Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

அரசுக் கல்வி, வேலை வாய்ப்புகளில் மகளிர் இடஒதுக்கீடு-முனைவர் க. அன்பழகன்

ஆண்டாண்டு காலமாக – ஏறத்தாழ
ஆஈராயிரம் ஆண்டாக – படிக்கும்
உரிமை மறுக்கப்பட்டிருந்த திராவிடர் இனத்து மக்களுக்கு கல்வி – வேலை வாய்ப்பு உரிமை தந்து கல்வி கற்கவும், அரசுப் பணியில் அமரவும் வாய்ப்பளிக்க உருவானதே வகுப்புவாரி உரிமை (Communal Representation) என்பதாகும்.

இதனைத்தான் இந்திய அரசியல் சட்டம் சமூகநீதி என்று குறிப்பிடுகிறது. அந்தவகையில் 1920இல் நீதிக்கட்சி சென்னை மாகாணத்தில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த பிறகு 1921, 1922, 1923 எனத் தொடர்ந்து இதுகுறித்து ஆணையிட முயற்சித்தும் வெற்றிபெறாத நிலையில், 1928இல் வகுப்புவாரி உரிமை
அரசு வேலைவாய்ப்பில் கொண்டு வரப்பட்டது. அதன் பின்னர் சில
ஆண்டுகள் தடைசெய்யப்பட்டு இருந்தது.
1950-51இல் முதல் சட்டத் திருத்தம்
தந்தை பெரியாரின் போராட்டத்தால் நடைமுறைக்கு வந்து, அந்த இடஒதுக்கீடு
தான் இன்று பல தடைகளைத் தாண்டி
69% இடஒதுக்கீடாக தமிழ்நாடு மாநிலத்தில் வழங்கப்படுகிறது.

இந்த இடஒதுக்கீட்டில் மக்கள் தொகை
யில் ஏறத்தாழ 50% இருக்கக்கூடிய மகளிருக்கு
உரிய ஒதுக்கீடு இல்லாததால், பெண்களுக்
கான சமூகநீதி மறுக்கப்படும் நிலையில் மகளிர் இடஒதுக்கீடு குறித்த சிந்தனை எழுந்தது.

கல்வியில்…

கல்வியில், பெண் கல்விக்காகக் குரல்கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. கல்வி கற்றால்தான் அரசு வேலைவாய்ப்புக் கிடைக்கும். எனவே, பெண்களுக்கென்று கல்வி வாய்ப்பு உருவாக்கப்பட்டது. குறிப்பாக, தி.மு.க. ஆட்சியில் மகளிர்க்காக உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி, கல்லூரி ஆகியவை உருவாக்கப்பட்டன. செவிலியர் படிப்புப் போன்ற பெண்களுக்கான படிப்புகள் உருவாக்கப்பட்டன. பள்ளிக்
கல்வி வரை பெண் குழந்தைக்கு இலவசக்
கல்வி, கல்லூரிக் கல்விவரை மகளிருக்கு
இலவசக் கல்வி,  மிதிவண்டி, மடிக் கணினி என
வழங்கி, மாணவர்களை ஈர்த்து கல்வி
கற்கச் செய்ய வசதிகள் செய்யப்பட்டன.

வேலை வாய்ப்பு…

பெண்களுக்கு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு கலைஞர்  முதலமைச்சராக இருந்தபோது உள்ளாட்சி அமைப்புகளில் 30% இடஒதுக்கீடு, 1989ஆம் ஆண்டு உள்ளாட்சி அமைப்புகளில் திருத்தச் சட்டம் மூலம் கொண்டு வரப்பட்டது.

1996ஆம் ஆண்டு உள்ளாட்சி அமைப்பு
களில் 33% இடஒதுக்கீட்டை கலைஞர் வழங்கினார். இதன் பயனாக மகளிர்க்கு முக்கிய உள்ளாட்சிப் பணிகளில் அமரும் வாய்ப்பு கிடைத்தது.

474 மாநகராட்சி வார்டுகளில் பெண்களுக்கு 161 இடங்களும்,

28 மாவட்டப் பஞ்சாயத்துத் தலைவர் பதவிகளில் பெண்களுக்கு 10 இடங்களும்,

649 மாவட்டப் பஞ்சாயத்து வார்டுகளில் பெண்களுக்கு 242 இடங்களும்,

106 நகராட்சித் தலைவர்களில் பெண்களுக்கு 35 இடங்களும்,

முதன்முதலாக கலைஞர் ஆட்சியில் பெண்களுக்கு இடஒதுக்கீடு மூலம் கிடைத்தன.

அரசுப் பணிகளில்…

03.02.1989 அன்று அரசாணை மூலம் அரசுப் பணிகளில் 30% இடஒதுக்கீடு உறுதிப்
படுத்தப்பட்டது. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் இப்படி ஒரு சட்டம் இயற்றப்பட்டது.

தொடக்கப்பள்ளிகளில் அதிக அளவில் பெண் ஆசிரியைகள்…

11.02.1989 அன்று கலைஞர் உத்தரவிட்ட அரசாணைதான் தொடக்கப் பள்ளிகளில் அதிக எண்ணிக்கைகளில் பெண் ஆசிரியைகள் இடம்பெறக் காரணமானது.

இன்றைய மகளிர் ஒதுக்கீடு…

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் ஆட்சியில் போடப்பட்ட பல அரசாணைகள் மூலம், இன்றைக்கு தமிழ்நாட்டில் அனைத்துத்
துறைகளிலும் 50%க்குக் குறைவின்றிப் பெண்கள் பணியாற்றும் நிலை உருவாகியுள்ளது.

ஒன்றிய அரசில் மகளிர் இடஒதுக்கீடு…

இந்திய ஒன்றிய அரசில் மகளிர் இடஒதுக்கீடு 33% கொண்டு வரவேண்டும் என்ற குரல் தொடர்ந்து ஒலித்திடும் நிலையில் 2023ஆம் ஆண்டு மக்களவை – மாநிலங்களவை இரண்டிலும் அனைத்துக் கட்சிகளும் சம்மதித்த நிலையில் – எதிர்த்து வாக்களிக்காத நிலையில், மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்குப் பிறகு செயல்பாட்டுக்கு வரும் என்று கூறிய, பா.ஜ.க. பிரதமர் மோடி,
2029ஆம் ஆண்டுக்குப் பிறகுதான் நடை
முறைக்கு வரும் என்று அறிவித்து விட்டார்.

தமிழ்நாட்டில் சமூகநீதி பிறந்த மண்ணில்
மகளிர் முன்னேற்றம், மகளிர் இடஒதுக்கீடு ஆண்களுக்கு நிகராக உயர்ந்துள்ள நிலையில்,
ஒன்றிய அரசு சட்டம் நிறைவேற்றியும், செயல்படுத்த மனமின்றி கிடப்பில் வைத்துள்ளது.

தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சியில்
அனைவர்க்கும் அனைத்தும் என்ற நிலையில்,
எவ்வித சேதமும் இன்றி ஆட்சிச் சக்கரம் நகர்வதை உலக மகளிர் தினத்தில் சிந்தித்துப் பார்த்து – பாராட்ட வேண்டியதும், திராவிட மாடல் ஆட்சி தொடர்ந்திட நல்லாதரவு அளிப்பதும், தமிழ்நாட்டின் ஒவ்வொரு மகளிரின் மகத்தான கடமை என்பதை உலக மகளிர் தினத்தில் நினைவூட்டுவது சாலப் பொருத்தமாகும்.

நாடெங்கும் மகளிர்க்கு 50% இடஒதுக்கீடு
கிடைத்திட அனைவரும் பாடுபடுவோம் என்ற சூளுரையை உலக மகளிர் நாளில் ஏற்போம்.