பாலசுந்தரம் அவர்கள் சுயமரியாதை இயக்கத்திற்கு ஆற்றியுள்ள தொண்டு மிகப் பெரியது. 1933இல் இயக்கத்தில் சேர்ந்த இவர் கவிஞராகவும், பேச்சாளராகவும், எழுத்தாளராகவும் எல்லாவற்றுக்கும் மேலாகச் சிறந்த செயல் வீரராகவும் நெடுங்காலம் பணிசெய்தார்
அய்யா அறிவித்த ஒவ்வொரு கிளர்ச்சியையும் ஒவ்வொரு ஊரில் தலைமையேற்று நடத்தினார். முதலாம் இந்தி எதிர்ப்புப் போரின்போது எண்ணற்ற பொதுக்கூட்டங்களில் கலந்து தனித் தன்மை படைத்த தமது பேச்சாற்றலின் மூலமாக மக்களைத் தட்டியெழுப்பியவர். அதன் காரணமாக சிறை சென்று, ஆறு மாதம் தண்டனை அனுபவித்து ராஜ மகேந்திரா சிறையில் இருந்து விடுதலை ஆனவர். பிராமணாள் பெயர்ப் பலகை அழிப்புப் போராட்டத்திலும் கலந்து கொண்டவர்.
