Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

கனடாவில் மொத்த மரணங்களில்5 சதவிகிதம்

கனடாவில் மருத்துவ உதவியுடன் மரணம் என்பதற்கான சட்டம் 2016ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது. குறைந்தபட்ச வயது 18ஆக இருக்க வேண்டும். மனநிலை பிறழ்ந்தவர் அந்த முடிவை எடுக்க முடியாது. கடுமையான, குணமடையாத நோயாக இருக்க வேண்டும். இயற்கை மரணத்தை நெருங்கியவராக இருக்க வேண்டும் என்று பல்வேறு கட்டுப்பாடுகள் உண்டு. மரணத்தை நெருங்கும் அளவு நோய் இல்லை என்றாலும், தொடர்ந்து வாழ்வதில் பெரும் நெருக்கடி இருந்தால் அதற்குக் கட்டுப்பாடுகள் மிக அதிகம். 2024ஆம் ஆண்டில் மட்டும் இச் சட்டத்தின் மூலம் 16,499 பேர் மரணத்தைத் தழுவினர். இது மொத்த மரணத்தில் 5.1% என்கிறது கணக்கெடுப்பு !