நான் பல்கலைக்கழகத்தின் முதல் மாணவனாகத் தேர்ச்சி பெற்றேன். திருவிதாங்கூர் திவான் சி.பி.ராமசாமி அய்யர் என்னை நீ ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சேர்ந்து உயர்படிப்பு படிக்க வேண்டும், நான் உன்னை அனுப்பி வைக்கிறேன் என்று சொன்னார். அவர் டில்லியில் இருந்து திரும்பியதும் மீண்டும் அவரைச் சந்திக்கும்படி கூறினார். ஆனால், அவர் திரும்பி வந்தபோது, அவர் மனநிலை மாறியிருந்தது. நான் உன்னிடம் சொன்னதை மீண்டும் பரிசீலனை செய்தேன். உன்னை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திற்கு அனுப்புவதற்கு பதில், உனக்கு அரசு வேலை தருகிறேன் என்றார்.
அவருடைய மாறிய இம்மனநிலையைக் கண்டு நான் அதிர்ந்து போனேன். அய்யா, அதற்குப் பதிலாக நீங்கள் எனக்கு விரிவுரையாளர் வேலை கொடுப்பீர்களா? என்று கேட்டேன். அவர் கோபமடைந்து கத்தினார். உன் முகவரி மற்றும் பிற தகவல்களை என்னுடைய உதவியாளரிடம் கொடுத்துவிட்டுப் போ என்றார். பல்வேறு பிரச்சினைகளுக்கும் காரணம் ஜாதிதான் என்பதை நான் உணர்ந்தேன்.
பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் பாதுகாவலர் ஒருவருடன் நான் மாலையில் நடைப்பயிற்சியின் போது சந்தித்து உரையாடுவேன். ஒரு நாள் அவர் என்னைப் பார்த்துக் கேட்டார். திவான் என்ன சொன்னார்? அவர் உனக்கு உதவுவதாக இல்லை என்று கேள்விப்பட்டேன். திவான் இப்படிச் சொன்னார்: சில்க் ஜிப்பா, தங்கக் கடிகாரத்துடன் என்னை வந்து சந்தித்த அந்த அரிஜன பையன் யார்? நான் சொன்னேன்; அய்யா, என்னிடம் சில்க் ஜிப்பா இல்லை. அது எனக்குச் சொந்தமானதும் அல்ல. நான் காதி உடை மட்டுமே அணிவேன். நான் காந்தியாரைப் பின்பற்றுகிறேன். இந்த கடிகாரம் தங்கம் அல்ல. தங்க முலாம் பூசப்பட்டது. இதை ஒருவர் எனக்கு அன்பளிப்பாகக் கொடுத்தார். திவான் இப்படி ஓர் அற்புதமான மனிதராக இருப்பார் எனில், அவரிடமிருந்து எனக்கு எந்த உதவியும் வேண்டாம்.
என்னுடைய வாழ்க்கையில் அது ஒரு துயரமான காலகட்டம். என்னுடைய இரு அண்ணன்களும் தொடர்ந்து காச நோயால் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டனர். மிகவும் துன்பகரமான நாட்கள் அவை. அநீதியைக் கண்டு எப்போதும் நம் ரத்தம் கொதிக்கும். கோபத்தையும் துயரத்தையும் நாம் கட்டுப்படுத்த முடியாது. உனக்கு இழைக்கப்பட்ட அநீதியைக் கண்டு நீ கோபப்படவில்லையா? என்றார் அவர். திவான் என்னை நிலைகுலையச் செய்துவிட்டார். நான் கோபமடைந்தேன். நான் ஒரு தாழ்த்தப்பட்டவன் என்பதால்தான்
அவர் என்னிடம் அப்படி நடந்துகொண்டார்.
நான் காந்திய வழியில் ஈர்க்கப்பட்டிருந்த
தால், நான் அவரிடம் வெறுப்பை வளர்த்துக் கொள்ளவில்லை. நான் என்னை ஒரு போதும் ஒடுக்கப்பட்டவனாகவோ, நசுக்கப்
பட்டவனாகவோ, துன்புறும் தாழ்த்தப்பட்ட
வனாகவோ எண்ணியதில்லை. பல நல்ல மனிதர்கள் எனக்கு உதவி புரிந்துள்ளனர். நான் அதைப் பயன்படுத்திக்
கொண்டேன்.
– டாக்டர் கே.ஆர்.நாராயணன் அவர்கள் மாதிரி மார்செல் தெக்கேகரா என்பவரிடம் பகிர்ந்து கொண்டவை.
ஆதாரம்: தி இந்து 22.4.2005
