Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

தமிழவேள் கோ.சாரங்கபாணி நினைவு நாள் – மார்ச் 16 (1974)

தமிழவேள் கோ.சாரங்கபாணி அவர்கள், பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களுடைய தோழர்களில் – தொண்டர்களில் – அன்பர்களில் மிகவும் அணுக்கமானவர் ஆவார். தந்தை பெரியார் அவர்களால் பெரிதும் மதிக்கப்பட்டவர்; நேசிக்கப்பட்டவர்.

தந்தை பெரியார் அவர்களது சுயமரியாதை இயக்கக் கொள்கை
களால், சமூக சீர்த்திருத்தக் கோட்பாடுகளால் மிகவும் ஈர்க்கப்பட்டவர்.

மலாயா (அப்போது அப்படித்தானே மலேசியா அழைக்கப்பட்டது)
சிங்கப்பூர் ஆகிய இரு நாடுகளிலும் தந்தை பெரியார்தம் சுயமரியாதை
இயக்கம் ஆழமாக இன்றும் வேரூன்றி நிற்கிறது, பரவியுள்ளது என்றால்
அதற்கு ஆரம்பகாலப் பணிகளைச் செய்தவர்களில் தமிழவேள் கோ.சா.
அவர்கள் முன்னிலையில் வைத்து எண்ணப்பட வேண்டியவர் ஆவார்கள்.                                        – கி.வீரமணி