பா.ஜ.க.வினர் முன்வைத்து வரும் ‘இரட்டை எஞ்சின் அரசு’ என்ற அரசியல் முழக்கத்தில் கூட்டாட்சி முறையைப் பலவீனப்படுத்தும் அபாயம் உள்ளதாக முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய். குரேஷி தெரிவித்துள்ளார்.
“Double engine cute slogan, a serious federal question” எனும் தலைப்பில் எஸ்.ஒய்.குரேஷி எழுதியுள்ள கட்டுரையை ‘தி இந்து’ நாளிதழ் வெளியிட்டுள்ளது.
அதில், நினைவில் நிற்கும் முழக்கங்கள் தேர்தல் நேரத்தில் உருவாகும். வாக்கு எண்ணிக்கை முடிந்தவுடன் அவை மறைந்துவிடும். ஆனால், அரசு நிருவாகம் குறித்த சில முழக்கங்கள் மக்களின் மனதில் நிலைத்து நின்றுவிடும் என்றும், அத்தகைய ஒரு முழக்கம்தான் ‘இரட்டை எஞ்சின் அரசு’ என்றும் சுட்டிக்காட்டி உள்ள அவர், அழகாகத் தோன்றும் இந்த வார்த்தைக்குப் பின் இந்தியாவின் கூட்டாட்சிமுறை குறித்த ஓர் ஆழமான அரசியலமைப்புச் சட்டக் கேள்வி அடங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
