| ஆ |
ரிய ஆதிக்கத்தால் அரியணை இழந்த திராவிடர்கள், அதிகாரம் இன்றி அடிமைகளாகினர். ஒரு மனிதனுக்கு வேண்டிய அடிப்படை உரிமைகள் அனைத்தும் மறுக்கப்பட்ட நிலையில் – சாலையில் நடக்கும் உரிமை, பொது இடத்தில் வசிக்கும் உரிமை, கல்வி கற்கும் உரிமை இல்லாததோடு, தொட்டால் தீட்டு எனும் மாபெரும் கொடுமை இவற்றுக்கு ஆட்பட்டு மிருக வாழ்வு வாழ்ந்திட்ட மக்களை
வெள்ளைக்காரன் ஆட்சி விழிக்கச் செய்தது.
பின்பு, நீதிக்கட்சியின் ஆட்சி பிழைக்கச் செய்தது; நிமிர்ந்து நடக்கச் செய்தது. கல்வி தந்தது. ஆட்சி அதிகாரத்திற்கு அருகதை உள்ள மக்களாக்கியது. சமத்துவம் காண வகுப்புவாரி உரிமை எனும் இடஒதுக்கீட்டுத் திட்டத்தைச் சட்டமாக்கியது. தந்தை பெரியாரின் கொள்கை கோலோச்சியது. தந்தை பெரியார் தலைமையில் நீதிக்கட்சி இயங்கி திராவிடர் கழகம் உருவானது.
திராவிட இயக்கத்தின் ஆட்சி பேரறிஞர் அண்ணா அவர்களால் 1967இல் தொடங்கப்பட்டது. தமிழ்நாட்டில் கல்வி, வேலைவாய்ப்பு, சமூகநீதிக்கான இடஒதுக்கீடு வரை தொடங்கி, இன்று 69% இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. ஆனால், இந்திய ஒன்றியத்தில் 49.5% இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் இடஒதுக்கீடு தந்தை பெரியாரால் உருவாகி – வளர்ந்து தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களால் இன்றைய 69% இடஒதுக்கீடு எனும் உயரத்தைத் தொட்டுள்ளது. கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களின் இடைவிடாத போராட்டம் – பிரச்சாரம் மூலம் ஒன்றிய அரசில் இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27% இடஒதுக்கீடு என்று முதல் கணக்கு தொடங்கப்பட்டு விட்டது.
அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்., அய்.எஃப்.எஸ்.
போன்ற அதிகார மய்யங்களாக உள்ள பதவிகளுக்கு பார்ப்பனரல்லாதார் இன்று கல்வியில் சிறந்து – உயர்ந்து போட்டியிட்டு வெற்றி பெறும் நிலை தோன்றியிருக்கிறது.
எனினும், இடஒதுக்கீடு அரசியலமைப்புச் சட்ட உரிமையாக்கப்பட்டுள்ள நிலையில் எந்தப் பதவிக்கும் தாழ்த்தப்பட்ட – பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் தங்களைத் தயார்படுத்தி, உயர்பதவிக்கு அணி அணியாய்த் தயாராகிவிட்ட, நிலையில், ஆதிக்கம் செய்தும் – அடிமைப்படுத்தியும் ஒட்டுண்ணியாய் சூத்திரர், பஞ்சம மக்களின் இரத்தத்தை உறிஞ்சி வாழ்ந்த பார்ப்பனர்கள், வயிற்றெரிச்சல்பட்டுச் சதி செய்கிறார்கள். பல சூழ்ச்சிகளைச் செய்கிறார்கள். இடஒதுக்கீடுதானே காரணம் என்றறிந்து அதை ஒழிக்க நினைக்கிறார்கள். கல்வி கற்கும் நம் இனத்து மாணவர்களை முடமாக்க – கல்விக்கண்ணைப் பழுதாக்க நீட், நெஸ்ட் எனும் பல பெயர்களால் முடக்கி, கற்ற கல்வியில் பெற்ற தேர்ச்சியைக் கொண்டு பதவிகளுக்கு வந்துவிடாமல் தடுக்கப் பார்க்கிறார்கள்.
இந்த நிலையில் கடந்த 10 ஆண்டு காலமாக ஒன்றியத்தை ஆளும் பா.ஜ.க. ஆட்சியைக் கொண்டு பார்ப்பன நாயகம் – பார்ப்பனப் பண்ணையம் கேட்பாரில்லை என்று கருதி ஆட்டம் போடுகிறது.
யாரும் கேட்காத நிலையில் அரசியல
மைப்புச் சட்டத்திலேயே இல்லாத நிலையில் பொருளாதார அளவுகோலைப் பயன்படுத்தி EWS என்னும் பொருளாதாரத்தில் நலிந்தோர் என்றும் – அரியவகை ஏழைகள்
என்றும் 10% இடஒதுக்கீட்டை உருவாக்கி
பார்ப்பனர்களுக்குத் தாரைவார்க்கப்
படுகிறது.
பார்ப்பனரல்லாதார்க்கு என்று சட்டப்படி உருவாக்கப்படும் திட்டங்களையும், சட்டங்களையும் நீதிமன்றத்தின் மூலம் ஆரியம் தகர்க்கிறது. ஆட்சி அவாள் ஆட்சி
என்பதால் பார்ப்பனர்களுக்கான சட்டங்களை
யும், திட்டங்களையும் நிறைவேற்றுகிறது.
நீதித்துறைதான் மக்களின் கடைசி நம்பிக்கை. நீதி வழங்கும் நீதிபதிகள் சமூகநீதி அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் முறை இல்லாத நிலையில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு சமூகநீதி கிடைத்திட வாய்ப்பு இல்லையே! சமூகநீதி வழங்கிட வேண்டும் என்ற சட்டத்தில் நீதித்துறைக்கு அது தேவையில்லை என்று கூறுகிறதா? மற்றத் துறைகளில் சமூகநீதியை நிலைநாட்ட இருக்கும் சட்டத்தைத் தெரிந்து வைத்துள்ள நீதித்துறை, தனக்கு மட்டும் சமூகநீதி இல்லையே என்று ஏன் கூற மறுக்கிறது என்ற கேள்விக்குப் பின்வரும் புள்ளி விவரம் மூலம் விளக்கம் தெரிந்துகொள்வது மிகவும் எளிது.
2018 – 2023 வரை நியமிக்கப்பட்ட உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை – 575 பேர். இவர்களில்,
இந்தப் புள்ளி விவரம் மூலம் 575 பேர்களில் 464 பேர் பார்ப்பனர்கள் மற்றும் உயர்ஜாதியினர் உயர்நீதிமன்ற நீதிபதிகளாக 2018-2023 வரை நியமிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது தெரிகிறது. மக்கள் தொகை 3% உள்ள பார்ப்பனர்களுக்கு எத்தனை மடங்கு அதிக வாய்ப்பு என்பதைப் பார்த்தால், பிற சமூகத்திற்கு எப்படி நீதி கிடைக்கும்?
கேரளத்தைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர், ஜான் பிரிட்டஸ் கேட்ட கேள்விக்கு ஒன்றிய இணை அமைச்சரின் பதில் கீழே தரப்படுகிறது.
மிக உயர்ந்த அதிகாரப் பதவிகளில் SC, ST, OBCயினர் 18% மட்டுமே! பார்ப்பனர்கள் மற்றும் உயர்ஜாதியினர் 82%. சுமார் 90% மக்களுக்கு 18% இடஒதுக்கீடு, 10% உள்ள பார்ப்பனர் மற்றும் உயர்ஜாதியினருக்கு 82% இடஒதுக்கீடு. அதிகாரமிக்க பதவிகளில் இந்நிலை என்றால், அரசியலமைப்புச் சட்டம் சொல்லும் சமூகநீதி எங்கே இருக்கிறது?
ஒன்றிய இணை அமைச்சரின் மேற்கண்ட அதிகாரப் பதவிகளில் உள்ள இடங்களுக்கான அட்டவணை:
இந்திய ஒன்றிய அரசில் அனுமதிக்கப்
பட்டுள்ள உயர் அதிகாரப் பணியிடங்கள் :
இந்தப் புள்ளி விவரம் மாநிலங்கள
வையில் இணை அமைச்சர் ராஜேந்திரசிங் அறிவித்தது.
மேற்கண்ட தரவுகளிலிருந்து நிரப்பப்
படாமல் இன்னும் காலிப் பணியிடங்கள் இருக்கின்றன. வேலையற்றோர் நாட்டில் கோடிக்கணக்கில் இருக்கிறார்கள். நிரப்பப்
பட்ட இடங்களும் சமூகநீதி அடிப்படையில் இல்லை. ஒன்றிய அரசில் தாழ்த்தப்பட்டோர், இதர பிற்படுத்தப்பட்டோர் 49.5% இருக்கவேண்டும். ஆனால், வெறும் 18 விழுக்காட்டுக்குக் குறைவாகவே இருக்கிறார்கள். மீதி 82% பார்ப்பனர்களும், உயர்ஜாதியினரும் இருக்கிறார்கள் என்றார். இக்கொடுமைக்கு முடிவுகட்ட வேண்டாமா?
2022 ஜனவரி 1ஆம் தேதி நிலவரப்படி, ஒன்றிய அரசின் 75 அமைச்சகங்கள் மற்றும் அரசுத் துறைகளில், செயலாளர்கள் மற்றும் துணைச் செயலாளர்கள் – 322 பேர். இதில், ST – 19, SC – 16, OBC – 39. இந்த அளவுப்படி 49.5% உள்ள SC., ST., OBC பிரிவினருக்கு – 74 இடங்கள். சமூகநீதிப்படி 162 பேர் இருக்க வேண்டும். வெறும் 74 பேர் மட்டுமே இருக்கிறார்கள். 2019ஆம் ஆண்டு புள்ளிவிவரங்களின்படி, ஒன்றிய அரசின் அதிகாரமிக்க செயலாளர்கள் – 89 பேர், ST – 3 பேர், SC – ஒருவர், OBCஇல் யாருமில்லை.
இதிலிருந்து SC பிரிவினர் ஒருவர் மட்டுமே. இதர பிற்படுத்தப்பட்டோர் ஒருவர் கூட இல்லை. பழங்குடியினர் மூன்று பேர் மட்டுமே. 89 பேரில் வெறும் 4 பேர் மட்டுமே உள்ளனர். 45 பேர் இருக்கவேண்டிய இடத்தில் 4 பேர் மட்டும் உள்ளனர். இக்கொடுமைக்கு முடிவு கட்ட வேண்டுமா? வேண்டாமா?
ஒன்றிய அரசின் அதிகாரமிக்க பணிகளாக உள்ளவற்றுக்கு I.A.S., I.F.S., I.P.S., I.R.S., தேர்ச்சி பெற்றவர்கள் நியமிக்கப்படுகிறார்கள். அவர்களில் பார்ப்பனர்களும், உயர்ஜாதியினரும் 90% என்றால் இந்நிலை மாற்றப்பட வேண்டாமா? அதே நேரத்தில் 90% தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்கு 10% இடங்கள் கூட அதிகாரமிக்க பணிகளில் இல்லை.
அதிகாரமிக்க உயர்பதவிகளில் இடஒதுக்கீடு வேண்டும். பார்ப்பன ஆதிக்கமாக இருக்கும் அதிகாரமிக்க பணிகளில் அரசியலமைப்புச் சட்டத்திற்குப் புறம்பாக இடம்பெறும் நிலை மாற்றியமைக்கப்பட வேண்டும் என்று சமூகநீதியை நிலைநாட்ட, திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தமிழ்நாடெங்கும் மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவித்தார். அதன்படி கடந்த 03.03.2026 அன்று ஒன்றிய அரசைக் கண்டித்து எதிர்த்து வெற்றிகரமாக நாடெங்கும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.
தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமை ஏற்றார். ஆயிரக்கணக்கான கருஞ்சட்டைத் தொண்டர்கள் மற்றும் பல்வேறு கட்சியினர், பொதுமக்கள், இருபால் இளைஞர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் 57ஆம் முறையாகக் கைது செய்யப்பட்டார். சமூகநீதிக்கு எதிரான ஒன்றிய அரசின் போக்கை முறியடிக்கும் வரை போராட்டம் ஓயாது என முரசறைந்தார். கைது செய்யப்பட்ட அனைவரும் மாலையில் விடுதலை செய்யப்பட்டனர். q
