Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

திரிபுவாதமும் பார்ப்பன ஆதரவும் – த.மு. யாழ் திலீபன்

ரஷ்யாவில் 1905-1907ஆம் ஆண்டின் புரட்சி தோல்வியடைந்ததும் பிற்போக்குத் தன்மை தலைவிரித்தாடிய காலத்தில், மிக முக்கியமான கருத்தியலைத் தோழர் லெனின் வெளிப்படுத்தினார். அந்தக் கருத்து அந்தக் காலகட்டத்தில் தன் எதிரிகளையும், எதிரணியினரையும் தோலுரிக்கும் சிந்தனையாக இருந்தது. அந்தச் சிந்தனை அப்போதல்ல, எப்போதும் பொருந்தும் என்பது நிகழ்கால அரசியலை உற்றுக் கவனித்தால் தெரியும்.

“மார்க்சியத்தின் வளர்ச்சியும், தொழிலாளி வர்க்கத்தில் அதன் சித்தாந்தங்கள் பரவி, வலுவடைந்து வருவதும், அதற்கு விரோதமான தத்துவங்களின் தரப்பிலிருந்த மார்க்சியத்தின் மேலான தாக்குதல்களைத் தவிர்க்க இயலாதவாறு வலுப்படுத்தும்” என்று லெனின் எழுதினார். அதாவது ஒரு தத்துவம் குறிப்பிட்ட வளர்ச்சி நிலையை
அடைந்துவிட்ட பிறகு, அந்தத் தத்துவத்தின் மீதான தாக்குதல் விரோதமான தத்துவநிலையிலிருந்து வருவதைத் தவிர்க்கமுடியாது என்பதைத் தெளிவாகக்  குறிப்பிடுகிறார். இந்த நிலையை நாம் பெரியாரியலுக்கு உட்படுத்திப் பார்க்க வேண்டியுள்ளது. அண்மைக் காலங்களில் பெரியாரின் திராவிட அரசியல் மீது வீசப்படும் அம்பும், பெரியாரின் மீது வீசப்படும் அம்பும் வேறுவேறாக நினைத்திருந்தோருக்கு இரண்டும் ஒன்றே என்பது புரிய சில ஆண்டுகள் தேவைப்பட்டன. பெரியாரியல் இரு தரப்புகளின் தாக்குதல்களையும் சந்தித்து வருகிறது. ஒன்று, லெனின் சொல்வது போன்று திருத்தல்வாதம், மற்றொன்று திருத்தல்வாதத்தின் இலக்கான பார்ப்பனவாதம்.

அதாவது, இந்த மண்ணில் பார்ப்பனரல்லாதார் இயக்கம் தோன்றியதற்கான காரணம்,நூற்றுக்கு மூன்று பேராக இருப்பவர்கள் 97 பேர்மீது ஆதிக்கம் செலுத்தி, சுயமரியாதையை இழக்கச் செய்து அடிமைகளாக, அறிவற்றவர்களாக, அரசியலதிகாரம் இல்லாதவர்களாக ஆக்கி இருக்கும் சூழலை மாற்றுவதற்காகத்தான், பார்ப்பனரல்லாதார் இயக்கம் தோன்றியது; அதைச் செய்தும்காட்டியுள்ளது. பார்ப்பனரல்லாதார் இயக்கத்தின் – நீதிக்கட்சியின் – தொடர்ச்சியே சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம். இவற்றின் அடிப்படைச் செயல் திட்டங்களை இன்றும் திராவிடக் கட்சிகள் நடைமுறைப்படுத்தி வருவது சிறப்புக்குரிய ஒன்று.

இந்த நிலையைச் சீர்குலைக்க வேண்டுமெனில் என்ன செய்ய வேண்டும்? மீண்டும் பார்ப்பனத் தன்மை நிலைத்து, ஜாதிய ஒடுக்குமுறைக்கு வித்திடவேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்? அதற்காக ஏற்படுத்தப்பட்டது தான் முதலாவது திருத்தல்வாதம். இதற்கு உதாரணம், பெரியார் அமைப்பில் இல்லாத ஒருவர் பெரியாரை நன்றாகப் புகழ்ந்து, இறுதியில், பெரியார் கடவுள் மறுப்பையே பேசவில்லை என்று முடித்துவிடுவார். ஆனால், கடவுள் மறுப்பு என்பது பெரியாரின் அய்ந்து கொள்கைகளுள் ஒன்று. இத்தகைய வாதங்கள்தான் திருத்தல்வாதம் என்பது. இந்த திருத்தல்வாதங்கள் தாம் திட்டமிட்டு எதிர்நிலையாளர்களால் பரப்பப்படுபவையாகும். இத்தகைய திருத்தல்வாதங்கள் பெரியாரியலின் அடிப்படையை நீர்த்துப்போகச் செய்யும் ஒன்று. இதுபோன்று, முத்துராமலிங்கத்திடம் பெரியார் தோற்றுப் போனார், பெரியார் பிள்ளையார் சிலையை வீட்டில் வைத்து வணங்கினார், பெரியார் ஜாதி வெறியர், வளர்த்த பிள்ளையைத் திருமணம் செய்து கொண்டார், கீழ்வெண்மணிப் பிரச்சனைக்கு பெரியார் எதுவும் பேசவில்லை, தாழ்த்தப்பட்ட பெண்களை இழிவுபடுத்திப் பேசினார் என்று பல்வேறு திருத்தல்வாதங்களையும், திரிபுவாதங்களையும் கையில் எடுப்பர். இத்தகைய வாதங்கள் எங்குப் பயன்படு
மென்றால், அது மூன்றாவது வகையான பார்ப்பனவாதத்துக்குப் பயன்படும்; பயன்பட்டும் வந்திருக்கிறது.

பெரியாரியலுக்கு எதிரான சமத்துவத்திற்கு எதிரான கும்பல் திருத்தல்வாதங்களையும், திரிபுவாதங்களையும் திட்டமிட்டுப்பரப்புவதே அவற்றின் வேலையாகும். அந்தக்கும்பலுக்கு நேரடியாகவும் கருத்தியலாகவும் மோதும் பழக்கம்.எப்போதும் இருந்ததில்லை. மாறாக பார்ப்பனர்களுக்கு அடியாள்களாக உதிரிகளை வைத்துக் கொண்டு அவ்வேலைகளைச் செய்து வருவர். அவர்களுக்கான வேலை முதலில் திருத்தல்வாதம், பெரியாரை ஏற்கிறோம் திராவிடக் கட்சிகளைத்தான் எதிர்க்கிறோம் என்ற போர்வையில் திராவிடத்தை எதிர்ப்பது. பின்பு திராவிடம் என்பதே தமிழனை அடிமைப்படுத்த உண்டாக்கப்பட்டதுதான் என்று பெரியாரை எதிர்ப்பது, இந்தத் திருத்தல்வாதமாக இருப்பது பின்பு அடிப்படை ஆதாரமற்ற திரிபுவாதமாக மாறி அவதூறுகளைப் பரப்பும், இந்த அவதூறுகளை மக்களிடத்தில் கொண்டு செல்லப் பார்ப்பனியம் அவர்களுக்குப் பணம், பதவி, ஊடக வெளிச்சம் என்று அனைத்தையும் கொடுக்கும். இதன் மூன்றாம் நிலைப் பரிமாண வளர்ச்சிதான் பார்ப்பனவாதம். துக்ளக் மேடையில் அவர்களுக்கு, குருமூர்த்தி வாயால் பாராட்டும் கிடைக்கும். அதாவது, இதுவரை திராவிடம் மற்றும் தந்தை பெரியாரை எதிர்த்தவர்கள் அடுத்த நிலையாக பார்ப்பன ஆதரவை அரசியல், சமூக, பொருளாதார அளவில் வேலைவாய்ப்பில் இன்றும் பார்ப்பனரல்லாத மக்களுக்கு உரிய உரிமையைத் தர மறுக்கும் பார்ப்பனர்களுக்கு வக்காலத்து வாங்கி, அவர்கள் கொடுக்கும்காசுக்கு விசுவாசத்தைக் காட்ட வேண்டும்என்பதற்காகப் பார்ப்பனர்களும் தமிழர்கள்தான், பெரியாரின் திராவிடக் குட்டிச்சுவரைப் பிராமணக் கடப்பாரை கொண்டுஉடைப்பேன் என்ற நிலைக்கு வருவது,முதல்நிலையின் நோக்கமான திருத்தல்வாதம். அதன் இறுதிநிலையை இப்படித்தான் பார்ப்பனவாதமாக எட்டிப் பிடித்திருக்கிறது

பெரியாரின் தத்துவங்களையும், போராட்ட நிலைப்பாடுகளையும் திரிபுவாதிகள் உணர்ச்சி ரீதியில் இருந்து இயக்கிக் கொண்டிருக்கின்றனர். அவ்வுணர்ச்சிக்கு இளம் தலைமுறையினர் மிக எளிதாக மயங்கிப் போகிறார்கள். நன்றாகச் சிந்தித்துப் பாருங்கள். ஒரு தத்துவத்தை அல்லது ஒரு போராட்ட நிலைப்பாட்டை உணர்ச்சி ரீதியாக அணுக வேண்டுமா? அல்லது அறிவுப்பூர்வமாக அணுக வேண்டுமா? உணர்ச்சி ரீதியாக அணுகுவது சரிவருமா? எந்த இடத்திலும் பெரியார் தன் தத்துவப் போராட்ட
முறைகளில் உணர்ச்சி ரீதியாக அணுகியதில்லை. தன் தோழர்களுக்குக் கூட பெரியார் ஒரு போதும் உணர்ச்சிக்கு இடமளிக்காமல் அறிவுக்கு இடமளிக்கவே பயிற்சி கொடுத்திருக்கிறார். அதனால்தான், அவர் கண்ட இயக்கம் பெரியாரியல் என்னும் அறிவாயுதத்தை நம்பி எப்போதும்செயலாற்றி வருகிறது. ஆனால், பெரியாரியலுக்கு எதிராக அணிதிரட்டுவோர் ஒருபோதும் தங்கள் பின்னால் உள்ளவர்களை அறிவுரீதியாக அணிதிரட்டாமல் உணர்வு ரீதியாக மட்டுமே அணிதிரட்டி வருகின்றனர். அத்தகைய அணிதிரட்டல், பெரியார் தமிழருக்கு விரோதி, தமிழரே இல்லை, தமிழைச் சனியன் என்றார், ஆங்கிலமே வீட்டில் பேசச் சொன்னார், திருக்குறளை மலம் என்றார், தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்றார், இஸ்லாமியர்களை ஆப்கானிஸ்தானுக்குப் போகச் சொன்னார், தாய், மகளுடன் உறவு கொள் என்றார் என்று உண்மைக்கு மாறான, திரிக்கப்பட்ட அவதூறுகளைப் பரப்பி, இளைய சமுதாயம் பெரியாரைத் தப்பாக எண்ணும்படியும், வெறுக்கும்படியும் செய்கின்றனர். இவை திட்டமிட்ட மோசடிகள் என்பதை நாம் விளக்கித் தெளிவூட்ட வேண்டும். பெரியார் கூறியவற்றைச் சரியாக ஆதாரபூர்வமாக அவர்களுக்கு எடுத்துக்காட்டிப் புரியவைக்க வேண்டும்.

கோயிலைச் சுத்தப்படுத்த மாட்டையும், சாணியையும், மூத்திரத்தையும் கோயிலுக்குள்  கொண்டு போகிறார்கள். மனிதன் உள்ளே போனால் சாமி தீட்டாகி விட்டதென்று கூறி மனிதனை இழிவுபடுத்திக் கும்பாபிஷேகம் செய்கிறார்களே, இவர்கள் அறிவுள்ளவர்களா? இதற்கேன்
இவ்வளவு வீண் செலவு?                                                                

– ‘விடுதலை’, 03.07.1963

முதல்நிலையின் நோக்கமான திருத்தல்வாதம். அதன் இறுதிநிலையை இப்படித்தான் பார்ப்பனவாதமாக எட்டிப் பிடித்திருக்கிறது.“பெரியாரியத்தின் தனிப்பட்ட சில கருத்துகளுக்கு எதிராக திருத்தல்வாதம் தனது தாக்குதல்களைத் தொடுக்கவில்லை. மாறாக, சுயமரியாதைத் தத்துவம், திராவிட எனும் பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பு, அரசியல் அதிகாரம், பொருளாதார மேன்மை, அறிவியல், பகுத்தறிவுத் தன்மை, பொதுவுடைமைச் சிந்தனை, பெண்கள் சமத்துவம் என எல்லாக் கூறுகளையும் திருத்த முயலுகிறது திருத்தல்வாதம். இவற்றை நம்ப வைக்க அமைப்பாய்த் திரட்டி வேலை செய்வது திரிபுவாதம். அதன் பலனாக பிராமணக் கடப்பாரை மூலம் சமத்துவ, பெரியாரியலை அப்புறப்படுத்தி, தமிழ்நாட்டை அசமத்துவ பார்ப்பனர்களுக்கான வசதியைச் செய்து கொடுப்பது தான் இறுதி இலக்கு.

பெரியாரின் தத்துவங்களையும், போராட்ட நிலைப்பாடுகளையும் திரிபுவாதிகள் உணர்ச்சி ரீதியில் இருந்து இயக்கிக் கொண்டிருக்கின்றனர். அவ்வுணர்ச்சிக்கு இளம் தலைமுறையினர் மிக எளிதாக மயங்கிப் போகிறார்கள். நன்றாகச் சிந்தித்துப் பாருங்கள். ஒரு தத்துவத்தை அல்லது ஒரு போராட்ட நிலைப்பாட்டை உணர்ச்சி ரீதியாக அணுக வேண்டுமா? அல்லது அறிவுப்பூர்வமாக அணுக வேண்டுமா? உணர்ச்சி ரீதியாக அணுகுவது சரிவருமா? எந்த இடத்திலும் பெரியார் தன் தத்துவப் போராடமுறைகளில் உணர்ச்சி ரீதியாக அணுகியதில்லை. தன் தோழர்களுக்குக் கூட பெரியார் ஒரு போதும் உணர்ச்சிக்கு
இடமளிக்காமல் அறிவுக்கு இடமளிக்கவே பயிற்சி கொடுத்திருக்கிறார். அதனால்தான், அவர் கண்ட இயக்கம் பெரியாரியல் என்னும் அறிவாயுதத்தை நம்பி எப்போதும்
செயலாற்றி வருகிறது. ஆனால், பெரியாரியலுக்கு எதிராக அணிதிரட்டுவோர் ஒருபோதும் தங்கள் பின்னால் உள்ளவர்களை அறிவுரீதியாக அணிதிரட்டாமல் உணர்வு ரீதியாக மட்டுமே அணிதிரட்டி வருகின்றனர். அத்தகைய அணிதிரட்டல், பெரியார் தமிழருக்கு விரோதி, தமிழரே இல்லை, தமிழைச் சனியன் என்றார், ஆங்கிலமே வீட்டில் பேசச் சொன்னார், திருக்குறளை மலம் என்றார், தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்றார், இஸ்லாமியர்களை ஆப்கானிஸ்தானுக்குப் போகச் சொன்னார், தாய், மகளுடன் உறவு கொள் என்றார் என்று உண்மைக்கு மாறான, திரிக்கப்பட்ட அவதூறுகளைப் பரப்பி, இளைய சமுதாயம் பெரியாரைத் தப்பாக எண்ணும்படியும், வெறுக்கும்படியும் செய்கின்றனர். இவை திட்டமிட்ட மோசடிகள் என்பதை நாம் விளக்கித் தெளிவூட்ட வேண்டும். பெரியார் கூறியவற்றைச் சரியாக ஆதாரபூர்வமாக அவர்களுக்கு எடுத்துக்காட்டிப் புரியவைக்க வேண்டும்.