| “ப |
ி றரைக் குற்றம் சொல்லும்போது மாத்திரம் ‘கள், சாராயம் குடிப்பது கெடுதி என்று தெரிந்திருந்தும் அதைக் குடிக்கிறார்களே, என்ன புத்தி கெட்ட ஜனங்கள்; மானங்கெட்ட ஜனங்கள்’ என்கிறோம், ஆனால், அந்தப் புத்தியும் மானமும் இருக்கிறதா என்பதைப் பார்ப்பவர்கள், நம்மில் 1000க்கு ஒருவரைக்கூடக் காணோம். பார்ப்பனப் பத்திரிகைகள் பார்ப்பன பத்திரிகைக்கு மட்டுமல்ல, நம்முடைய இழிவுக்கும், தாழ்மைக்கும், அழிவுக்கும் நடத்தப்படுகின்றன என்பதனை அறிந்திருந்தும் அதனைப் ‘பணங்கொடுத்து வாங்கிப் படிப்பவர்களுக்குப் புத்தியும் மானமும் இருக்கிறதா என்பதனைக் கவனிப்பதில்லை’ என்றார் தந்தை பெரியார் (குடிஅரசு – 30.01.1927).
அழுத்தம் திருத்தமாக ‘பத்திரிகைகளைப் பார்ப்பனர்கள் தங்கள் ஆதிக்கத்திற்கு மட்டும் நடத்தவில்லை. நம்முடைய இழிவுக்கும் அழிவுக்கும் சேர்த்தே நடத்துகிறார்கள்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.
1930இல் தந்தை பெரியார் சொன்ன கருத்து இன்றைக்கும் அப்படியே பொருந்துகிறது. இன்றைக்குத் தமிழ்நாட்டில் படித்தவர்கள் விழுக்காடு கூடி இருக்கிறது. ஆனால், பகுத்து ஆராய்ந்து நம்முடைய இனத்திற்கு உகந்த பத்திரிகை எது என்பதனை ஆராய்ந்து விலை கொடுத்து வாங்கும் மனப்பாங்கு இன்றைக்கும் இல்லை.
ஒவ்வொரு இனத்திற்கும் தங்கள் இனத்தினை
உயர்த்த வேண்டும் என்ற எண்ணம் இருப்பது
இயல்பு. பார்ப்பன இனத்தைப் பொறுத்த அளவில், அவர்கள் நடத்துகின்ற பத்திரிகை
களின் நோக்கம் என்பது தங்கள் இனத்தை உயர்த்த வேண்டும், தங்கள் இனம் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்பது மட்டுமல்ல, மாறாகத் திராவிடர்களின் இழிவுக்கும் அழிவுக்கும் சேர்த்தே அவர்கள் பத்திரிகையை நடத்துகிறார்கள் என்று 100 ஆண்டுகளுக்கு முன்னால் பெரியார் குறிப்பிட்டு இருக்கிறார். இன்றைக்கும் அவாள்களின் போக்கு சிறிதும் மாறவில்லை. உழைக்கும் மக்களாகிய பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மக்கள், பெண்கள் கல்வி பெறுவதையோ, அவர்கள் உயர் பதவி பெறுவதையோ விரும்பாத பார்ப்பனப் பத்திரிகைகள், அவர்கள் கல்வி பெறாமல் இருக்கவேண்டும் என்பதற்காகப் பல்வேறு சூழ்ச்சிகளைச் செய்கிறார்கள். நம்மை அழிக்க பல்வேறு தந்திரங்களைக் கையாளுகிறார்கள்.
இன்றைக்குப் பத்திரிகைகளையும் தாண்டி சமூக ஊடகங்கள் மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. முகநூல், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்கள் இன்றைக்குப் பல்வேறு பிரிவினர்களால் பயன்படுத்தப்படுகின்றன. அப்படிப் பயன்படுத்துகிறவர்கள், தங்களை இழிவுபடுத்துவது எது? நம்மை அழிப்பதற்கான ஆயுதமாகப் பார்ப்பனர்களுக்கு எது பயன்படுகிறது என்னும் மெய்யறிவைப் பெற்றிருக்கிறார்களா என்றால் இல்லை.
இன்ஸ்டாகிராம், முகநூல், டுவிட்டர் போன்ற சமூக ஊடகங்களில் பரப்பப்படும் ஒரு செய்தி காட்டுத்தீ எனப் பரவுகிறது. அதில் உண்மை எது, பொய் எது என மெய்ப்பொருள் காணும் அறிவு இன்றைய தலைமுறைக்கு இல்லை. ஆனால், அவர்கள் அப்படி இருக்கிறார்கள் என்று நாம் கடந்து போகவும் முடியாது. நம்மைச் சுற்றி இருப்பவர்களோடு நாம் பேசவேண்டும். என்ன நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பதனை நாம் தெரிந்து கொள்ளவேண்டும்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர்
மானமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் தேர்தலுக்குப்
பின் நடந்த கூட்டத்தில், எப்போது நாடாளு
மன்றத் தேர்தல் முடிந்ததோ, நாடாளுமன்றத் தேர்தல் முடிந்தபிறகு நாம் நம்முடைய பணியைத் தொடங்கிவிட்டோம். சட்டமன்றத் தேர்தல் பணியை அப்போதே நாம் தொடங்கி
விட்டோம். மாதம் ஒரு கூட்டம் நடத்தினோம். பூத் கமிட்டி அமைத்தோம். கழக உறுப்பினர்கள் சேர்க்கை பணியைத் தொடங்கினோம். எஸ்.அய்.ஆர். பணியை முடித்தோம். அதற்குப் பிறகு இளைஞர் அணி மண்டல மாநாடுகளை நடத்தினோம். மகளிரணி மண்டல மாநாடுகளை நடத்தினோம். மாணவர்களை எல்லாம் அழைத்து மண்டல மாநாடுகளை நடத்தினோம். ஒவ்வொரு தொகுதிக்கும் பொறுப்பாளர்களை நியமித்தோம்.மண்டல அளவில் சில பொறுப்பாளர்களை நியமித்தோம். இவ்வளவு பணிகளையும் செய்து நாம் ஏன் ஆட்சிக்கு வர முடியவில்லை? ஆனால், எந்தப் பணியும் செய்யாமல் வாக்காளர்களைச் சந்திக்கவில்லை, பூத் செண்டர் அமைக்கவில்லை, இன்னும் சொன்னால் கவுண்டிங் ஏஜண்டுகளைக் கூடப் பல இடங்களில் அமைக்கவில்லை.அப்படிப்
பட்டவர்கள் இன்றைக்கு வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்திருக்கிறார்கள். அது தவறல்ல. ஆனால், சோசியல் மீடியா.சோசியல் மீடியாவில் இருக்கக்கூடிய இன்ஸ்டாகிராம் என்பதைப் பயன்படுத்தி மிக சுலபமாகச் சிறு பிள்ளைகளை, குழந்தைகளை ஈடுபடவைத்து, அவர்களை அவர்களின் பெற்றோர்களிடம், அம்மாக்களிடம், அப்பாக்களிடம், அவர்கள் வீட்டில் இருக்கும் பெரியவர்களிடம் பேசவைத்து, அந்தக் குழந்தைகள் மூலமாகப் பிரச்சாரங்களை நடத்தி,
ஒரு திட்டமிட்ட பிரச்சாரத்தைச் செய்தார்கள். அது நம் கண்களுக்குத் தெரியாமல் போய்விட்டது. ஆனால், நாம் இனிமேல் எச்சரிக்கையாக இருந்து அதையும் முறியடிக்கக்கூடிய வகையில் செயல்படவேண்டும்.
நாம் எடுக்கவேண்டிய ஆயுதம் எது என்பதை
நமது எதிரிகள்தான் முடிவு செய்கிறார்கள்.அவர்கள் இன்றைக்கு இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களைக் கையில் எடுத்திருக்
கிறார்கள். அந்த சமூக ஊடகங்களை மிகப்பெரிய அளவில் நாம் கையில் எடுக்கவேண்டிய தேவை இன்றைக்கு ஏற்பட்டிருக்கிறது.
இன்றைக்கு இன்ஸ்டாகிராம், நாளைக்கு இன்னொன்று இதைப் போல வரலாம். எது வருகிறது,அதனை எப்படி இன்றைக்கு இருக்கிற தலைமுறையினர் கையாளுகிறார்கள் என்பதை நாம் கூர்ந்து கவனித்து செயலாற்ற வேண்டிய அவசியம் இருக்கிறது.
‘விடுதலை’யில் வருகின்ற செய்திகளைப் பகுதிபகுதியாகப் பிரித்து, சின்னச் சின்ன ரீல்ஸ்களாக ஆக்கி இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களில் பகிரவேண்டும் தமிழில்,
ஆங்கிலத்தில், மற்றும் பல மொழிகளில் வர
வேண்டும். ஒரு மொழியில் தயாரித்துவிட்டால், பல மொழிகளில் மொழிபெயர்ப்பது இன்றைய செயற்கை நுண்ணறிவு காலத்தில் எளிதே. தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர், அய்யா ஆசிரியர் அவர்களின் படைப்புகள் எல்லாம் இன்ஸ்டாகிராமுக்குள் வரவேண்டும். சில நிமிடங்கள் மட்டுமே ஓடக்கூடிய அந்த ரீல்ஸ்களை உருவாக்குவது சிலர் என்றாலும் அதனைப் பரப்புவதற்குப் பல்லாயிரக்கணக்கானோர் இணையவேண்டும்.திராவிடத்தால் பலன் பெற்றவர்கள், பதவி பெற்றவர்கள், புகழ் பெற்றவர்கள் எல்லாம் திராவிட இயக்கத்திற்குத் தங்களால் இயன்ற பணியைக் கட்டாயம் செய்ய வேண்டிய காலகட்டம் இது. w
