| ஆர |
்.எஸ்.எஸ் என்ற ஆபத்தான மதவெறி பயங்கரவாத அமைப்பின் கோர முகத்தை உலகம் அறிந்து கொள்ளத் தொடங்கியுள்ளது.
சுதந்திர இந்தியாவின் முதல் மத தீவிரவாதக் கொலையான காந்தியார் கொலை தொடங்கி இன்று வரை லட்சக்கணக்
கான படுகொலைகளை தமது சங்பரிவார் நிழல் ராணுவங்களின் மூலம் செய்துள்ளது இந்த அமைப்பு. உலகின் மிகப்பெரிய தன்னார்வ சேவை அமைப்பு என்று தம்மைக் கூறிக்கொண்டு, உலகம் முழுவதும் இருந்து நிதியைத் திரட்டி தமது மதவெறி நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்துகிறது.
இந்தியாவின் பல மாநிலங்களில் தொடர்ச்சியாகப் பயங்கரவாத நடவடிக்கை
களில் ஈடுபட்டு வந்த இந்த அமைப்பு இந்தியாவில் மூன்று முறை தடை செய்யப்பட்டுள்ளது. இல்லாத நடக்காத பொய்யான ஊழல் குற்றச்சாட்டுகளை நாடு முழுவதும் பரப்பி நம்ப வைத்து, வளர்ச்சி என்ற கவர்ச்சிக் கன்னியைப் பயன்படுத்தி, பொய்யாகவே குஜராத் மாடல் என்ற பெயரில்
ஒரு இல்லாத பொய்யான மாடலைப் பிரச்சாரம் செய்து, 2014இல் ஆட்சியைப் பிடித்தது முதல் அதன் கோரமுகம் இன்னும் வெளிப்படையாகத் தெரிந்து வருகிறது.
ஜனநாயகபூர்வமான கட்சிகளை அழித்தல், ஒன்றிய அரசின் தன்னதிகார – தன்னாட்சி அமைப்புகளைச் சிதைத்து, அதற்குள் தங்கள் மதவெறி ஆள்களைத் திணித்து இந்தியா முழுவதும் சதிராட்டம் போட்டு வருகிறது.
இந்தியாவில் பார்ப்பன மேலாதிக்கத்தை நிறுவுவதற்காகவும் அதற்குத் துணை நிற்கும் தேசம் கடந்த தரகு முதலாளிகள் இந்தியாவைக் கொள்ளையடித்து உலகப் பணக்காரர்களின் வரிசையில் இடம் பெற்று இருப்பதற்காகவும் ஆர்.எஸ்.எஸ்.
பா.ஜ.க. அரசு சிறுபான்மை இன மக்களை
மட்டுமல்ல, பெரும்
பான்மை ஹிந்துக்களை
யும்கூட, ஈவு இரக்கமின்றி அடக்கி ஒடுக்கிச் சுரண்டி வருகின்றன.
ஆர்.எஸ்.எஸ்.சின் நேரடிச் செயல்பாடுகள்
இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் மிக
மோசமான மதக் கலவரங்
களையும், பாகுபாட்டை
யும், அச்சுறுத்தலையும் உருவாக்கியுள்ள நிலை
யில், பன்னாட்டு அளவில்
ஆர்.எஸ்.எஸ்ஸின் கிளை
அமைப்புகளான விஸ்வ ஹிந்து பரிஷத்,
எச்.எஸ்.எஸ். போன்ற பல அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. இவை அமெரிக்காவில் மட்டுமல்லாமல், இந்தியா
விலும் ஆர்.எஸ்.எஸ்ஸின் செயல்பாடுகள் நடைபெறுவதற்கு நிதி உதவி வழங்கி வருவதாக ஏற்கெனவே ஆதாரங்களுடன் பல குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இந்தியப் பிரதமரும், அவருடன் உள்ள அமைச்சர்களும் பொதுவெளியில் வெளிப்படையாக மதவெறுப்புப் பிரச்சாரத்தில் ஈடுபடுவதை உலகமே கண்டு காறித் துப்பி வருகிறது. இஸ்லாமியர்களுக்கும் கிறிஸ்துவர்களுக்கும் எதிராக இந்தியாவில் நடக்கும் தாக்குதல்களைக் கண்டும் காணாமலும் இருந்து வருவதற்காக இந்தியாவை ஆளும் பாசிச பா.ஜ.க. கடும் கண்டனங்களை எதிர்கொண்டு வருகிறது.
இந்நிலையில்தான், அமெரிக்காவில் ஆர்.எஸ்.எஸ். சார்பு செயல்பாடுகளை நிறுத்த பன்னாட்டு மதச் சுதந்திர ஆணையம் பரிந்துரைத்துள்ளது.
பன்னாட்டு மதச் சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் அல்லது USCIRF – என்பது அமெரிக்காவின் இரு முக்கிய அரசியல் கட்சிகளான குடியரசுக் கட்சி, ஜனநாயகக் கட்சிகளின் பிரதிநிதிகளைக் கொண்ட ஒரு சுதந்திரமான ஆணையமாக
வும் அரசு அமைப்பாகவும் செயல்படுகிறது.
பன்னாட்டு மதச் சுதந்திரச் சட்டத்தின்
கீழ் 1998ஆம் ஆண்டில் இந்த ஆணையம் நிறுவப்பட்டது. இது அமெரிக்க வெளியுறவுத்
துறையிலிருந்து தனித்து இயங்கும் ஒரு சுதந்திரமான அமைப்பு. ஒவ்வோர் ஆண்டும், பன்னாட்டு மதச் சுதந்திரத்துக்கான அமெரிக்க ஆணையம் தனது ஆண்டு அறிக்கையை வெளியிட்டு வருகிறது.
பன்னாட்டளவில் மதச் சுதந்திரத்தை
மேம்படுத்த அமெரிக்க அதிபருக்கும், வெளியுறவுத் துறைக்கும் நாடாளுமன்றத்
திற்கும் கொள்கை ரீதியான பரிந்துரைகளை வழங்குகிறது.
மதச் சுதந்திரம் தொடர்பான மீறல்கள் தொடர்ச்சியாகவும், மோசமாகவும், திட்டமிட்ட வகையிலும் நடைபெறும் நாடுகளை இந்த ஆணையம் கண்டறியும். இந்த ஆணையத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில், அமெரிக்க வெளியுறவுத் துறை அத்தகைய நாடுகளை, ‘குறிப்பிட்ட கவலைக்குரிய நாடுகள்’ (Countries of particular Concern) மற்றும் ‘சிறப்புக் கண்காணிப்புப் பட்டியல்’ (Special Watch List) என வகைப்படுத்துகிறது.
இந்தியா ஏற்கெனவே டிசம்பர் 29, 2023 அன்று வெளியிடப்பட்ட முந்தைய சி.பி.சி.
பட்டியலிலும், 2025ஆம் ஆண்டின் பட்டியலிலும் இடம் பெற்றுள்ளது.
2025ஆம் ஆண்டில் இந்தியாவில் மத சுதந்திரம் தொடர்ந்து சீர்குலைந்துள்ளதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது. எனவே, இந்தியாவை சி.பி.சி. பட்டியலில் சேர்க்க அது பரிந்துரைத்துள்ளது.
இந்தியாவில் தேசிய மற்றும் மாநில அளவிலான சட்டங்கள் சிறுபான்மையினரின் மதச் சுதந்திரத்தை இலக்கு வைத்து இயற்றப்பட்டுள்ளதைச் சுட்டிக் காட்டுவ
தோடு இந்திய அரசு அகதிகளை வெளியேற்றி
வருவதாகவும், ஹிந்துத்துவா அமைப்பு
களாலும் தேசியவாத அமைப்புகளாலும் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாகவும், இந்தியாவில் உள்ள ஹிந்துத்துவா குழுக்கள் சட்டத்திற்கு அஞ்சாமல் கிறிஸ்துவர்கள் மற்றும் இஸ்லாமி
யர்கள் மீது தாக்குதல் நடத்தி வருவதாகவும் அந்த அறிக்கை குற்றம் சாட்டியுள்ளது.
‘‘ஆண்டு முழுவதும், பல மாநிலங்களில்
ஹிந்து தேசியவாதக் கும்பல்கள் தண்ட
னைக்கு அஞ்சாமல், இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்துவர்களுக்கு எதிராக துன்புறுத்தல், தூண்டுதல் மற்றும் வன்முறையை நிகழ்த்தியுள்ளன’’ என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
‘‘மார்ச் 2025 இல், 17ஆம் நூற்றாண்டின் முகலாய ஆட்சியாளர் அவுரங்கசீப்பின் கல்லறையை அகற்ற வேண்டும் என்று தீவிர ஹிந்து தேசியவாத அமைப்பான விஸ்வ ஹிந்து பரிஷத் (விஎச்பி) கோரியதை அடுத்து மகாராட்டிராவில் வன்முறை வெடித்தது. அதனைத் தொடர்ந்து நடந்த கலவரத்தில் பலர் காயமடைந்தனர் மற்றும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது’’ என்பதை அறிக்கை சுட்டிக் காட்டுகிறது.
ஒடிசாவில் கிறிஸ்துவர்களுக்கு எதிரான வன்முறையைக் குறிப்பிட்டு, ‘‘ஜூன் 2025 இல், ஒடிசாவில் ஹிந்து மதத்திற்கு மாற மறுத்ததால் 20 கிறிஸ்துவக் குடும்பங்களை ஹிந்து தேசியவாதக் கும்பல் ஒன்று தாக்கியது. இந்தத் தாக்குதல்களின் போது காவல்துறை தலையிடவில்லை. எட்டு பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்’’ என்றும் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
‘‘உத்தரப்பிரதேசத்தில், காஷ்மீர் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்குப் பதில் பழிக்குப் பழிவாங்கப் போவதாக சபதம் ஏற்ற ஹிந்து தேசியவாத குழுவின் உறுப்பினர்கள் என்று கூறிக்கொள்ளும் நபர்கள், இஸ்லாமிய உணவக ஊழியர் ஒருவரைச் சுட்டுக் கொன்றதாகக் கூறப்படு
கிறது. மே 2025 இல், இந்திய அதிகாரிகள் 15 கிறிஸ்துவர்கள் உள்பட 40 ரோஹிங்கியா அகதிகளைத் தடுத்து வைத்து, அவர்களை பன்னாட்டுக் கடற்பகுதிக்குக் கொண்டு சென்று, உயிர் காக்கும் அங்கிகளை மட்டுமே கொடுத்து பர்மா கடற்கரைக்கு நீந்திச் செல்லும்படி கட்டாயப்படுத்தினர்.
ஜூலை 2025இல், அசாமில் இருந்து வங்காள மொழி பேசும் நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் இந்தியக் குடிமக்களாக இருந்தபோதிலும், அவர்களை இந்திய அதிகாரிகள் வங்கதேசத்திற்கு நாடு கடத்தினர்.
குறிப்பாக வக்ஃப் சட்டம் மற்றும் உத்தரகாண்டின் மாநில சிறுபான்மையினர் கல்வி அதிகாரச் சட்டம் (யூ.எஸ்.ஏ.எம்.ஈ) ஆகிய
வற்றை இந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
புதிய வக்ஃப் சட்டம், வக்ஃப் வாரியங்
களில் இஸ்லாமியர் அல்லாத உறுப்பினர்
களைச் சேர்க்க அனுமதிக்கிறது. இதற்கிடையில், புதிய சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு முன்பே உத்தரகாண்டில் உள்ள மதரஸா வாரியம் கலைக்கப்பட்டது.
இந்தப் புதிய சட்டத்தின் மூலம், இஸ்லாமி
யர்களின் மதரஸாக்களுடன், மாநிலத்தில் உள்ள சீக்கியர்கள், பவுத்தர்கள், சமணர்கள் மற்றும் பார்சிகளின் கல்வி நிறுவனங்களும் அரசாங்கத்தின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் வரும்” என்று கடந்த ஆண்டில் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. அரசால் இந்தியாவில் நடை
பெற்ற மத வன்முறைகள், சட்ட மீறல்கள், புதிய சட்டரீதியான நெருக்கடிகளைப் பட்டியலிட்டுள்ளது.
இந்தியாவின் உளவுத்துறை அமைப்பான
‘ரா’ (RAW) மற்றும் ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங் ஆகியவற்றுக்கு எதிராக மதச் சுதந்திர
மீறல்கள் குறித்த கடுமையான குற்றச்சாட்டு
களைப் பன்னாட்டு மதச் சுதந்திரத்திற்
கான அமெரிக்க ஆணையம் முன்வைத்துள்ள
துடன், இந்திய உளவுத்துறை மற்றும்
ஆர்.எஸ்.எஸ்.மீது அமெரிக்கா தடைகளை விதிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.
உளவுத்துறை மற்றும் ஆர்.எஸ்.எஸ். உடன் தொடர்புடைய நபர்கள் மற்றும் நிறுவனங்களின் சொத்துகளை முடக்க வேண்டும் என்றும், அவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைவதற்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் பன்னாட்டு மதச் சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் தனது பரிந்துரைகளில் தெரிவித்துள்ளது.
இந்தியாவுக்கான பாதுகாப்பு உதவி மற்றும் இருதரப்பு வர்த்தகத்தை மதச் சுதந்திர சீர்திருத்தங்களுடன் அமெரிக்கா இணைக்க வேண்டும் என்றும், ஆயுத ஏற்றுமதி கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் இந்தியாவுக்கு ஆயுதங்கள் விற்பனை செய்வதைத் தடை செய்ய வேண்டும் என்றும் அந்த அறிக்கை கூறியுள்ளது.
ஆர்.எஸ்.எஸ்ஸின் தொடர் ஆபத்தான
செயல்பாடுகளை உலகம் உற்று நோக்கிக் கொண்டிருப்பதுடன், அதுகுறித்து எதிர்வினையாற்றத் தொடங்கியுள்ளதும். ஆர்.எஸ்.எஸ்ஸைக் கலக்கம் கொள்ளச் செய்துள்ளது.
கடந்த 2023ஆம் ஆண்டில் வெளியிடப்
பட்ட அறிக்கையில், “இந்தியாவில் மதச் சுதந்திரத்தை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் மேலும் வலுவிழந்துள்ளன. மதச் சுதந்திரத்தைப் பாதிக்கும் வகையிலான சட்டங்களை ஒன்றிய, மாநில அரசுகள் இயற்றின. மதமாற்றம், ஹிஜாப் அணிதல், பசுவதை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக இயற்றப்பட்ட சட்டங்கள், முஸ்லிம்கள், கிறிஸ்துவர்கள், சீக்கியர்கள், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினரைப் பாதித்துள்ளது.
மதச் சிறுபான்மையினரின் குரலைத் தொடர்ந்து ஒடுக்கும் வகையிலான நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது. சிறுபான்மையினரின் சொத்து
களை இடித்துத் தள்ளுதல், சட்டவிரோதச் செயல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தல், அரசு சாரா தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள்மீது வெளிநாட்டு நன்கொடை ஒழுங்காற்றுச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளுதல் உள்ளிட்டவற்றின் மூலமாக அரசுக்கு எதிரான குரல்கள் ஒடுக்கப்பட்டன.
மதச் சுதந்திர நடவடிக்கைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்திய இந்திய ஒன்றிய அரசின் அமைப்புகள் மீது தடை விதிக்க வேண்டும். இருதரப்புப் பேச்சு வார்த்தையின்போது இந்த விவகாரத்தை இந்தியா விடம் அமெரிக்கா எழுப்ப வேண்டும். மேலும், மதச் சுதந்திர விவகாரத்தில் இந்தியாவை ‘அதிதீவிர பாதிப்புக்குரிய பகுதி’ என அறிவிக்க வேண்டும்’’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
2025 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘‘இந்தியாவில் மதச் சுதந்திர நிலைமைகள் கடுமையாக வீழ்ச்சியடைந்து வருகின்றன, ஒன்றிய மற்றும் பல்வேறு மாநில அரசுகள் மதச் சிறுபான்மையினருக்கு எதிரான பரவலான துன்புறுத்தல் மற்றும் வன்முறையைப் பொறுத்துக் கொள்கின்றன. பா.ஜ.க. தலைமையிலான அரசாங்கம் குடியுரிமை (திருத்தச்) சட்டத்தை (CAA) இயற்றியது, இது ஏற்கெனவே இந்தியாவில் வசிக்கும் ஆப்கானிஸ்தான், வங்கதேசம் மற்றும் பாகிஸ்தானில் இருந்து வந்த முஸ்லிம் அல்லாத குடியேறிகளுக்கு மட்டுமே இந்திய குடியுரிமையை விரைவாக வழங்க வகை செய்கிறது. அரசாங்கம் திட்டமிட்டுள்ள நாடு தழுவிய தேசிய குடிமக்கள் பதிவேட்டை முடிக்கும்போது, மில்லியன் கணக்கான முஸ்லிம்கள் தடுப்புக்காவல், நாடு கடத்தல் மற்றும் நாடற்ற நிலைக்கு ஆளாக நேரிடும்” என்று தெரிவித்திருப்பதுடன், பிரதமர் மோடியே சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்புப் பேச்சுகளைப் பேசுவதாகவும், பல்வேறு ஆதாரங்களுடன் தெரிவித்திருந்தது.
தொடர்ந்து இந்தியாவில் மதச் சுதந்திரம் ஆபத்தில் இருப்பதை வெளிப்படுத்திவரும் இவ்வமைப்புக்கு ஆண்டு தவறாமல் இந்திய ஒன்றிய வெளியுறவுத் துறையும் சம்பிரதாயமான எதிர்ப்பையும், மறுப்பையும் பதிவுசெய்யும். ஆனால், இந்த முறை, குறிப்பாக ஆர்.எஸ்.எஸ்.ஸின் செயல்பாடுகளைத் தடுக்க வேண்டும் என்று பரிந்துரைப்பதுதான் சங் பரிவாரத்தைக் கலங்கடித்துள்ளது.
யு.எஸ்.சி.அய்.ஆர்.எஃப். வழங்கும் பரிந்துரைகளை ஏற்கவேண்டிய கட்டாயம்
அமெரிக்க நாடாளுமன்றத் துக்கோ, வெளி
யுறவு அமைச்சகத்துக்கோ இல்லை என்றாலும், தொடர்ந்து இதே நிலை தொடர்வதை அந்த ஆணையம் சுட்டிக்காட்டி வருவதன் மூலம் குறைந்தபட்சம் அமெரிக்கா
வில் ஆர்.எஸ்.எஸ்.ஸுக்கு நெருக்கடி எழும் நிலை ஏற்பட்டுள்ளது. அமெரிக்க ஆணையத்தின் பரிந்துரைக்கு மதச்சார்பற்ற செயல்பாட்டாளர்கள் தரப்பிலிருந்து ஆதரவு எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டிருந்த பதிவில், ‘‘அரசியலமைப்புச் சட்டத்தை எதிர்க்கும் மற்றும் மனுஸ்மிருதியின்படி நாட்டை நடத்தத் துடிக்கும் ஓர் அமைப்பான
ஆர்.எஸ்.எஸ், இந்த நாட்டின் ஒற்றுமைக்கும் சகோதரத்துவத்துக்கும் சமத்து
வத்துக்கும் விஷம் போன்றது. காந்தியார்
படுகொலை செய்யப்பட்ட பிறகு,
சர்தார் வல்லபாய் படேல் ஆர்.எஸ்.எஸ்.
அமைப்புக்குத் தடை விதித்தார். தற்போது அமெரிக்க ஆணையமும் இந்த அமைப்பு மதச் சுதந்திரத்துக்கு அச்சுறுத்தல் என எச்சரித்துள்ளது. எனவே, ஆர்.எஸ்.எஸ்.
அமைப்புக்குத் தடை விதிக்கப்பட வேண்டும்’’ என்று குறிப்பிட்டுள்ளது. |
