Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

கீழடித் தொன்மையை ஏற்க மறுப்பு :

தொல்லியல் துறையில்
ஆரிய ஆதிக்கத்தைக்
கெல்லி எறிவோம் !

மிழ்நாட்டில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் கீழடி அகழாய்வு தனிச் சிறப்புடையது.

மதுரைக்கு தென்கிழக்கில் 15 கி.மீட்டர் தூரத்தில், சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது கீழடி என்னும் ஊர். அங்கு அகழாய்வு செய்தபோது 2,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழரின் நகர நாகரிகம் அங்கு இருந்தது தெரியவந்தது.

இது சிந்து சமவெளி நாகரிகத் தடயங்களைவிட மிக அரிதான தடயங்கள் இங்குக் கிடைத்துள்ளன. இதனை அறிந்துதான் மத்திய பி.ஜே.பி. அரசு உடனே கீழடி அகழாய்வை முடக்க முயன்றது.

கீழடியில் தூண்கள், தொழிற்சாலைகள், கட்டுமானங்கள் கொண்ட ஒரு நகரம் கண்டுபிடிக்கப்பட்டது. ஹரப்பா நாகரிகத்தின் காலக்கட்டத்தில், தமிழகத்திலும் அதே நகர நாகரிகம் இருந்தமை இதன்வழி புலப்பட்டது என்ப
தோடு, தமிழர்கள் இந்தியா உட்பட, தாங்கள் வாழ்ந்த அனைத்துப் பகுதிகளிலும், நகர வாழ்வு வாழ்ந்தனர் என்பதும் தெரியவந்தது.

கீழடியில் 70-க்கும் மேற்பட்ட தமிழ் பிராமி எழுத்துகள் கிடைத்துள்ளன. ரோம், ஆப்கான், எகிப்து போன்ற நாடுகளுடனான தமிழர் தொடர்பும் இந்த ஆய்வின்வழி வெளிப்பட்டுள்ளது.

110 ஏக்கர் பரப்பளவில் இந்த அகழாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. கீழடியில் கண்டெடுக்கப்பட்ட பொருள்கள் 2,500 ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்று தெரியவந்தது.

வரிசை வரிசையாகக் கால்வாய்கள்; அதன் முகப்பிலே பெரும் தொட்டிகள்; தொட்டிக்குள் தண்ணீர் உள் செல்லவும் வெளி வருவதற்குமான அமைப்புகள்; கால்வாய் தடத்தை ஒட்டி, சிறியதும் பெரியதுமான ஆறு உலைகள்; கால்வாயின் ஆரம்பப் பகுதியில் வட்டக் கிணறுகள்; மூடிய வடிகால்கள், திறந்த வடிகால்கள், சுடுமண் குழாய்களினால் ஆன வடிகால்கள் என மூன்று விதமான வடிகால் அமைப்புகள்  என்றவாறு, ஒரு முழுமையான நகர அமைப்பை உறுதி செய்யும் சான்றுகள், தென்னிந்தியாவில் முதன் முறையாகக் கீழடியில்தான் கிடைத்திருக்கிறது.

பத்திற்கும் மேற்பட்ட வீடுகள் அல்லது கட்டிடங்கள் சுட்ட செங்கற்களால் கட்டப்பட்டு, அதன் மேற்கூரைகள் ஓடுகளால் வேயப்பட்டு இருந்திருக்கலாம் எனவும், வீடுகளின் அருகே பட்டினப்பாலையில் குறிப்பிடப்படும் சுடுமண் உரைகேணிகளும் இருந்திருக்கலாம் எனவும் இங்கு கிடைத்துள்ள சான்றுகள் மூலம் அறிய முடிகிறது. மேலும், ஆப்கானிஸ்தானில் கிடைக்கும் சூது பவளத்திலான மணிகளும், ரோமாபுரியைச் சார்ந்த மட்பாண்டங்களும், வட இந்திய பிராகிருத எழுத்துகளும் கிடைத்துள்ளன. தமிழ் பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட கருப்பு, சிவப்பு நிறங்களிலான ஏறத்தாழ 1,000 கிலோகிராம் எடையளவுள்ள மண் ஓடுகளும் அகழ்வாராய்ச்சியில் கிடைத்தது.

சிந்து சமவெளி நாகரிகத்தில்கூட மட்பாண்
டங்கள் வெளிப்புறத்தில் சுடப்பட்டதைக் குறிக்கும் வகையில், அவற்றின் வெளிப்புறம் கருநிறத்தில் இருந்தன. ஆனால், கீழடியில் கிடைத்த மட்பாண்டங்கள் உட்புறத்திலிருந்து சுடப்பட்டதைக் குறிக்கும் விதமாக அவற்றின் உட்புறம் கருநிறத்தில் இருக்கிறது. கீழடியில் வாழ்ந்த சமூகம் தொழில்நுட்பரீதியில் முன்னேறிய சமூகமாக இருந்திருப்பது இதன் மூலம் தெரியவந்தது.

கீழடியில் தொழிற்பட்டறைகள் இருந்ததற்கான அடையாளங்களும் கண்டறியப் பட்டுள்ளன. நெசவுக்குரிய தக்கையில் துவங்கி எண்ணற்ற எளிய தொழில்நுட்பக் கருவிகள் கண்டறியப்பட்டுள்ளன. கீழடியில் கண்டறியப்பட்ட சுமார் 5,300-க்கும் மேற்பட்ட பொருட்களில், வணிகம், கலை, தொழில்நுட்பம், எழுத்தறிவு ஆகியவற்றின் சான்றுகளைக் காண முடிகிறது. மொத்தத்தில், ஒரு மேம்பட்ட நாகரிகத்தைக் கொண்ட சமூக அமைப்பாக கீழடி இருந்துள்ளது.

அமர்நாத் இராமகிருஷ்ணா என்ற பொறுப்பும், ஆர்வமும் உள்ள அதிகாரியின் முயற்சிதான் கீழடியில் நடந்த சிறப்பான ஆய்வுக்கு முதன்மையான காரணம். இவர் முயற்சியில் பல அரிய தடயங்கள் கிடைக்கவே, இவரை விட்டால் தமிழரின் தொன்மைச் சிறப்புகளைத் தோண்டி எடுத்து உலகறியச் செய்து விடுவார் என்று அதிர்ச்சியடைந்த பி.ஜே.பி. அரசு, அவரை அஸ்ஸாமுக்குப் பணி மாற்றம் செய்தது. மூன்றாண்டுக்கு மேல் பணியாற்றியதால் மாற்றிவிட்டோம் என்று ஒரு காரணத்தை மத்திய அரசு கூறியது. ஆனால், 3 ஆண்டுகளுக்கு மேல் மத்தியத் துறைகளில் எத்தனை அதிகாரிகள் உள்ளனர்? அவர்களையெல்லாம் மாற்றாதபோது இவரை மட்டும் மாற்றியது ஏன்? தமிழ் மக்கள் பொங்கி எழுந்ததால் மீண்டும் பணியமர்த்தப்பட்டார்.

ஆய்வுப் பணிகள்:
முதல் கட்ட ஆய்வு

2015ஆம் ஆண்டு மார்ச் முதல் செப்டம்பர் வரை முதல் கட்ட ஆய்வுப் பணி நடத்தப்பட்டது. 43 அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அவை 4 அடி அகலம் 4 அடி நீளம் உள்ளவை.

இரண்டாம் கட்ட ஆய்வு:

2016ஆம் ஆண்டு இரண்டாம் கட்ட ஆய்வு 59 அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. 102 பள்ளங்கள் தோண்டப்பட்டன. தமிழ்நாட்டில் மிகப் பெரிய அகழாய்வு இது. இந்த ஆய்வின் போதுதான் நகர்ப்புற நாகரிகத்திற்கான தடயங்கள் கிடைத்தன. கழிவு நீர் செல்லும் பாதைகள் கண்டுபிடிக்கப்பட்டன. செங்கல் மேடைகள், ஆறு உலைக் கூடங்கள் கண்டறியப்பட்டன. இவை உற்பத்தித் தொழில் நடந்தமைக்கான ஆதாரங்கள்.

மத்திய அரசு கீழடி ஆய்வை எப்படியாவது முடக்கி, சீர்குலைத்து உண்மை உலகிற்குத் தெரியாமல் செய்ய வேண்டும் என்பதற்காக, ஆய்வுக்குரிய நிதியை வழங்காமல் முடக்கியது. அதன்பின் இந்த ஆய்வுக்கான நிதியையும் குறைத்தது.

இல்லாத சரஸ்வதி நதியைக் கண்டறியவும், அந்த நதிதான் சிந்துவெளி நாகரிகத்திற்குத் தொடக்கம் என்று உண்மைக்கு மாறான மோசடிப் பிரச்சாரம் செய்யவும் மத்திய அரசு திட்டமிடுவது பச்சையான ஆரிய ஆதிக்கத் தனமாகும்.

அயோத்தியில் இராமன் அருங்காட்சியகம் அமைக்க ரூ.151 கோடியை கொட்டிக் கொடுக்கும் இந்த காவி அரசு ஓர் உண்மை வரலாற்றை அறியும் கீழடி ஆய்வுக்கு நிதி ஒதுக்காமல் வஞ்சித்தது.

மூன்றாம் கட்ட ஆய்வு:

“மூன்றாம் கட்டத்திற்கான திட்ட முன்மொழிவை (Proposal) நான்தான் உருவாக்கினேன். அதற்கான அனுமதியும் எனக்குக் கிடைத்தது. தற்போதைய நிலவரம் குறித்த அறிக்கை (Status report) தாக்கல் செய்யப்படவில்லை என்று காரணம் காட்டி ஏற்பட்ட தாமதத்தைத் தாண்டி, மார்ச்சில்
நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், மிகத் தீர்மானகரமான அகழ்வாராய்ச்சிக் கட்டத்தின் மத்தியில் என்னை, துரதிஷ்டவசமாக, மாறுதல் செய்துவிட்டனர். நான் ஏமாற்றமடைந் திருக்கிறேன். இருந்தாலும், அகழ்வாராய்ச்சியைப் புதிய குழுவினர் முன்னெடுத்துச் செல்வார்கள் என்றும், இன்னும் சிறந்த, இன்னும் பழமையான ஆதாரங்களைக் கண்டுபிடிப்பார்கள் என்றும் நம்புகிறேன்’’ என்று இந்த ஆய்வின் அதிகாரி அமர்நாத் ராமகிருஷ்ணா தெரிவித்தார்.

கண்டெடுத்த பொருள்கள் கருநாடகத்திற்கு ஏன் செல்ல வேண்டும்?

கீழடி அகழாய்வில் கண்டெடுத்த அரிய தொல்பொருள்களை மைசூருக்கு மாற்ற முயற்சிகள் நடப்பது மோசடி, சதித் திட்டத்தின் ஒரு பகுதியாகும். அந்த சதி முறியடிக்கப்பட்டது.

பின்னர் அங்கேயே அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு அவை பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. மேலும் தோண்டப்பட்ட இடங்களும் பார்வைக்காக காட்சியகத்திற்கு வைக்கப்பட்டுள்ளன.

2024ஆம் ஆண்டு (டிசம்பர் மாதம்) திருவனந்தபுரத்தில் நடைபெற்ற இந்திய வரலாற்றுப் பேராயத்தின் மாநாட்டில் கீழடி அகழாய்வு தொடர வேண்டும் என்னும் தீர்மானம் நிறைவேற்றிட,  அந்த அமர்வுக்குத் தலைமை வகித்த வரலாற்று அறிஞர் ரொமிலா தாப்பர், கீழடியானது தமிழ்நாட்டில் கிடைத்துள்ள மிக முக்கியமான கண்டுபிடிப்பாகும். இதன் மூலம் தமிழ்நாட்டு வரலாற்றை மாற்றி அமைக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். அதற்கான ஆய்வு மேலும் தொடர வேண்டும் என்று உரையாற்றியிருந்தார்.

இதன்பின், இதன் ஆய்வு தொடர்ந்து நடத்தப்பட்டது.

முதல் இரண்டு கட்ட அகழாய்வை இந்தியத் தொல்லியல் துறையின் தொல்லியல் கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா மேற்கொண்டார்.

அது குறித்த அறிக்கையை கடந்த 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்தியத் தொல்லியல் துறையிடம் (ஏ.எஸ்.அய்.) சமர்ப்பித்தார். 982 பக்கம் கொண்ட அந்த அறிக்கையில், கீழடியில் நிலவிய கலாச்சாரம், அங்கு விவசாயம் செய்யப்பட்ட பயிர்கள், விலங்குகள், நகர நாகரிகத்தை நோக்கி நகர்ந்த தன்மை உள்ளிட்டவை குறித்தும், 5,765 தொல்லியல் பொருள்கள் பற்றியும் தெளிவாக விளக்கியுள்ளார்.

அது மட்டுமன்றி, கீழடி நாகரிகம் சுமார் 2,800 ஆண்டுகளுக்கு முந்தையது என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளார்.

அறிக்கை தாக்கல் செய்து ஏறக்குறைய மூன்று ஆண்டுகள் ஆன பின்னரும் கூட, இந்தியத் தொல்லியல் துறை கீழடி அகழாய்வு அறிக்கையை இதுவரை வெளியிடவில்லை. இது குறித்து பல்வேறு அரசியல் கட்சியினரும் அதிருப்தி தெரிவித்திருந்தனர்.

கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா மறுப்பு

இதற்கிடையே கீழடி அறிக்கையைச் சமர்ப்பித்த அமர்நாத் ராமகிருஷ்ணாவிடம் இந்தியத் தொல்லியல் துறை அந்த அறிக்கையை மீண்டும் திருத்தி எழுதி சமர்ப்பிக்குமாறு கடிதம் அனுப்பியது.

இந்நிலையில், இந்தியத் தொல்லியல் துறைக்கு பதிலளித்த அமர்நாத் ராமகிருஷ்ணா, ‘‘அறிவியல்பூர்வமான தொல்லியல் சான்றுகளைக் கொண்டுதான் கீழடி தொடர்பான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே, அதில் எவ்வித மாற்றமும் செய்ய வேண்டிய அவசியமும் இல்லை’’ எனவும் பதிலளித் திருந்தார்.

இந்நிலையில் அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்
கும், இந்தியத் தொல்லியல் ஆய்வுத் துறைக்கும் இடையே மீண்டும் கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்தியத் தொல்லியல் ஆய்வுத் துறை மற்றும் நினைவுச்சின்னங்கள் & தொல்பொருள்கள் குறித்த தேசிய இயக்ககத்தின் (என்எம்எம்ஏ) இயக்குநர் கே.அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு கீழடி ஆய்வு அறிக்கையில், அதன் மதிப்பீட்டுக் குழு பரிந்துரைத்த திருத்தங்களைச் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது.

2014-2016 காலகட்டத்தில் கீழடி அகழாய்வின் முதல் இரண்டு கட்டங்களை வழிநடத்திய அமர்நாத் ராமகிருஷ்ணா, கி.மு.800-500 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்த ஒரு பழைமையான நகரத் தமிழ் நாகரிகத்தின் சான்றுகளைக் கண்டறிந்ததாக அறிக்கை வெளியிட்டிருந்தார்.

ஆனால், ஏ.எஸ்.அய். மேற்கொண்ட முக்கிய மதிப்பீட்டுக் குழு (critical evaluation) அந்த அறிக்கையை ‘தெளிவற்றது, முழுமையற்றது மற்றும் போதிய விளக்க
மற்றது’ என விமர்சித்திருந்தது.

இதற்கு பதிலளித்த ராமகிருஷ்ணா, ஏ.எஸ்.அய்யின் மதிப்பீடு, துல்லியமற்றது; செயற்கை
நுண்ணறிவு (ஏஅய்) உதவியுடன் தயாரிக்கப்
பட்டதாகத் தோன்றுகிறது’ எனக் குறிப்பிட்டிருந்தார்.

பின்னர், மார்ச் 27 ஆம் தேதி அனுப்பிய கடிதத்தில், ஏ.எஸ்.அய். அவரது பதிலை மறுபரி சீலனை செய்து, அகழாய்வு அறிக்கையில் தேவையான திருத்தங்களைச் செய்யுமாறு கேட்டுக்கொண்டது. ஏ.எஸ்.அய். அகழாய்வுப் பிரிவு இயக்குநர் ஹெம்சாகர் ஏ.நாயக், ராமகிருஷ்ணா உடனடி
யாக இணக்க அறிக்
கையை (compliance report) சமர்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

ஒழுங்கு நடவடிக்கை பாயுமாம்!

கடந்த மார்ச் 17 அன்று நடைபெற்ற ‘நாடாளுமன்ற கேள்விகள்’ தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் முன் அறிவிப்பின்றி கலந்து கொள்ளாதது உள்ளிட்ட காரணங்களால், ‘கட்டாய உத்தரவுகளை மீறல், கடமையின்மை மற்றும் ஒழுங்கு மீறல்’ ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் ராமகிருஷ்ணாவுக்கு குறிப்பாணை அனுப்பியுள்ளது.

அந்த குறிப்பாணையில், ‘உங்களது செயல்பாடு, திட்டமிட்டக் கட்டுப்பாடு இன்மை, கடுமையான அலட்சியம் மற்றும்
பணி ஒழுங்கு இல்லாமை எனப் பார்க்கப்
படுகிறது. இது துறைசார்ந்த ஒழுங்கு விதிகளை மீறுவதாகும்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ஒன்றிய அரசின் மத்தியக் குடிமைப் பணிகள் விதிகள் (1965) விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றும் எச்சரித்துள்ளது.

இந்த அறிவிப்பிற்கு ஏழு நாள்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு கூறப்பட்டுள்ளதுடன், பதில் வராத பட்சத்தில், கூடுதல் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு ஜனநாயக நாட்டில்
இப்படியொரு ஒழுக்கக்கேடா?

– இப்படி ஒரு திணிப்புக்கான முயற்சி ஒரு ஜனநாயக நாட்டில் நடைபெறுவது ஏற்புடை
யதா? மகாமகா வெட்கக்கேடு அல்லவா?

ஓர் அனுபவம் மிக்க தொல்பொருள் துறை கண்காணிப்பாளர் – தனது புதைபொருள் தரவுகளைக் கொண்டு – தக்க காரண, காரியங்களை அடிப்படையாகக் கொண்டு முடிவு செய்து தந்துள்ள, வருங்காலத்தில் வரலாற்று முக்கியத்துவம் பெறப்போகும் ஓர் ஆவணம் போன்ற அறிக்கை தங்களது
ஆர்.எஸ்.எஸ். கொள்கைகளுக்கு ஒத்த வகையில் அது இல்லையென்ற ஒரே காரணத்தால், ‘‘மாற்றி, திருத்தி எழுதி அனுப்புங்கள். இதில் நீங்கள் பிடிவாதம் காட்டினீர்கள் என்றால், உங்கள் மீது கடும் நடவடிக்கை பாயும்’’ என்று அச்சுறுத்துவது நியாயமா? நேர்மையா? நீதியா?  சட்டப்படி ஏற்றுக் கொள்ளத்தக்கதா?

இத்தகைய அச்சுறுத்தல், உடற்கூராய்வு (Post Mortem) செய்யப் பணித்து, பொறுப்பை வழங்கிய டாக்டரிடம், ‘‘எங்கள் கருத்துக்கேற்ப இல்லை, அது கொலை அல்ல, இயல்பான மரணம்  என்று அதற்கேற்ப உங்களது அறிக்கையை மாற்றி எழுதுங்கள்; இல்லை யேல், உங்களைத் தண்டிப்போம்’’ என்று மிரட்டி, பணிய வைப்பது போன்ற அருவெறுப்பான, அரசியலமைப்புச் சட்ட மீறல் அல்லவா இது?

முதலமைச்சரின் கண்டனம்!

‘திராவிட மாடல்’ ஆட்சியின் லட்சிய முதலமைச்சர், ஒவ்வொரு வாய்ப்பிலும் ஒன்றிய ஆர்.எஸ்.எஸ். – பி.ஜே.பி. ஆட்சியில் இந்த ‘ஆரியத்தனம்’ பற்றி, தனது கண்டனத்தைப் பதிவு செய்து உள்ளார்.

கீழடி ஆய்வு
அறிக்கை தந்த திரு.அமர்நாத் ராமகிருஷ்ணா அவர்கள், கற்றுத் துறைபோகிய, அகழ்வாராய்ச்சியில் தலைசிறந்த விற்பன்னர்!

தனது அறிக்கையை மாற்றி எழுதித் தர முடியாது என்று அவர் பதிலளித்துள்ளது – கடமை தவறாத, மாறாக கருத்துரிமை மற்றும்  உண்மையின் பக்கமே என்றும் நிலைத்து நிற்கக்கூடிய அடிப்படை ஜீவாதார உரிமையே ஆகும்!

நாடு தழுவிய கண்டனங்கள் ஒத்தக் கருத்
துள்ள அனைவராலும் ஒன்றிய அரசின் கலாச்சாரத்
துறை நோக்கி எழுப்பப்படவேண்டும்.

திராவிட நாகரிகம் – வேத கால நாகரிகத்தைவிட முந்தையது என்று ஆகிவிடக் கூடாது என்ற ஆர்.எஸ்.எஸ். கருத்தியலுக்கு எதிரானது கீழடி பற்றிய இந்த உள்ளடி!

கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்!

ஏப்ரல் 23ஆம் தேதி வாக்குப் பதிவு முடிந்து, ஓட்டுகள் எண்ணப்படும் மே 4ஆம்
தேதி இடைவெளியில் இதற்கென ஒரு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை சென்னையில் நடத்திட, ஒத்த கருத்துள்ளவர்கள், கண்காணிப்பாளர்களை அழைப்பதற்கு திராவிடர் கழகம் உரிய முடிவு செய்யும்.

அதிகாரியைப் ‘பலிகடா’ ஆக்கும் கசாப்புத் தனத்திற்குச் சிறிதும் இடந்தர அனுமதியோம்! w