண்டும் என்று வேண்டுகோள் வைத்துவிட்டு வெளியில் வந்து முதலமைச்சர் ஆகக் கூடிய சாதக பாதகங்களை ஆய்வு செய்து செயல்படுத்துவதாக கூறி இருக்கிறார் என்று தெரிவித்திருக்கின்றனர்.
இந்த நிலையில் பி.எம்.ஸ் ரீ (PM SHRI) பள்ளிகளுக்கு அனுமதி தரக்கூடாது என்று தமிழ்நாடு முழுவதும் கடும் கண்டனம் எழுந்துள்ளது. அதனை எதிர்ப்பதற்கான முக்கியமான செய்திகள், வரலாற்றுப் பின்னணிகள் பற்றி மீண்டும் மக்களிடம் பரப்ப வேண்டியது கட்டாயம் ஆகிறது.
இந்திய அரசமைப்பு அமலுக்கு வந்தபோது கல்வி முழுமையாக மாநிலப் பட்டியலில் இடம் பெற்றது. அதற்கான முக்கியக் காரணம் கல்வி என்பது மொழி, பண்பாடு போன்றவற்றுடனும் எளிய மக்களுக்கு வழங்கிட வாய்ப்பதாக இருக்க வேண்டும் என்பதிலும் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் ஆகும்.
இந்த நிலையில் 1976ஆம் ஆண்டு
அவசரநிலை பிரகடனப்
படுத்தப்பட்ட காலத்தில் மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு செல்லப்
பட்டது. அதற்கு பின்னணியில் கல்வி அனைவருக்கும் சமூகநீதிக்கு எதிரான சக்திகள் இருந்தன. மேலும், அண்ணா அவர்களின் ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட இருமொழி சட்டம் ஒன்றிய ஆதிக்கவாதிகளின் ஹிந்தித் திணிப்புக்கு எதிராக இருந்தது. எனவே கல்வியை ஒத்திசைவுப் பட்டியலுக்குக் கொண்டு சென்றனர்.
இந்த நிலையில் ஒத்திசைவுப் பட்டியலுக்கு கல்வி சென்ற பின் தங்கள் ஹிந்தித் திணிப்பை நிகழ்த்திட வசதியாக நவோதயா பள்ளிகளை நடத்திட ஒன்றிய அரசு முன்வந்தது. 1985இல் அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி, நாடு முழுவதும் உள்ள பின்தங்கிய மக்களுக்கு தரமான கல்வியை அளிக்கும் என்று கூறி ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு பள்ளிக்கூடத்தைத் துவங்க உத்தேசித்தார்.
1986ஆம் ஆண்டின் தேசியக் கல்விக்
கொள்கையில் இந்தத் திட்டம் உள்ளடக்கப்
பட்டது. ஹரியானாவிலும், மகாராஷ்டிராவிலும் முதல் இரண்டு பள்ளிக்கூடங்கள் துவங்கப்
பட்டன. ஆனால், தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு வந்தது. காரணம் இந்தமுறை தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் நிலவி வந்த சமத்துவத்தைக் கெடுப்பதுடன் ஒன்றிய அரசின் கல்வித் திட்டத்தையும் மொழிக் கொள்கையையும் திணித்தது.
அதே நிலையில்தான் தேசியக் கல்விக் கொள்கையின் ஒரு பகுதியாக பி.எம்.ஸ் ரீ பள்ளிகள் திணிக்கப்படுகிறது. இதனை அரசும், கல்வியாளர்களும், மக்களும் ஏற்கவில்லை. பி.எம்.ஸ் ரீ (PM SHRI) திட்டத்தில் தமிழ்நாடு இணையாததால், மத்திய அரசு “சமக்ரா சிக்ஷா” (Samagra Shiksha) திட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய நிதியை நிறுத்தியதாக தகவல்கள் வெளியாகின.
2024–25ஆம் நிதியாண்டிற்கு தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட வேண்டிய தொகை சுமார் 2,151 கோடி என்று மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்தது. நிதி மறுப்பு மூலம் மாநிலங்களைக் கட்டாயப்படுத்துவது கூட்டாட்சிக்கு எதிரானது. PM Shri திட்டத்தை ஏற்றால் நிதியை விடுவிப்பதாக ஒன்றிய அரசு தெரிவித்த நிலையில் அன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் திராவிட மாடல் நாயகர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நீங்கள் பத்தாயிரம் கோடி தருவதாக இருந்தாலும் எங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சிதைக்கும் இந்தச் சதிகார கல்வித் திட்டத்திற்கு நாங்கள் ஒப்புக் கொள்ள மாட்டோம் என்று உறுதியாக நின்றார். அப்படி இந்தத் திட்டத்தினை எதிர்க்க என்ன காரணம்?
தமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கைக்கு எதிரான திட்டம்:
தமிழ்நாடு எப்போதும் “தமிழ் + ஆங்கிலம்” என்ற இருமொழிக் கொள்கையைப் பின்பற்றி வருகிறது. 1937, 1948, 1965 ஆண்டுகளில் மூன்றாவது மொழியாக ஹிந்தியைத் திணிக்க முயற்சி செய்தாலும், அதை எதிர்த்துப் போராடி வெற்றி பெற்றது. 1967இல் ஆட்சிக்கு வந்த அறிஞர் அண்ணா அவர்கள் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக அரசு இனி இருமொழி தான் மாநிலத்தின் கொள்கை என்பதைச் சட்டப்பூர்வமாக அறிவித்தது. எனவே தான், நவோதயா கல்வித் திட்டத்திற்கு தமிழ்நாட்டில் அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால் PM SHRI திட்டம் தேசியக் கல்விக் கொள்கை (NEP 2020) உடன் இணைக்கப்படுவதால், மூன்றுமொழிக் கொள்கை மறைமுகமாக திணிக்கப்படும். இது தேவையற்ற சுமையைத் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு தருவதுடன் ஹிந்தியைத் தாய்மொழியாகக் கொண்ட வட இந்திய மக்களுக்கு அனுகூலமானதாகவும் சலுகை அளிப்பதாகவும் இருக்கும்.
மூன்றாவதாக, ஏதேனும் ஓர் இந்திய மொழியைக் கற்கலாம் என்று அவர்கள் பசப்பு வார்த்தை பேசினாலும் அதற்கான வாய்ப்பு இல்லை என்பதும், இன்றைக்கு மட்டுமே முக்கியத்துவம் தருகிறார்கள் என்பதும், கடந்த காலத்தில் நாம் உணர்ந்துள்ள உண்மைகள் இந்த வரலாற்று நினைவுகளால், “மூன்றாவது மொழி என்றால் அது இறுதியில் ஹிந்திதான் ஆகிவிடும்” என்ற அச்சம் இன்னும் நிலவுகிறது.
மூன்றாவது மொழியைக் கற்பிக்க ஆசிரியர்கள், புத்தகங்கள், பயிற்சி ஆகியவை தேவைப்படும். இது மாணவர்களுக்கு கூடுதல் சுமையாகவும், மாநிலத்திற்கு கூடுதல் செலவாகவும் மாறுமல்லவா?
மாநில உரிமையில் மத்திய அரசின் தலையீடு:
கல்வி என்பது ஒத்திசைவுப் பட்டியலில் இருந்தாலும், ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனித்த கல்வி அடையாளம் இருக்கிறது. அதுபோல் தமிழ்நாட்டின் கல்விக்கு தனித்த முற்போக்கு அடையாளம் உண்டு. இந்த நிலையில் PM SHRI திட்டம் ஒன்றிய அரசின் தேசியக் கல்விக் கொள்கையான மதவாதக் கல்விக் கொள்கையைத் தமிழ்நாட்டிற்கும் கட்டாயப்படுத்தும் கருவியாக மாறுகிறது. எனவே, தமிழ்நாட்டின் வரலாற்றைத் தமிழ்நாட்டின் புவியியலைத் தமிழ்நாட்டின் சமூகச் சூழலில் தமிழ்நாட்டின் வளங்களை மாணவர்கள் அறிவதில் தேக்கம் ஏற்படும்.
தமிழ் உலகின் பழமையான செம்மொழி
களில் ஒன்று. தமிழ்நாட்டின் மொழிக் கொள்கை என்பது வெறும் கல்விக் கொள்கை அல்ல; அது மொழி, பண்பாடு, இன அடையாளம் சார்ந்த அரசியல் நிலைபாடு அல்லவா? இத்திட்டத்திற்கு ஒன்றிய அரசின் பங்காக 60% நிதியும் மாநில அரசின் பங்காக 40% நிதியும் செலவிடப்படுகிறது. ஆனால், இதன் அதிகாரம் முழுமையாக ஒன்றிய அரசிடம் மட்டுமே உள்ளது. எனவே, மாநில அரசுகள் தம் சொந்த நிதியை 40% செலவு செய்து ஒன்றிய அரசின் கல்விக் கொள்கையை அமல்படுத்த வேண்டியுள்ளது.
ஏற்கனவே, இருமொழி கல்வித் திட்டத்தாலும், கட்டமைப்பாலும் தமிழ்நாட்டின் கல்வி முறை சிறப்பாக
உள்ளது. கல்வித் தரத்தில் இந்தியாவின்
முன்னணி மாநிலங்களில் ஒன்றாக
உள்ளது. அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதமும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தமிழ்நாட்டின் மாணவர்கள் இரு மொழித்திட்டத்தால் கிடைத்த ஆங்கில மொழியறிவால் உலகமெங்கும் கோலோச்சுகிறார்கள். இதனை முடக்கும் முயற்சியே மும்மொழித் திட்டம்.
இந்தியா பல மொழிகள், பல பண்பாடுகள் கொண்ட நாடு. எல்லா மாநிலங்களுக்கும் ஒரே மாதிரியான கல்விக் கொள்கையைத் திணிப்பது கூட்டாட்சி உணர்விற்கு எதிரானது என்பதை மீண்டும் மீண்டும் உணர்த்திப் போராடி வருகிறோம்.
நம் உரிமைப் போர் வெல்லும்! அதனை வரலாறு சொல்லும்! w
