உச்ச நீதிமன்றம்
உயர் நீதிமன்றம்
நதிநீர் மன்றம் என, எதைக் கேட்டும்
நியாயமில்லை…
காவிரிக்கு!
– பி.கிருபாசிறீ
நிலவு என்றேன் நிலவைக் காட்டினார்கள்
குடை என்றேன்
குடையைக் காட்டினார்கள்
தென்னை என்றேன்
தென்னையைக் காட்டினார்கள்
கடவுள் என்றேன்
நாய்முதல் நந்திவரை
அத்தனையையும் காட்டுகிறார்கள்…….
– செல்வன்
வழக்கு சென்றது
பணப்பெட்டி திறந்தது
சட்டம் இருண்டது….
– பி. கிருபாசிறீ
ஒருதலைக் காதலில்
அமில வீச்சுக்கு
அரும்பு பலி!
-சுபாஷ்
புயல்காற்று
பாலியல் வன்முறை
பூவிடம்!
– சுபாஷ்
Leave a Reply