Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

அர்ஜுன் சிங்கின் பதில் கடிதம்…

அன்னை மணியம்மையார் பிறந்த நாளான மார்ச் 10 அன்று
அவரது நினைவிடத்திலும் அறிவாசான் தந்தை பெரியார் நினைவிடத்திலும்
மலர் வளையம் வைத்து உறுதிமொழி ஏற்றோம். அன்று மாலை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அறுபதாம் ஆண்டு விழாவில் பங்கேற்றுச்
சிறப்புரையாற்றினோம். சென்னையில் நடைபெற்ற இந்த விழாவிற்கு
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ் மாநிலத் தலைவர் பேராசிரியர்
காதர் மொகிதீன் தலைமை வகித்தார். நிகழ்வில் தமிழ்நாடு மின்சாரத் துறை அமைச்சர் ஆர்க்காடு நா.வீராசாமி, மத்திய வெளி விவகாரத்
துறை இணை அமைச்சர் அகமது உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் பங்கேற்றனர். விழாவில் டி.என்.பனத்வாலா அவர்களின் நாடாளுமன்ற உரைகள் அடங்கிய புத்தகமும் வெளியிடப்பட்டது. மறுநாள் அருணை தமிழ்ச் சங்கம் சார்பில் முதலமைச்சர் கலைஞர் அவர்களுக்கு நடைபெற்ற பாராட்டு விழாக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினோம். அருணை தமிழ்ச் சங்கத்தின் நிறுவனரும்
அன்றைய உணவுத்துறை அமைச்சருமான எ.வ.வேலு அவர்கள்
மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார். இனமானப் பேராசிரியர் க.அன்பழகன், கவிப்பேரரசு வைரமுத்து ஆகியோர் பங்கேற்றனர்.

ஆதிதிராவிடர்களுக்கான இடஒதுக்கீட்டில் (18 சதவிகிதம்)
மிகவும் பின்தள்ளப்பட்ட மக்களுக்கான அருந்ததியர்களுக்கு உள் ஒதுக்கீடு செய்வது குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தை தமிழ்நாடு அரசு கூட்டியது. திராவிடர் கழகத்தையும் அழைத்திருந்தனர்.

12.3.2008 புதன் பிற்பகல் 4.30 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சரவைக் கூட்ட அரங்கில், முதலமைச்சர் கலைஞர் அவர்கள் தலைமை
யில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நாமும் பங்கேற்றோம்.

“சமூக, கல்வி, பொருளாதார நிலைகளில் அடித்தளத்திலே உள்ள
ஆதிதிராவிட மக்களுக்குள்ளேயே அருந்ததியர் எனப்படுவோர்
மிகவும் பின்தங்கிய நிலையிலே இருப்பதால், அவர்களைக் கைதூக்கி
விடும் முயற்சிகளில் ஒன்றாக, தற்போது
ஆதிதிராவிடருக்கு வழங்கப்பட்டுவரும் இடஒதுக்கீட்டில் இவர்களுக்குத் தனி
உள்ஒதுக்கீடு வழங்கிடவேண்டுமென்றும், அந்த மக்களின் எண்ணிக்கை அடிப்படையில் இடஒதுக்கீட்டின் அளவைப்
பற்றியும், விரிவான முறையில் விசாரித்
தறிந்து அண்மையில் மத்திய அமைச்சர
வையில் எடுத்த முடிவின்படி அமைந்
துள்ள ஆணையத்தின் நிலையையும் ஆராய்ந்து, தேவைப்பட்டால் அவர்களை
யும் கலந்துகொண்டு, அரசுக்குப் பரிந்துரை செய்திட உயர்நீதிமன்றத்திலிருந்து ஓய்வு பெற்ற நீதியரசரைக் கொண்ட ஒரு நபர் குழு (One Man Committee) அமைப்பதென்றும், அந்தக் குழுவின் அறிக்கையை ஆறு மாத
காலத்திற்குள் பெற்று அதை நடைமுறைப்
படுத்துவது பற்றி அரசு முடிவெடுப்ப
தென்றும், இந்த அனைத்து அரசியல்
கட்சிகளின் கூட்டம் தீர்மானிக்கிறது என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்தை முதலமைச்சர் கலைஞர் முன்மொழிந்தார். அதனை அனைத்துக் கட்சி மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சார்ந்தவர்களும், தலைவர்களும் கைத்தட்டி வரவேற்றோம்.

குரோம்பேட்டை அரசன் மஹாலில்
14.3.2008 என்று த.எழிலரசி – ச.சிவக்குமார்
ஆகியோரின் வாழ்க்கை இணையேற்பு விழாவினை நடத்தி வைத்தோம்.  மறுநாள்
(15.03.2008) அன்று சென்னையில் மாணவர் மன்றத்தில் நடைபெற்ற தமிழறிஞர்கள்
மற்றும் நல்லாசிரியர்களுக்கு விருது வழங்கும்
விழாவும் நடைபெற்றன. அக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய நாம், திருக்குறள் நீதிமன்ற உறுதிமொழிக்கான நூலாக ஆக்கப்
பட வேண்டும் திருக்குறள் தேசிய நூலாக அறிவிக்க நாம் குரல் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம். மாணவர் மன்ற நூலகத்திற்கு ரூபாய் 5000 மதிப்புள்ள நம் இயக்கப் புத்தகங்களை வழங்கினோம்.

அன்னை மணியம்மையார் நினைவு நாளான 16.3,2008 அன்று காலை அன்னை
மணியம்மையார் நினைவு நாள்
கருத்தரங்கத்தில் பங்கேற்று
உரையாற்றினோம். பின்னர் தருமபுரி மாவட்டம் எஸ்.கொட்டாவூர் இரத்தினம் சின்னத்தாய் ஆகியோரின் மகன் ஆசிரியர் இர.கிருஷ்ணமூர்த்தி –  தருமபுரி மாவட்டம் வகுரப்பம்பட்டி வி.எஸ்.அன்பு – சாந்தி ஆகியோரின் மகள் அ.சங்கீதா ஆகியோரின் வாழ்க்கைத் துணை நல ஒப்பந்தத்தை நடத்தி வைத்தோம்.

மத்தியப் பணியாளர் தேர்வு
ஆணையம் பொதுத் தொகுதியில்
இடம் அளிக்கப்படவேண்டிய, அதிக மதிப்
பெண்கள் பெற்ற, தாழ்த்தப்பட்டோர் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கான இடங்களை, இடஒதுக்கீட்டுத் தொகுதியில் அறிவித்த சட்ட விரோத நடவடிக்கை செல்லாது என்று சென்னை – உயர்நீதிமன்ற நீதிபதிகள் வரலாற்றுச்
சிறப்புமிக்க தீர்ப்பினை அன்று வழங்கினர். நீண்ட காலமாக இந்த அநீதி இழைக்கப்பட்டு வந்த நிலையில், இதனைக் கண்காணிக்க வேண்டும் என்று நாம் பலமுறை குரல் கொடுத்துள்ளோம். அந்த வகையில் சமூக அநீதிக்கு இந்த வழக்கின் தீர்ப்பு முற்றுப்புள்ளி வைத்துள்ளது என்பதைப் பாராட்டி அறிக்கை வெளியிட்டோம்.

உடல் பரிசோதனைக்காக சென்னை – அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். அடுத்த நாள் 24.3.2008 அன்று காலை “ஆஞ்சியோ கிராம்” பரிசோதனை செய்து, “ஆஞ்சியோ பிளாஸ்டி” செய்யப்பட்டு, நான்கு நாள்கள் மருத்துவமனையில் இருந்தேன். முதலமைச்சர் கலைஞர் அவர்கள் அடுத்த நாள் (25.3.2008) காலை மருத்துவமனைக்கு வந்து உடல்நலம் விசாரித்தார். நன்கு ஓய்வு எடுத்துக்கொள்ளுமாறு முதலமைச்சர் கேட்டுக்கொண்டார். முதலமைச்சருடன் மின்சாரத் துறை அமைச்சர் ஆர்க்காடு நா.வீராசாமியும் வந்து நலம் விசாரித்தார். அப்பொழுது என் இணையர் வீ. மோகனா, வீ.அன்புராஜ், திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கலி.பூங்குன்றன் ஆகியோரும் உடன் இருந்தனர்.

மருத்துவமனையில் இருந்த நேரத்தில் வந்த ஒரு செய்தி நம்மைப் பேரிடியாய்த் தாக்கியது. அறிஞர் அண்ணாவின் மகனும் – நம் அருமைச் சகோதரருமான டாக்டர் அண்ணா பரிமளம் அவர்கள் (வயது 67) மறைவுற்றார் என்ற திடுக்கிடும் செய்தி தான் அது.

அடக்கமானவர், பழகுவதற்கு இனிமை
யானவர் டாக்டர் பரிமளம். அண்ணா நூற்றாண்டு விழாவைச் சிறப்பாக நடத்த
விருந்த அந்தக் காலகட்டத்தில் அவர் மறைந்
தது பெரும் வேதனைக்கு உரியதாகும்.

அதற்கும் சில நாள்களுக்குமுன் திடலுக்கு
வந்து நேரில் சந்தித்தார். அப்போது அண்ணா
நூற்றாண்டு விழா நடத்துவது பற்றியெல்லாம் கருத்துப் பரிமாறிக் கொண்டோம்.

அண்ணாவின் நூல்களை, உரைகளைத் தொகுக்கும் பணியில் ஆர்ப்பாட்டம் இல்லாமல் ஈடுபட்டு இருந்தார். பல நூல்களும், ஒலி நாடாக்களும் அவரின் முயற்சியால் வெளிவந்தன.

இறுதியாக “அறிஞர் அண்ணாவின் பகுத்தறிவுக் களஞ்சியம்” என்ற  நூலை
அவரே தொகுத்துக் கொடுத்தார். தொகுப்பாசிரியர் டாக்டர் அண்ணா பரிமளம் என்னும் பெயரில் அந்நூலும் அச்சில் இருந்தது.. அதற்கொரு வெளியீட்டு விழா வைத்து, அவரைப் பெருமைப்படுத்த வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் இந்தத் துயரச் செய்தியா வர வேண்டும்? என்று வேதனையடைந்தோம். கழகப் பொதுச் செயலாளர் கவிஞர்
கலி. பூங்குன்றன் அவர்கள் தலைமையில் கழகத் தோழர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் இறுதி மரியாதை செலுத்தினர். பின்னர் 26.03.2008 அன்று சிகிச்சை முடிந்து வீட்டுக்குச் சென்று ஒரு வாரம் ஓய்விலிருந்து
விட்டு, பின்னர் இயக்கப் பணியைத் தொடர்ந்தோம்.

சென்னை கொரட்டூர் பெரியார் நகர் நினைவில் வாழும் எ. கணபதி, ஜி.சரோஜினி அம்மாள் ஆகியோரின் பெயரன், ஜி.பாரதி  – பொன்மொழி ஆகியோரின் செல்வன் பா.பிரபு, எம்.இ.அவர்களுக்கும், கடலூர் எஸ்.என்.சாவடி நினைவில் வாழும்
எம்.நமச்சிவாயம், ரூபாவதி அம்மாள் ஆகியோரின் பெயர்த்தி
யும், என். குருமூர்த்தி,
சாந்தி ஆகியோரின் மகளுமான கு.ரேகா பி.டெக்., அவர்களுக்கும்,
வாழ்க்கைத் துணை நல ஒப்பந்த விழாவை
11.4.2008 அன்று காலை சென்னை பாடி
எம்.டி.எச். சாலையில் உள்ள ஸ்ரீமீனாட்சிசுந்தர்
மகாலில் நடத்தி வைத்தோம். எம்முடன்
கழகப் பொதுச் செயலாளர் சு.அறிவுக்கரசு, கழகப் பொருளாளர் கோ.சாமிதுரை, வடசென்னை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் அ.குணசீலன் உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.

ஒன்றிய அரசு நடத்தும் உயர்கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு
27% இடஒதுக்கீடு வழங்கும் வகையில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் செய்யப்பட்ட 93ஆம் சட்ட திருத்தத்
துக்கும், அதையொட்டிக் கொண்டுவரப்பட்ட தனிச் சட்டத்துக்கும் எதிராக ஒரு வழக்குத்
தொடுக்கப்பட்டு, அது உச்ச நீதிமன்றத்
தில் விசாரிக்கப்பட்டு வந்ததைச் சில இதழ்களுக்கு முன் வந்த கட்டுரையில் விளக்கி இருந்தோம்.

இந்த வழக்கின் தீர்ப்பு ஏப்ரல் பத்தாம் தேதி வெளியானது. அந்தத் தீர்ப்பில் அரசியலமைப்பு 93ஆம் சட்டத் திருத்தம் செல்லும் என்றும், அதையொட்டிக் கொண்டு
வரப்பட்ட தனிச் சட்டமும் செல்லும் என்றும் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் அவர்கள் தலைமையிலான அய்ந்து நீதிபதிகளைக் கொண்ட அரசியல் அமைப்புச் சட்ட அமர்வு தீர்ப்பளித்தது. அந்தத் தீர்ப்பினை மகிழ்ச்சியோடு வரவேற்று கருத்து வெளியிட்ட நாம் அதில்
குறிப்பிடப்பட்டுள்ள சில குறைபாடுகளையும்
சுட்டிக்காட்டினோம். முக்கியமாக கிரிமிலேயர்
நீக்கம் என்று அந்த தீர்ப்பில் வெளியான பகுதிக்கு எதிர்ப்புத் தெரிவித்து அவ்வாறு
செய்வது அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைக்கு விரோதமானது என்பதைத் தெளிவாக விளக்கிய நம் கருத்தினை 12.4.2008 அன்று வெளியிட்டு இருந்தோம்.

மேலும், சமூக ரீதியாகவும் கல்வி ரீதியாகவும் இட ஒதுக்கீடு என்பது அரசியல்
அமைப்புச் சட்டத்தின் நிலை என்பதையும், சட்டத்தில் இல்லாத அடிக்கடி மாறக்கூடிய பொருளாதார அளவுகோலைப் புகுத்துவது
சூழ்ச்சியே என்பதையும் விளக்கி, பல லட்ச
ரூபாய் கட்டி ஏழை பிற்படுத்தப்பட்டோர்
உயர்கல்வி நிறுவனங்களில் சேர்வது
அரிதானதே என்பதையும் விளக்கி படிப்படி
யாகச் சேர்க்கை என்பதைக் கைவிட்டு
27 விழுக்காடு என்ற அடிப்படையில் இவ்வாண்டே சேர்க்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தோம்.

பிற்படுத்தப்பட்டோருக்கு உயர்கல்வி நிறுவனங்களில் 27 விழுக்காடு இடஒதுக்கீடு
பற்றி மனிதவள மேம்பாட்டுத் துறை
அமைச்சர் அர்ஜுன்சிங் அவர்களுக்
கும் நாம் ஒரு கடிதம் எழுதி இருந்தோம்.

Letter written on 11th April by Dr.K.Veeramani to Thiru Arjun Singh, Hon’ble Union Minister for Human Resource Development

Vanakkam and our greetings.

Please accept our hearty congratulations for having come out with flying colours in your mission of giving 27 per cent reservation in central educational institutions.

This injustice is 57 years old. But for your laudable efforts the doors of the educational institutions would not have opened at all.

Still the hurdle of ‘creamy layer’ exclusion is to be removed.

Nowhere in the Indian Constitution the economic criteria was mentioned for reservation.

Please see this trap is also be broken by your consistant efforts. We wish you many more years of long life and robust health.

With regards,

K. Veeramani

இதன் தமிழாக்கம் :

எங்கள் மரியாதைக்குரிய அர்ஜுன்சிங் அவர்களே,

வணக்கமும், வாழ்த்துகளும்.

மத்திய கல்வி நிறுவனங்களில்; இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிக்கும் உங்கள் திட்டத்தில் பெரு வெற்றி பெற்றுள்ளமைக்கு எங்களின் மனம் நிறைந்த வாழ்த்துகளைத் தயவுசெய்து ஏற்றுக் கொள்ளவும்.

இந்த அநீதி 57. ஆண்டு காலமாக நிலவி
வருவதாகும். பாராட்டத்தக்க உங்களது முயற்சி இன்றி, கல்வி நிறுவனங்களின் கதவுகள் அவர்களுக்குத் திறந்திருக்கமாட்டா.

என்றாலும், கிரீமிலேயர் என்று கூறி வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கும் தடை நீக்கப்படவேண்டி உள்ளது.

இடஒதுக்கீட்டுக்குப் பொருளாதார அளவுகோல் தேவை என்பது அரசமைப்புச்
சட்டத்தில் எந்த இடத்திலும் குறிப்பிடப்
பட்டிருக்கவில்லை.

உங்களது தொடர்ந்த முயற்சியால், இந்தத் தடையையும் உடைத்தெறியப்படும் என்று நம்புகிறோம்.

நீண்ட பல ஆண்டுகள் நல்ல உடல் நலத்துடன் தாங்கள் வாழவேண்டும் என்று விரும்புகிறோம்; வாழ்த்துகிறோம்.

மிக்க மரியாதையுடன்,

தங்களிடம் மரியாதை கொண்ட

                                 கி.வீரமணி

இக்கடிதத்திற்கு 14.4.2008 அன்று பதில்
கடிதம் அனுப்பியிருந்தார்.

Letter written on 14th April to Dr.K.Veeramani by Thiru Arjun Singh, Hon’ble Union Minister for Human Resource Development

Dear Shri Veeramani ji,

I have your letter of 11th April 2008 and noted the contents therein. I am happy that you share my commitment and conviction on the issue of reservation to OBCs..

The judgment is the first step forward.

With regards

Yours Sincerely,

Arjun Singh

அன்புள்ள திரு.வீரமணி அவர்களே,

தங்களின் 2008 ஏப்ரல் 11 நாளிட்ட கடிதம் கிடைத்து, அதில் தாங்கள் தெரிவித்திருந்த
வற்றைக் கண்டேன் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் பிரச்சினையில் எமது கோட்பாட்டையும், அந்த இலக்கை எட்ட ஏற்றுக் கொண்டுள்ள உறுதியையும் நீங்களும் பகிர்ந்து கொண்டது பற்றி மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்த உச்சநீதிமன்றத் தீர்ப்பு நமது இலக்கில்
நாம் முன்னேறிச் செல்வதற்கான முதல் படியே!

மரியாதையுடன்

தங்கள் உண்மையுள்ள,

அர்ஜுன் சிங்

(நினைவுகள் நீளும்)