திருக்குறள் புலவர்கள் வீட்டு அலமாரியில் மட்டுமே இருந்த நிலையில், 1929ஆம் ஆண்டு அதனை மலிவுப் பதிப்பாக தந்தை பெரியார் வெளியிட்டார் என்பதும், 1949ஆம் ஆண்டு திருக்குறளின் பெருமைகளைப் பரப்பிட தனி மாநாடு நடத்தி, திருக்குறள் மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெறத் தந்தை பெரியார் காரணமாக இருந்தார் என்ற வரலாறும் உங்களுக்கு தெரியுமா?





