1) கே : பெற்றோரை வயது முதிர்ந்த காலத்தில் பிள்ளைகள் பேணிக் காப்பது கட்டாயம் என்ற தார்மீகக் கடமையைக் கூட சட்டத்தின் முன் வலியுறுத்த வேண்டிய நிலையில் உள்ள சமூக உளப்பாங்கை எப்படிப் பார்க்கிறீர்கள்? தெலுங்கானாவை மற்ற மாநிலங்களும் பின்பற்றிச் சட்டம் இயற்ற வேண்டுமல்லவா?
– கே. ராஜ்குமார், ஆத்தூர்
ப: நவீன அறிவியல் யுகத்தின் பக்க விளைவுகளில் இது தவிர்க்க முடியாததாகி வருகிறது; அதற்குச் சரியான மருந்து பரப்புரை – அறிவுரை – சட்ட ஆணை! அமலாக்கம்.
2) கே: நிரூபிக்கப்படாத 2G ஊழல் குற்றச்சாட்டை இப்போது கூடத் தேர்தல் ஆதாயத்திற்காகப் பேசும் எடப்பாடியை எப்படிப் பார்க்கிறீர்கள்?
– ஆர்.நடராஜன், ஏற்காடு
ப: மூர்க்கனும், முதலையும் கொண்டது விடா. எனவே,
மூர்க்கத்தனம் கொண்டவர்கள்
எப்போதும் ஒரே வரிசையில்
தான் இருப்பார்கள். தூங்குபவர்
களை எழுப்பலாம், தூங்குவதுபோல் நடிக்கும் கபடதாரி
களைத் தட்டி எழுப்ப முடியுமா?
3) கே: சாத்தான்
குளம்: கொலை வழக்கில், 9 பேருக்கு மரண தண்டனை சரிதானே? சில கொடிய குற்றங்களுக்கு மரண தண்டனை கட்டாயம்தானே?
– பா.சீனிவாசன், ஏரல்.
ப: இது தொடர்பாக 8.4.2026ஆம் தேதியிட்ட நம் அறிக்கையை ‘விடுதலை’ நாளிதழில் படியுங்கள். சில அசாதாரண நோய்களுக்கு அசாதாரண சிகிச்சை தேவை தானே!
4) கே: இந்தியா கூட்டணிக் கட்சிகள், மாநில சட்டமன்றத் தேர்தல்களில், தங்களுக்குள் மோதிக் கொள்வது, கூட்டணியைப் பலம் இழக்கச் செய்வதால், இதற்கு என்ன தீர்வு?
– ச. தேவகி, திருவான்மியூர்
ப: காலம், கடமை தவறுபவர்களைத் திருத்தும்-என்பது நமது நன்நம்பிக்கை.
5) கே: இந்தியா, கூட்டணிக்குத் தலைமை ஏற்காமல், அது வலிமை பெற அனைத்தும் செய்வேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் நிலைப்பாடு பற்றித் தங்கள் கருத்து என்ன?
– மு. சங்கர், விழுப்புரம்
ப: நமது ஒப்பற்ற முதல்வர் எதையும் தீர்க்கமாகச் சிந்தித்து திடமாகச் செயல்படும் தீரர் – அவரது பதில் – இப்படி மிக அருமை – கட்டுப்பாடு, கடமை, கண்ணியத்துடன் செய்தே பழக்கப்பட்டவர்.
6) கே : இடப் பகிர்வில் கூட்டணிக் கட்சிகளிடம் மனக் கசப்புகள் ஏற்பட்டது உண்மையா என்ற கேள்விக்கு, எங்கள் கூட்டணி எண்ணிக்கையால் ஆனது அல்ல, எண்ணங்களால் ஆனது என்று முதலமைச்சர் அளித்த பதில் எப்படிப்பட்டது?
– அ. ராஜேந்திரன், கரூர்
ப : அருமையானது; உண்மையானதும் கூட!
7) கே: புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து அளிப்பது சாத்தியமா?
“அளிப்போம்” என்று தேர்தல் காலத்தில் மட்டும், உறுதியளிக்கப்படுவதை எப்படிக் கருதுகிறீர்கள்?
– த.செல்லப்பாண்டியன், சின்னூர்
ப: உனக்கும் பெப்பே, உங்கப்பனுக்கும் பெப்பே என்ற கதையினை நினைவூட்டிக் கொள்க.
8) கே: கைதிகளின் தண்டனைக் குறைப்பு மற்றும் முன்கூட்டியே விடுதலை செய்தல் ஆகியவற்றில் அமைச்சரவை முடிவுக்குக் கவர்னர் கட்டுப்பட்டவர் என்ற உயர்நீதிமன்ற அமர்வின் தீர்ப்பை “தினமலர்” ஏடு குறை கூறுவது சரியா?
– நா. சாந்தி, திருத்தணி
ப: அவர்களின் சிந்தனையின் யோக்கியதை, தரம் எப்படிப் புரிகிறதா? ‘‘இனம் இனத்தோடு சேரும்’’ என்ற பழமொழி நினைவுக்கு வருகிறதல்லவா?
9) கே: “தமிழ்நாட்டு முதலமைச்சர் மற்றும் காங்கிரசுடன் பா.ஜ.க. ரகசிய உடன்பாடு” என்று மம்தா கூறியுள்ள குற்றச்சாட்டு, அவர் மீதான மதிப்பைப் பாதிப்பதோடு, இந்தியா கூட்டணியின் நம்பகத்
தன்மையையும் பாதிக்காதா?
– வா. கணேசன், திருச்சி
ப : அங்குள்ள அரசியல் பதற்றத்தில் தன்னிலை இழந்த தகாத பேச்சே அது! வருந்துகிறோம். w
