நினைவு நாள்: பிப்ரவரி 3, (1969)
இந்தியாவிலேயே வேறு யாராலும் சாதிக்க முடியாத காரியத்தை அண்ணா அவர்கள் சாதித்துக்காட்டினார். நமக்குத் தெரிந்த வரையில் வேறு யாரும் அந்த அளவுக்குச் சாதிக்கவே இல்லை. ஒரு பகுத்தறிவு அரசாங்கத்தை – கடவுள் வேண்டாம், மதம் வேண்டாம், ஜாதி வேண்டாம், சாஸ்திரம் வேண்டாம் என்ற ஒரு கொள்கையுடைய பகுத்தறிவு அரசாங்கத்தை – அண்ணா அவர்கள் தோற்றுவித்தார் என்றால், அது சாமானிய காரியமல்ல; பிரமாண்டமான சாதனையாகும்!
நம் மக்களுக்கு இது சரியாகப் புரிகிறதோ இல்லையோ, எதிரிகளுக்கு இது தெளிவாகப் புரியும்.
– தந்தை பெரியார்





