Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

மரணத்தைத் தேர்ந்தெடுப்பதை விவாதப் பொருளாக்கியஜாக் கேவோர்கியன்

ஜாக் கேவோர்கியன் என்ற அமெரிக்காவைச் சேர்ந்த மருத்துவர், “இறக்கும் உரிமை”
(Right to Die) என்பதை வலியுறுத்திய முக்கியமான நபராவார். “மரணம் குற்றம் அல்ல” என்ற அவரது கருத்து பரவலாக பேசப்பட்டது. இவர், நூற்றுக்கும் மேற்பட்ட நோயாளிகள் மருத்துவ உதவியுடன் தற்கொலை செய்து கொள்ள உதவியதால், இந்த விவகாரம் பெரிய அளவில் அமெரிக்காவில் பேசுபொருளாக இருந்தது. விவாதங்கள் எழுந்தன. அமெரிக்காவின் பல மாநிலங்களில் இதற்குத் தடை விதிக்கப்பட்டது. மிச்சிகன் மாநிலத்தில் கடுமையான தண்டனை வழங்கும் சட்டம் கொண்டுவரப்பட்டது. 1999ஆம் ஆண்டு நேரடியாக மருந்து கொடுத்து இறப்புக்கு உதவியதால், அதனை இரண்டாம் நிலைக் கொலைக் குற்றமாக அறிவித்து, அவருக்குச் சிறைத் தண்டனை வழங்கியது அமெரிக்க நீதிமன்றம். கடுமையான எதிர்ப்புக்கு உள்ளாகி இருந்தாலும், அவரது கருத்து உலக அளவில் விவாதப் பொருளாக எழுந்து, பல மாற்றங்களுக்குக் காரணமானது.