Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

திராவிடர் கழகத்தின் அசல் ! – டாக்டர் கலைஞர்

பார்க்கிற நேரத்திலே வீரமணி இன்றும் ஏதோ இளைஞனைப் போல காணப்பட்டாலும், தந்தை பெரியார் அவர்களோடு எத்தனை ஆண்டு கால மாக அவருக்கு மாணவராக அவரு டைய அன்புத் தொண்டனாக, அவரு டைய செயலாளராக, அவருடைய அன்பிற்கும் பாசத்திற்கும் உரியவராக இன்றைக்கும் பெரியாருடைய வாரிசாக வீரமணி திகழ்கிறார் என்பதை யாரும் மறந்துவிட இயலாது.

அப்படிப்பட்ட வீரமணி அவர்கள் திராவிடர் கழகத்தின் கொள்கை களை சமுதாய ரீதியில், அரசியலில் தேவைப் படுகிற நேரத்தில், இந்த சமுதாயத்திற் காக வாழ்வு அளிக்கின்ற வகையிலே ஆதரவு களைத் தந்தாலும் சமுதாயம் முன்னேற, பகுத்தறிவு பரவிட, மூட நம்பிக்கைகள் அகற்றப்பட தொடர்ந்து தொண்டாற்றி வருகிறார்.

வீரமணி அவர்கள்தான் திராவிடர் கழகத்தின் அசல், போலிகள் நடமாடக் கூடும்! இது அசல்.

– திருவாரூர் கூட்டத்தில் கலைஞர்  விடுதலை 3.9.1979

இலட்சிய வீரர்! – இனமான பேராசிரியர்

தமிழ் இனத்தின் விழிப்புக்கு வழிகண்ட தந்தை பெரியாரின் வழித் தோன்றலாக, பெரியாரின் தேர்வுகளில் வென்று அவரின் நம்பிக்கையைப் பெற்றவராக, பெரியாரின் கொள்கைக் காவலராக, அவற்றைப் பரப்பும் பொறுப்பினராக, அதற்குரிய தகுதியும், திறமையும். தெளிவும். உறுதியும், ஊக்கமும். முயற்சியும் உடையவராக விளங்குபவர் ஆசிரியர் வீரமணி அவர்கள், பெரியாரின் பெருந்தொண்டின் பயன் மங்கி. மறையாது தொடர்ந்து நிலைத்திட ஆசிரியர் வீரமணியின் தொண்டு தொடர்ந்தாக வேண்டும். அப்பணியைத் தொடருவதற்கு ஏற்றதொரு இளைஞராக, கல்வி நலமும், கருத்துத் தெளிவும் கொண்ட இலட்சியவாதியாக. திரு.வீரமணி விளங்குகிறார் என்பது நம்பிக்கையூட்டுவதாகும்.

தமிழ் மக்களிடையே தன்மானமும், இனமான மும் தழைக்கவும். எவ்வகை ஆதிக்கமும் சடசடவெனச் சரியவும். எதேச்சதிகார வெறி சாய்ந்திடவும் உரிமை வாழ்வின் தடைகள் அகற்றப் படவும், தாழ்த்தப்பட்டோர். பிற்படுத்தப்பட்டோர் ஒடுக்கப்பட்டோர் நிலை மாற்றப்படவும் ஆசிரியர் வீரமணியின் சிந்தனையின் செயலும், பேச்சும், எழுத்தும் பயன்படுவது கண்டு பாராட்டுகிறேன்.

– பேராசிரியர் க.அன்பழகன்