Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

குங்குமம் – விபூதி பற்றி பிரபல தோல் நோய் மருத்துவர் தம்பையா கூறுகிறார்!

நாற்பது வருடத்துக்கு மேல் நான் ப்ராக்டீஸ் பண்றேன். பதினைந்து வருடங்களுக்கு முன்பிருந்துதான் குங்குமம், விபூதி அலர்ஜியாகிற
பேஷண்டுகள் வர்றது அதிகரிக்க ஆரம்பிச்சது.

நவீன உலகில் குங்குமத்தில் என்னென்ன கெமிக்கல்கள் கலக்கப்படுகின்றன! அவை எப்படி எப்படித் தோலைப் பாதிக்கின்றன என்பது பற்றிப் பெரிய ஆராய்ச்சியே ஆய்வறிக்கைக்கூட, சப்மிட் செஞ்சிருக்காங்க.

கலப்பட விபூதி பற்றியும் இது மாதிரி யாராச்சும் ஸ்டடி பண்ணிக் கண்டுபிடிக்கணும், குங்குமம், விபூதி போன்றவற்றை ஒரு சில குடும்பங்கள் பாரம்பரியமாகத் தயாரித்தன. அதாவது, குடிசைத் தொழில் மாதிரி – இப்ப அது மாறிப் போயிடுச்சு.

இந்த மாதிரி குங்குமம், விபூதி போன்றவற்றால் தோலில் பிரச்சினை ஏற்பட்டு என்னை அணுகுபவர்களிடம், முதலில் குங்குமம், விபூதி இடுவதைத் தற்காலிகமாக நிறுத்தச் சொல்லிவிட்டு, பிறகுதான் சிகிச்சையைத் தொடங்குகிறேன் என்றார். 

– ஆதாரம்: ஜூனியர் விகடன் 26.10.1997