Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

பெண்களின் நலனுக்கு எதிரிபா.ஜ.க.

ஆய்வறிக்கைகள் தரும் அதிர்ச்சித் தகவல்கள்

கோவி. தேவி

உலகிலேயே இந்தியாவில்தான் பெண்களும், குழந்தைகளும் பட்டினி மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று குடும்பச் சுகாதார ஆய்வு 5 (NFHS 5) கூறுகிறது. இதற்குப் பல்வேறு காரணங்கள் இருந்தாலும், பி.ஜே.பி. ஆட்சியின் அவலங்கள் முக்கியக் காரணமாகும்.

•   5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 36 சதவிகிதம் பேர் வளர்ச்சி குன்றியவர்களாகவும் 32 சதவிகிதம் பேர் எடைகுறைவானவர்களாகவும் உள்ளனர். (டிசம்பர் – 2022)

•   மற்றொரு கணக்கெடுப்பின்படி,இந்தியாவில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 44 சதவிகிதம் பேர் எடை குறைவாக உள்ளனர். 72 சதவிகிதம் குழந்தைகளும், திருமணமான பெண்களில் 52 சதவிகிதம் பேரும் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

•   இதற்கு முக்கியக் காரணம் மறுபெயரிட்ட மதிய உணவுத் திட்டமான, பி.எம்.போஷன் திட்டத்துக்கான நிதி முறையாகப் பயன்படுத்தப்படவில்லை. 2023 – 2024இல் திருத்தப்
பட்ட ஒதுக்கீட்டில் ரூ.12,800 கோடி சரிந்துள்ளது.

•   ஹார்வர்டு பல்கலைக்கழக ஆய்வு, இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் உணவு கிடைக்காத குழந்தைகள் (6.7 பில்லியன்) இருப்பதைக் கண்டறிந்தது.

•   இந்தியாவில் பிரசவம் மற்றும் பிறந்த முதல் வாரங்களில் ஒவ்வொரு ஆண்டும் இறக்கும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் எண்ணிக்கையைக் குறைப்பதில் 2015 – முதல் முன்னேற்றம் தடைபட்டுள்ளது என்று தாய் மற்றும் குழந்தை ஆரோக்கியம் குறித்த அய்.நா. அறிக்கை (மே – 2023) கண்டறிந்துள்ளது.

•   பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா திட்டம்: இத்திட்டம் கர்ப்பிணிப் பெண்கள்
மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு முதல் பிரசவத்தின்போது ஊட்டச்சத்து மற்றும் மருத்துவச் செலவுக்காக, ரூ.5,000 ஒரு முறை மட்டுமே செலவிடுவதாகக் கூறப்படுகிறது. இத்திட்டமானது, 2017 முதல் எவ்வித மாற்றமும் இன்றி நீடிக்கிறது. இது சமீபத்தில் இரண்டாவது பெண் குழந்தைக்கு மட்டும் ரூ.6,000 ஆகஉயர்த்தப்பட்டுள்ளது. 20 சதவிகிதம் பேர் மட்டுமே இத்திட்டத்தை அணுகமுடிகிறது. மேலும் ஆதாரை கட்டாய மாக்கியப் பிறகு, அந்த எண்ணிக்கை 46 சதவிகிதம் குறைந்துள்ளது. முந்தைய ஆண்டுகளை ஒப்பிடும்போது 2023-2024ஆம் ஆண்டுகளில் பட்ஜெட் ஒதுக்கீடு 17 சதவிகிதம் குறைந்துள்ளது. 29 சதவிகிதம் பயனாளிகள் மட்டுமே இரண்டு தவணைகளையும் பெறுகின்றனர்.

•   வடஇந்திய மாநிலங்களில் ஆயிரக்கணக்கான அரசுப் பள்ளிகள் மூடப்பட்ட தாலும், இணைக்கப்பட்டதாலும் பெண் கல்வி மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

•   மேலும் SC, ST மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படுவது இல்லை. இவை அனைத்தும் பெண் குழந்தைகளின் இடைநிற்றல் விகிதத்தை அதிகரித்துள்ளது.

•   (பெண் குழந்தைகளைக் காப்போம்; பெண் குழந்தைக்குக் கற்பிப்போம்) நாடாளுமன்ற அறிக்கையின்படி விடுவிக்கப்பட்ட ரூ.446.72 கோடி நிதியில், 78.9 சதவிகிதம் ஊடக விளம்பரத்துக்கே செலவிடப்பட்டுள்ளது. உஜ்வாலா திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட சிலிண்டர்களை மீண்டும் நிரப்புவதற்கான செலவுகள் அதிகரித்துள்ளதால், பல சிலிண்டர்கள் காலியாக உள்ளன. 2021-2022ஆம் ஆண்டில் 90 இலட்சம் பயனாளிகள் தங்கள் சிலிண்டர்களை மீண்டும் நிரப்பவில்லை. (தி இந்து) சுமார் 1 கோடி பேர் தங்கள் சிலிண்டர்களை ஒருமுறை மட்டுமே நிரப்பினர்.

•   2017ஆம் ஆண்டில் யுனிசெஃப் உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான சுமார் 620 மில்லியன் மக்கள் திறந்தவெளியில் மலம் கழிப்பதாக தெரிவித்தது (இந்துஸ்தான் டைம்ஸ்).

•   மோடியின் சொந்தத் தொகுதியான வாரணாசியில், 2019ஆம் ஆண்டில் 2,34,489 கழிப்பறைகள் கட்டுவது என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் ஆண்டுக்கு 7,327 கழிப்பறைகள் மட்டுமே கட்டப்பட்டுள்ளன.

•   மோடி அரசின் முதன்மை ஸ்வச் பாரத்மிஷன் திட்டத்தின் கீழ் கிராமப்புற இந்தியாவில் கட்டப்பட்ட கழிப்பறைகளின் பயன்பாடு 2018-2019 மற்றும் 2020-2021 இடையில் 12 சதவிகிதம் புள்ளிகள் குறைந்துள்ளது.

•   ஜன்தன் யோஜனா திட்டம்: (ஜே.டி.ஒய்) கணக்குகளில் பாதிக்கும் மேற்பட்டவை பெண்களால் வைக்கப்பட்டிருந்தாலும், அவர்கள் கடன் வாங்குபவர்களில் 30 சதவிகிதத்துக்கும் குறைவாகவே உள்ளனர்.

•   சுயஉதவிக்குழுக்கள்: பெருமளவில் ஆதரவு அளிப்பதாக அரசு கூறினாலும்,
அவற்றுக்கான கடன் வழங்கும் பொறுப்பு வட்டிக்கடை போன்ற சுரண்டும்
நோக்கமுடைய நுண் நிதி நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதனால் பெண்கள் பலர் கடன் வலையில் விழுந்துள்ளனர். எம்.எஃப்.அய்.கடன் சேகரிப்பாளர்களின் கைகளில் அவமானத்தையும், வன்முறையையும் கூட எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

    தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (NCRB) 2023:

அறிக்கையின்படி இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 2021அய் விட 2022இல் 2.13 சதவிகிதம் அதிகரித்துள்ளன. 2017இல் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 3,15,215 வழக்குகள் பதிவாகியுள்ளன. இது 2022ஆம் ஆண்டில் 3,65,000 வழக்குகளாக அதிகரித்துள்ளது. ஆறு ஆண்டு காலப்பகுதியில் பெண்களுக்கு எதிரான குற்றங்களின் விகிதம் 15.88 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.

2014ஆம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்களின் விகிதம் அதாவது 1 லட்சம் மக்கள் தொகைக்கு, பெண்களுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை 56.3 சதவிகிதமாக இருந்தது. இது 2022இல் 66.4 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல்குற்றங்கள்: NCRB தரவுகள் 2017 முதல்
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் 14.47 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. 2022ஆம் ஆண்டில் பதிவான மொத்த 63,414 வழக்குகளில் 8,136 வழக்குகளுடன் உத்தரபிரதேசத்தில் இந்தப் பிரிவில் அதிகக் குற்றங்கள் பதிவாகியுள்ளன. 2017ஆம் ஆண்டில் போக்சாவின் கீழ் 32,608 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டன. இது 2022இல் 63,414 ஆக உயர்ந்துள்ளது. இது 94 சதவிகிதம் அதிகரிப்பு. இந்தியாவில் தண்டனை விகிதம் 23 சதவிகிதம் முதல் 25 சதவிகிதம் வரை குறைவாக உள்ளது.

பா.ஜ.க. ஆட்சியில் பெண்கள் மிகவும் பாதுகாப்பற்றவர்களாக தாக்குதல் மற்றும்
வன்முறைக்குப் பெரிதும் ஆளாகக்கூடியவர்களாகவும், நீதி மறுக்கப்பட்டவர்களாக உள்ளனர்.

பெண்களின் பாதுகாப்பை

அவர்களின் நல்வாழ்வை

        உறுதி செய்வோம்!

பா.ஜ.க. ஆட்சியை துரத்துவோம்!