Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

அறிவு நாணயமற்ற செயல்!

1)    கே: விஜய்க்கு ஆட்சியமைக்கும் அளவிற்கு மக்கள் வாக்களிக்
காத நிலையில், அவர் எதிர்த்து விமர்சித்த தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவில் ஆட்சிய
மைப்பது எவ்வகையில் மக்களாட்சி மாண்பாகும்? நாணயமாகும்?

– கே.ராஜ்குமார், தஞ்சாவூர்

      ப:  யார் வரக்கூடாது, எவருடைய ஆதிக்கமோ, ஆட்சியோ தமிழ்நாட்டில் வரக்கூடாது என்ற நோக்கின் அடிப்படையிலும், மற்றுமோர் தேர்தல் உடனடியாக வருவதைத் தடுக்கவும் யதார்த்த நிலை உணர்ந்து சிந்தித்தால், அசாதாரண சூழ்நிலையில் அசாதாரண பரிகாரம் இது.

      அதே நேரத்தில், தி.மு.க.வுடனே இத்தனை ஆண்டுகள் கொள்கை கூட்டணி என்று கூறி பயணித்த ஒரு கட்சி, இதுவரை நாங்கள் வைத்
திருந்தது வெறும் தேர்தல் கூட்டணி தான் என்று சில கலகக்காரர்களை விட்டுக் கூறவைப்பது அறிவு நாணயமற்ற செயல்!

2)    கே: கன்னியாகுமரி, தென்காசி, அரியலூர், மயிலாடுதுறை, நாகப்
பட்டினம், நீலகிரி, திருவாரூர், விழுப்புரம் ஆகிய எட்டு மாவட்டங்
களில் த.வெ.க. ஒரு தொகுதி
யில்கூட வெற்றி பெறாமைக்கு என்ன காரணம்?

– மு.சங்கர், அரியலூர்.

     ப: முழு மெஜாரிட்டி பெற முடியாமல்
திணறி ஆட்சி அமைக்கும் நிலை ஏற்பட்டதே அதனால் தானே!

     தி.மு.க.வுக்கும் வெற்றி பெற்ற த.வெ.க.வுக்கும் வித்தியாசம் பெரிய அளவில் இல்லை என்பதே அதன் காரணமாகத்தான்.

3)     கே: மின்னணு எந்திரங்களில் செய்யப்பட்ட முறைகேட்டால் இப்படிப்பட்ட தேர்தல் முடிவுகள் வருகின்றன என்ற குற்றச்சாட்டில் உண்மை இருக்க வாய்ப்புண்டா? மின்னணு பதிவோடு, வாக்களித்த
போது ஒரு பெட்டியில் சேரும் சீட்டுகளை எண்ணுவதைக் கட்டாயமாக்க முடியாதா?

– ச.தேவகி, கரூர்.

     ப: ஏற்கனவே இதுபற்றி விரிவாக விவாதங்கள் நடைபெற்றது! நிச்சயம் வாய்ப்பு உண்டு. மீண்டும் வாக்குச்சீட்டு முறைக்குத் திரும்ப வேண்டும் என்ற குரல் வலுத்து வருவது அதனால் தான்.

4)    கே: தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின்
உணர்வுபூர்வ ஒத்துழைப்பு இன்மையும், வேண்டா வெறுப்பாக வேலை பார்த்ததும், தி.மு.க. கூட்டணியின் தோல்விக்குக் காரணங்கள் என்பது சரியா?

– அ.ராஜேந்திரன், திருவான்மியூர்.

     ப: இதில் ஓரளவு உண்மை இருக்கலாம். ஆனால், முழுமை
யாக இதை ஏற்கவியலாது!

5)     கே: பெரியாரைக் கொள்கைத் தலைவராக வைத்துக்கொண்டு, ஜோசியக்காரர்களை நம்புவதும், கோயில் கோயிலாக மண்டியிட்டு நகர்வதும் செய்தால், அக்கட்சி
யின் தொண்டர்கள் எப்படி சிந்தனையாளர்களாயும்,
பகுத்தறிவு பார்வை கொண்டவர்
களாயும் ஆக்கப்பட இயலும்?

 – பா.சீனிவாசன், ஏற்காடு.

     ப: வாக்கு வங்கி அரசியலில் உள்ள பிறவிகூறு, குறைபாடு இதுதான்! எனவே தான் நமது கொள்கைப் பிரச்சாரத்தை மேலும் முடுக்கியாக வேண்டும் திட்டம் தயாராகிறது!

6)     கே: ‘இந்தியா’ கூட்டணியின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ள நிலையில், பி.ஜே.பி.க்கு எதிராக ஒரு வலுவான கூட்டணியை இந்தியா அளவில் கட்டமைக்க தங்களைப் போன்றவர்கள் உடனடி முயற்சியில் ஈடுபடுவீர்களா?

 – எல்.மகிழ்மதி, அரவக்குறிச்சி.

     ப: என் உயரத்தை எப்போதும் நினைவில் வைத்துக்கொண்டிருப்பவன் நான் அதனால் அதற்குரியவர்களால் அதற்கு உரிய முயற்சிகள் – வாய்ப்புக்
கிடைக்கும்போது செய்யத் தவறமாட்டேன்.

7)   கே: அ.தி.மு.க., தி.மு.க. இரு கட்சிகளுக்கும் இச்சூழ்நிலையில் தாய்க் கழக தலைவர் என்ற முறையில் தாங்கள் கூறும் வழிகாட்டல், ஆலோசனை என்ன?

 – வை. அவினாஷ், பேரம்பாக்கம்.

     ப: காலச்சூழல் அரசியல் கனிந்து வருவது வருங்காலத்தில் நிச்சயம் நடைபெறும்.

8)   கே: சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் அனுமதிக்கப்பட வேண்டும் என்று
வழக்குத் தொடுத்த இளம் வழக்கறிஞர்
கள் சங்கத்தை உச்சநீதிமன்றம், இந்த வேலை உங்களுக்கு ஏன் என்று சாடியிருப்பது ஏற்புடையதா?

 – த.செல்லப்பாண்டியன், சின்னூர்

      ப: உச்சநீதிமன்றம் கூட சரணம் அய்யா
ஆகிவிடக்கூடாது – என்பதே மதச் சார்பற்ற
கொள்கையாளர்களின் கடமை! |