Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

சுயமரியாதைச் சுடரொளி எஸ்.தவமணி ராசன் – மறைவு : மே -19 (2001)

சுயமரியாதைச் சுடரொளி எஸ்.தவமணிராசன், திராவிட மாணவர் கழகத்தை தோற்றுவித்தவர்களில் முதன்மையானவர். அவர் குடந்தை கல்லூரியில் சேர்ந்த தருணம் – நடந்த ஒரு நிகழ்ச்சி அவரை ஒரு போராட்ட வீரராக்கிற்று. கல்லூரி விடுதியில் ‘‘பிராமணர்”
களுக்கென்று தனித் தண்ணீர்ப் பானையாம்; இண்டர் மீடியட் முதலாமாண்டு படித்த சம்பந்தம் என்ற மாணவர் அந்தத் தண்ணீர்ப் பானையில் தண்ணீர் குடிக்க, ஏதோ பிரளயம் ஏற்பட்டதுபோல ஆரியம் துள்ளிக் குதித்தது – கல்லூரி வார்டன் கணேசய்யர் ஒரு ரூபாய் அபராதம் விதித்தார்.

தவமணிராசன், கருணானந்தம் உள்ளிட்ட தோழர்கள் போர்க்கொடி உயர்த்த – அபராதம் விலக்கிக் கொள்ளப்பட்டது. இதனுடைய தொடர்ச்சியாகக் கருக்கொண்டதுதான் திராவிட மாணவர் கழகம் (1.12.1943). அதற்கு அடிக்கல் நாட்டியவர் எஸ்.தவமணிராசன்