| மூ |
டச் செயல்கள் கடவுள் சார்ந்து அல்லது கடவுள் நம்பிக்கையின் அடிப்படையில் செய்யப்படுகின்றன. கடவுள்
நம்பிக்கையே ஒரு மூடநம்பிக்கை எண்ணும்
போது, அந்த மூடநம்பிக்கையின் அடிப்படை
யில் செய்யப்படும் செயல்கள் அறிவுக்கும், ஆக்கத்திற்கும், நலத்திற்கும் எதிரானதாக இருக்கும் என்பதில் அய்யமில்லை.
நோய் வந்தால் கடவுளுக்கு வேண்டிக் கொள்ளுதல், அதன் பின் நேர்த்திக் கடன்
செய்தல்; தேர்வு வந்தால் கடவுளை வேண்டிக்
கொள்ளுதல்; குடும்பத்தில் சிக்கல்கள் வந்தால்
பரிகார பூசை நடத்துதல்; எதிரிகள் வைப்பு வைத்துவிட்டார்கள் என்ற நம்பிக்கையில் அதை அகற்ற மந்திரவாதிகளைத் தேடி கொண்டு வந்து பூஜை செய்தல்; தீ மிதித்தல், அலகு குத்துதல், தலையில் தேங்காய் உடைத்தல் என்று பல செய்வதோடு உச்சகட்டமாக குழந்தைகளைப் பலியிடும் கொடுமையும் நடக்கின்றது.
கருணையே வடிவானது கடவுள், அன்பே சிவம், உலக உயிர்களெல்லாம் கடவுளின்
பிள்ளைகள் என்று ஒரு புறம் கடவுளைப்
பற்றி கூறிக்கொண்டே அதற்கு நேர் எதிரான மூடச் செயல்களையும் செய்வது எப்படிச் சரியாகும்?
உலக உயிர்களுக்கெல்லாம் கடவுள் தாய் போன்றது என்றால், அந்தக் கடவுள்,
தன்பிள்ளைகள் தன்னைத் திருப்திப்படுத்த, தன் அருளைப்பெற தலையில் தேங்காய் உடைத்துக் கொள்ள விரும்புமா? தன் பிள்ளைகள் உடம்பில் அலகுகளைக் குத்திக்
கொண்டு, தோல் கிழிய இரத்தம் கசிய வலியால் வருந்த விரும்புமா? தன் பிள்ளைகள்
தீயில் இறங்கி நடக்க வேண்டும் அப்போது தான் நான் அருள் தருவேன் என்று கூறுமா? பச்சிளம் பிள்ளையைத் தனக்குப் பலியிட வேண்டும் என்று கேட்குமா?
இப்படியெல்லாம் கேட்டால் அது கடவுளாகுமா? இச்செயல்கள் கடவுளுக்குச் செய்யும் துரோகம் அல்லவா? கடவுள் பற்றிய இலக்கணக்கத்திற்கு இச்செயல்கள் எதிரானது அல்லவா? உண்மையான கடவுள் பக்தன், கடவுள் சித்தாந்தப்படி, கடவுள் ஏற்கும் படியான செயல்களையல்லவா செய்ய வேண்டும்.
மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்கிறது கடவுள் கோட்பாடு. அப்படியென்ற கடவுளை மகிழ்விக்க, திருப்திப்படுத்த மக்கள் தொண்டல்லவா செய்ய வேண்டும்?
கோயில்கட்ட கோடிக்கணக்கில் செலவு செய்வதற்குப்பதில் பிள்ளைகள் படிக்க பள்ளிக்கூடங்கள் கட்டித் தரலாம், கடவுள்
சிலையில் பாலை ஊற்றுவதற்கு பதில்
பசிக்கும் குழந்தைக்கு பால் கொடுக்கலாம்,
கடவுளுக்கு ஆடை உடுத்தி அழகுப்படுத்து
வதற்குப் பதில், ஏழைக் குழந்தைகளுக்கு ஆடை வாங்கிக் கொடுக்கலாம்.
ஆனால், அதை விடுத்து, கடவுளைத் திருப்திப்படுத்த கடவுளின் அருளைப் பெற, அலகுக் குத்துகிறேன், தீயில் நடக்கின்
றேன், தலையில் தேங்காய் உடைக்கிறேன் என்று கருணையில்லா, அன்பு இல்லா,
கடவுள் விரும்பா செயல்களைச் செய்வது கடவுள் பக்தனுக்கு அழகா?
குழந்தைகளைக்
கொடுமைப்படுத்தலாமா?
அப்படி பக்தியினால் மூடச் செயல்களைச் செய்கின்றவர்கள், பச்சிள குழந்தைகளையும் இக்கொடுஞ்செயல்களில் ஈடுபடுத்துவது குற்றமல்லவா? தண்டனைக்கு உரிய செயல் அல்லவா?
பெரியவர்கள் அலகுக் குத்திக் கொள்வதே தப்பு என்று கூறும் போது, குழந்தைகளுக்கு அலகுக்குத்தி அவர்களைத் துன்புறுத்துவது மனிதத் தன்மைக்கும், பாசத்திற்கும் உகந்த செயலா? கடவுள் இதை விரும்புமா?
பெரியவர்களே நெருப்பில் இறங்கி பக்தியின் பெயரால் நடப்பது தப்பு என்று கூறும்போது, பிள்ளைகளை நெருப்பில் நடக்க விடுவதும், பிள்ளைகளைத் தூக்கிக் கொண்டு பெரியவர்கள் நடப்பதும் மிகப் பெரிய தப்பு அல்லவா?
பெரியவர்களே நெருப்பில் தவறி விழுந்து தீக்காயம் அடையும் நிலையில் பிள்ளைகளைத் தீமிதிக்கச் செய்வது குற்ற
மல்லவா? சட்ட விரோத செயல் அல்லவா?
சில நிகழ்வுகளில் பிள்ளைகளைச் தூக்கி கொண்டு தீ மிதித்தவர்கள் தவறி விழுந்து, தாங்களும் தீக்காயம் அடைந்ததோடு, குழந்தைகளும் தீக்காயம் அடைந்த கொடுமை மன்னிக்கக்கூடியதா?
தங்கள் மூடநம்பிக்கைக்கு ஏதும் அறியா பிஞ்சுப் பிள்ளைகளைக் கொடுமைப்
படுத்தலாமா?
நேர்த்திக் கடன் என்ற பெயரில் இருபது
அடி முப்பது அடி உயரத்திற்குக் கைக் குழந்தைகளை உயரே தூக்குவது கொடுமை
யல்லவா? மூச்சுத்திணறல் ஏற்பட்டு பாதிப்பு ஏற்படும் என்பதைச் சிந்திக்க வேண்டாமா?
பிள்ளைகளுக்கு உடல் நலம் பாதிக்கப்
படும் போது, குழந்தை மருத்துவரிடம் காட்டி உரிய சிகிச்சை பெற வேண்டும். அதற்கு
மாறாய் வேப்பிலை பாடம் அடித்தல், விபூதி
பூசுதல், தாயத்து கட்டுதல் போன்ற செயல்
களைச் செய்து நோய் தீவிரம் அடையச் செய்வது தப்பல்லவா? பெரியவர்களின் அறியாமையால் பிள்ளைகள் பாதிக்கப்
படலாமா?
கடவுளுக்கு நேர்ந்துவிடுதல் என்று சொல்லி தலை முடியை 5 வயது 6 வயது வரை கூட மழிக்காமல் வைத்திருப்பது பிள்ளைகளின் நலத்திற்குக்கேடு அல்லவா? மருத்துவர் கூறும் வயதில் தலை முடியை மழிப்பது தானே சரியான செயலாகும். கோயிலில் மொட்டையடிக்கிறேன் என்று சுத்தம் செய்யப்படாத கத்தியால் முடியை மழிப்பது நோய் தொற்றுக்கு வழிவகுக்கும் என்பதைச் சிந்திக்க வேண்டாமா?
எல்லாவற்றுக்கும் மேலாக, தங்கள் பிரச்சனை தீர பிள்ளைகளைப் பலியிடுவது எவ்வளவு பெரிய குற்றம், கொடுமை, மந்திரவாதி சொன்னான் என்று அடுத்தவர் வீட்டுக் குழந்தையைக் கடத்தி பலி கொடுப்பது கொலைக் குற்றமல்லவா?
எனவே குழந்தைகளையும் வெகுவாகப் பாதிக்கும் மூடச்செயல்களைப் பெரியவர்கள் அறவே ஒழிக்க வேண்டும் அதுவே மனிதத்தன்மைக்கு அழகு ஆகும்! w
