Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

ஏழரை நாட்டுச் சனிஅறிவியல் உண்மையா?-தொகுப்பு : இறைவி

இன்றைக்கு அறிவியலால் கண்டுபிடிக்கப்பட்ட ஒன்பது கோள்களையும் அன்றைக்கே நவகிரகம் என்று நம் முன்னோர்கள் வழிபட்டு வந்தார்கள் என்று சொல்லக் கேள்விப்பட்டிருப்போம். இல்லை படித்திருப்போம். ஆனால், நவகிரகம் என்பது வேறு! சோலார் சிஸ்டம் என்று சொல்லக்கூடிய சூரியக் குடும்பம் என்பது வேறு! சூரியக் குடும்பம் என்பது ஹீலியோ சென்ட்ரிக்! நவகிரகம் என்று இவர்கள் அழைப்பது ஜியோ சென்ட்ரிக்!

சரி, இந்த ஏழரை சனி, சனிப்பெயர்ச்சி என்பதன் அறிவியல் பின்னணி என்ன என்பதைத் தெரிந்து கொள்வோம்.

அறிவியலில் சொல்லப்படும் ஒன்பது கோள்களுக்கும், ஜாதகத்தில் வரும் நவகிரகங்களுக்கும் பல வித்தியாசங்கள் இருக்கின்றன. அறிவியல்படி சூரியக் குடும்பம் என்பது சூரியனை மய்யமாக வைத்து ஒன்பது கோள்கள் சுற்றி வரும் ஹீலியோ சென்ட்ரிக் தியரியை மய்யப்படுத்தியது. ஆனால், நவகிரகம் என்பது பூமியை மய்யமாக வைத்து ஒன்பது கோள்கள் சுற்றி வருகிறது என்ற ஜியோ சென்ட்ரிக் தியரியை மய்யப்படுத்தியது. ஜியோ சென்ட்ரிக்கில் நவகிரகங்கள் என்று சொல்லப்படுபவை எவை என்றால் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது !

இந்த நவகிரகத்தில் சூரியனும் இருக்கின்றது. ஆனால் அறிவியல்படி, அது ஒரு நட்சத்திரம். ஆனால் கிரகம் என்று சொல்கிறார்கள். இந்த நவகிரகத்தில் சந்திரனும் இருக்கின்றது. சந்திரனை அறிவியல் படி பூமியின் துணைக் கோள் என்று சொல்கிறார்கள். ஆனால், இதனை இவர்கள் ஒரு கிரகமாகவே கருதுகிறார்கள். ராகு, கேது இரண்டுமே நிழல் கிரகங்கள் என்று சொல்கிறார்கள். ராகு, கேது என்னும் கிரகங்கள் அறிவியல்படி கிடையாது.

சரி! அடுத்து சனிப் பெயர்ச்சி, ஏழரை சனி இவற்றைப் பற்றி தெரிந்து கொள்ளலாம். ஒரு கிரகம் தன்னைத் தானே சுற்றிக் கொண்டு சூரியனையும் முழுதாகச் சுற்றிவர ஆகும் காலத்தை ஓர் ஆண்டு என்று சொல்கிறோம். பூமியைப் பொறுத்தவரை ஓர் ஆண்டு என்பது 365 நாள்கள். இந்த 365 நாளில் பூமி முதல் நாள் எங்கு ஆரம்பித்ததோ சூரியனை முழுதாக சுற்றி அதே இடத்துக்குத் திரும்பி வந்து நிற்க ஆகும் காலம்தான் 365 நாள்கள். இது ஒவ்வொரு கிரகத்துக்கும் வேறுபடும். புதன் கிரகம் 88 நாளில் சூரியனை முழுதும் சுற்றி வந்துவிடும். அதுபோல சனி கிரகம் சூரியனை முழுதும் சுற்றிவர, கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் தேவைப்படும். இந்த 30 ஆண்டுகளை ஒவ்வொரு ராசிக்கும், அதாவது ஒரு கட்டத்துக்கும் பிரித்தால் இரண்டரை ஆண்டுகள். ராசிக் கட்டத்தில் ஒவ்வொரு கட்டத்திலும் சனி பயணிப்பதற்கு இரண்டரை ஆண்டுகளாகும். அதைத்தான் சனிப்பெயர்ச்சி என்கிறார்கள்.

எடுத்துக்காட்டுக்கு ஒருவர் ரிஷப ராசிக்காரர் என்று வைத்துக்கொண்டால், அவர்களுக்கு முன்னால் இருக்கும் மேஷ ராசி தலை, அவர் ரிஷப ராசி அது உடல், மிதுன ராசி என்பது பாதம்! சனி கிரகம் மேஷ ராசிக்கு வந்துவிட்டால் அவருக்கான சனி ஆரம்பித்து விட்டதாகப் பொருள். ஆக அந்த இரண்டரை ஆண்டுகள் சனியின் துவக்கமாக இருக்கும். ரிஷப ராசிக்கு வரும்போது சனி நேரடியாக உங்கள் ராசியிலேயே உட்கார்ந்து உங்களை ஆட்டுவிப்பார் என்று சொல்வார்கள். மிதுன ராசிக்குச் சென்றால் சனி உங்களை விட்டு அடுத்தக் கட்டத்துக்குப் போனாலும் விட்ட குறை தொட்ட குறை இருக்கும் என்று சொல்வார்கள்.

இனத்தின் மானத்தைக் காக்க எவ்வகைத் துன்பத்தையும் பொறுத்துக் கொண்டு தொண்டாற்றத்தக்க குடிமகன் இல்லாத இனம் வேர்ப்பற்றில்லாத மரம் போல், கோடரி கொண்டு வெட்ட வேண்டிய அவசியம் இல்லாத மரம்போல் தானாகவே விழுந்துவிடும்.” “தன் இனத்திற்கு உண்மையான தொண்டாற்றுபவனுக்கு அடையாளம் என்னவென்றால் இத்தொண்டால் ஏற்படும் இன்னலுக்கும், துன்பத்திற்குமே அவனது வாழ்வையும், உடலையும் ஒப்புவித்துவிட்டவனாக
இருக்க வேண்டும்.”

ஆக மொத்தம் இரண்டரை + இரண்டரை + இரண்டரை இந்த மூன்று கட்டங்களுடைய கூட்டுத் தொகைதான் மொத்தம் ஏழரை ஆண்டுகள். இதுதான் ஏழரை சனி என்றும், சனிப்பெயர்ச்சி என்றும் சொல்கிறார்கள். இதனை ஆங்கிலத்தில் The Travelling Time of the Saturn என்று சொல்வார்கள். சனி வந்துவிட்டால் மிகவும் கவலைப்படுகிறார்கள்! அவ்வளவு கவலைப்படத் தேவையில்லை!

சனி வந்து ஆட்டுவித்த பிறகுதான் ஒருவருக்கு மனத் திடமும், கஷ்டத்தில் இருந்து போராடி வெளியில் வரும் குணமும் கிடைக்கின்றது என்று சொல்கிறார்கள். ஏழரை சனியைக் கண்டு மிகவும் அச்சப்படுகிறார்கள். ஜோசியம். ஜாதகம் என்று தேடிச் செல்கிறார்கள். உண்மையில் அப்படி அச்சப்படும் அவர்களுக்காக விவேகானந்தர் சொன்ன முக்கியமான செய்தியைச் சொல்கிறேன் “மனதில், அறிவில் சஞ்சலம் ஏற்படும்போது ஜோதிடம் போன்றவை மேல் ஓர் ஈர்ப்பு ஏற்படும். அப்படி ஏற்பட்டால் உடனடியாக ஒரு நல்ல மருத்துவரை அணுக வேண்டும்! உங்களுக்குத் தேவை நல்ல உணவும், ஓய்வும்!”  w