மீடியாக்கள் பொறுப் பில்லாமல் செயல்படு கின்றன. அவை குறித்து என்னிடம் நல்ல அபிப்ராயம் இல்லை. மக்கள் நலனுக்காகப் பணியாற்ற வேண்டிய மீடியாக்கள், அப்படிச் செய்யாமல் பல நேரங்களில் மக்கள் நலனுக்கு எதிராகவே செயல்படுகின்றன.
அரசாங்கம் தருகின்ற விளம்பரங்களுக்காக, அரசுக்கு எதிரான மக்களின் போராட்டங்களையும் செய்திகளையும் இருட்டடிப்பு செய்கின்ற வேலைகளும் நடக்கத்தான் செய்கின்றன.
மார்க்கண்டேய கட்ஜு
உச்ச நீதிமன்ற மேனாள் நீதிபதி
சாகுபடிக்குப் போதுமான தண்ணீர் கிடைக்காதது போன்ற இயற்கை இடர்பாடுகளைத் தவிர அரசின் கொள்கைகள் காரணமாகவும் நெருக்கடிகள் அதிகரித்துக் கொண்டே வருவதால் விவசாயத்தையே கைவிட வேண்டிய கட்டாயத்திற்கு விவசாயிகள் தள்ளப்படுகின்றனர். இது எதிர்காலத்தில் மிகவும் மோசமான விளைவுகளையே ஏற்படுத்தும்.
-ஷீலு, மாநிலத் தலைவி, பெண்கள் இணைப்புக் குழு
உச்ச நீதி மன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளை நியமனம் செய்ய இப்போதுள்ள நடைமுறை தற்போதுள்ள சூழலுக்கு ஏற்ற வகையில் இல்லை. நம் எதிர்பார்ப் புகளைப் பூர்த்தி செய்யும் வகையில் செயல்படாதது மட்டுமின்றி நீதித்துறையின் எதிர்பார்ப்பையே பூர்த்தி செய்யும் வகையில் செயல்படவில்லை.
கபில்சிபல்,
மத்திய சட்ட அமைச்சர்