Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

நுரையீரல் மற்றும் இருதய இயன்முறை மருத்துவம்-இயன்முறை மருத்துவர் ஜோ.இளவேனில்

நீங்கள் மூச்சை உள்ளே இழுக்கும்போது ஆக்சிஜன் நுரையீரல் வரை சென்று அவை இருதயத்திற்குப் பகிரப்பட்டு, நீங்கள் மூச்சை வெளியேற்றும் போது கார்பன் – டை – ஆக்சைடாக வெளியேறுகிறது. இது தான் உடலில் நடக்கும் வாயு மாற்றங்கள். ஆனால், இவையெல்லாம் நடப்பதற்கு ஓர் அடிப்படை செயல்பாடு தேவையல்லவா? அவற்றை அறிவோம் வாருங்கள்.

உங்கள் முதுகெலும்பு கழுத்தில் தொடங்கி இடுப்பில் முடிகிறது அல்லவா? அவற்றில் முதல் ஏழு முடிய அதன் தொடர்ச்சியாக வரும் பன்னிரண்டு முதுகெலும்புகளைச் சூழ்ந்தே விலா எலும்புகள் அமைக்கப்பட்டிருக்கும். இதற்கிடையில் தான் நுரையீரல், இருதயம் எல்லாம் பாதுகாக்கப்படுகிறது. அதோடு, இவ்விரண்டையும் தாங்கி இவற்றோடு, நீங்கள் மூச்சை உள்ளே இழுப்பதற்கும், பிடிப்பது போல “டையபரம்” எனும் தசை அமைந்திருக்கும். வெளியில் விடுவதற்கும் தசைகள் அதற்கேற்ப அமைந்திருக்கும்.

நுரையீரல் விரிந்து டையபரமைக் கீழே தள்ள, அதற்கு ஏற்ப நீங்கள் ஒவ்வொரு முறை மூச்சை இழுக்கும்போது, வயிற்றைச் சுற்றியுள்ள தசைகளும் விரிந்து, நுரையீரலின் விரிதலுக்கு வலுச்சேர்க்கும். அதே போல ஒவ்வொரு முறை மூச்சை வெளிவிடும்போதும் வயிற்றைச் சுற்றி உள்ள தசைகள், கழுத்தைச் சுற்றியுள்ள தசைகள், முதுகுகளில் உள்ள தசைகள் மேலுக்குத் தள்ளி நுரையீரலைச் சுருங்க உதவும். “டையபரம்” என்று எல்லாம் ஒன்று சேர்ந்து இறுகி டையபரமை இருதயத்தின் பெரிகார்டியம் எனும் இடத்தை அழுத்தும்போது அவை இரத்த ஓட்டத்திற்கும், அதோடு இருதயம் மற்றும் நுரையீரல் ஒரு சேர சுருங்கவும், விரியவும் இந்தத் தசைகள் பெரிதும் உதவுகிறது.

சுவாசித்தல் என்பது ஆக்சிஜன் பரிமாற்றம் மட்டும் அல்ல; சுவாசித்தல் என்பது உங்கள் இதயத்தின் செயல்பாடு
களைத் தீர்மானிக்கிறது, உங்கள் இந்தச் செயல்முறையில் ஏதேனும் மாற்றம் நிகழும்போது அவை நாம் சுவாசிக்கும் முறையில் மாற்றங்களைக் கொண்டு வருகிறது. இவை பெரும்பாலும் ஆஸ்துமா, சி.ஒ.பி.டி போன்ற நுரையீரல் பாதிப்புகளால் ஏற்படலாம். இதனையே சுவாச முறைக் கோளாறு என்கிறோம்.

ஏன் இப்படி நடக்கிறது?

உங்கள் தேவையை விட அதிகமாகவோ, அல்லது குறைவாகவோ நீங்கள் சுவாசிக்கும் போது உங்கள் உடலில் உள்ள வேதியல் பரிமாற்றங்களில் மாற்றம் நிகழலாம்.

உங்களின் பன்னிரண்டு முதுகெலும்பு
களில் அசைவுகள் இல்லாமல் போவது, உங்கள் சுவாசத்திற்கு உதவும் தசைகளில் உள்ள அழுத்தம், உங்கள் உடல் அமைப்பில்
உள்ள கோளாறுகள் என்று உங்கள் தசைகள் சார்ந்த பிரச்சனைகளே உங்கள் சுவாச முறைக் கோளாறுகளுக்குக் காரணமாகின்றன.

2018ஆம் ஆண்டு நடந்த ஆய்வில், உங்களின் தொடர்ச்சியான செல்போன், மற்றும் கணினி பயன்பாடுகளால் உங்கள் தலையும், கழுத்தும் அசைவற்று இருப்பது கூட சுவாச முறையில் மாற்றங்களை உண்டாக்கலாம் என்று கண்டறிந்து இருக்கிறார்கள். உங்கள் கீழ் முதுகு வலியும் கூட சுவாச முறைகளில் கோளாறுகளை உண்டாக்கலாம் என்று ஆய்வுகள் சொல்கிறது.

(தொடரும்)