அண்மையில் சமூக ஊடகங்களில் ஒரு காணொளியைப் பார்க்க நேர்ந்தது. அந்தக் காணொளியில் தண்ணீரில் ஒரு கல் மிதக்கிறது. அதனைத் தூக்கி பக்தர்களின் கைகளில் வழங்குகிறார்கள். கனமான அந்தக் கல் மிதப்பதைப் பார்த்து ஆச்சரியமடைந்த பக்தர்கள் அந்தக் கல்லைத் தொட்டுக் கும்பிடு கிறார்கள். காணிக்கையாகப் பணம் கொடுத்து விட்டு நகர்கிறார்கள். வரிசையாகப் பக்தர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால், பக்தர்களிடம் அந்தக்கல் ராமன் பாலக்கல் என்றும், அந்தக் கல்லைக் கொண்டுதான் அனுமான் ராமன் பாலத்தைக் கட்டினார் என்றும் நம்ப வைத்துள்ளனர் அந்த மோசடி பேர்வழிகள். கல் மிதக்குமானால் ராமன் பாலம் மட்டும் ஏன் தண்ணீரில் மூழ்கிவிட்டது என்று யாரும் கேட்பதில்லை. பக்தி என்றால் புத்தி போய்விடும் அல்லவா? பகுத்தறிவு வேலை செய்யாது அல்லவா? எனவே நம்புகிறார்கள்; கும்பிடுகிறார்கள்; காணிக்கை செலுத்துகிறார்கள்.
ஆனால் அந்தக்கல் ஏன் மிதக்கிறது? வேறொன்றுமில்லை இது பியூமிஸ்கல் (pumice stone) அதாவது புட்ஸ்டோன் என்று அழைக்
கப்படுகிறது. இது ராமேஸ்வரம் கோயிலில் மட்டு
மல்ல உலகம் முழுவதும் குளியலறைகளில் இருக்கிறது. எரிமலை வெடிப்பின்போது உருகிய
‘எரிமலை குழம்புகள்’ அதனுள் சிக்கிக்கொண்
டுள்ள காற்றுக் குமிழ்களுடன் உறைந்து பாறையாக மாறும்போது, இந்தக் கல் உருவாகிறது
என்பதே அறிவியல் உண்மை. எனவே உள்ளே
காற்றுக் குமிழிகள் இருப்பதால் காற்றுக்குமிழுக்
குள் தண்ணீர் நிறையும் காலம் வரை அவை மிதக்கின்றன.
