Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

வீரமணியின் சிந்தனையைப் புலப்படுத்தும் அடிக்கோடுகள்!

1990இல் சென்னை சென்றபொழுது தலைவர் திரு.கி.வீரமணி அவர்களை அவருடைய இல்லத்தில் கண்டேன். உலகெங்கும் விற்பனையாகும் நூல் ஒன்று அங்கிருந்த சிறிய மேசையின்மீது இருந்தது. வி.எஸ்.நைபால் எழுதிய அப்புத்தகத்திற்குஇந்தியா இப்பொழுதுள்ள பல்லாயிரம் கிளர்ச்சிகள்என்பது பெயர்.

அப்புத்தகத்தில் 70 பக்கங்கள் பெரியாரைப் பற்றியும், சுயமரியாதை இயக்கத்தைப் பற்றியும் இருந்ததால், திரு.கி.வீரமணி அதை என்னிடம் ஆர்வத்துடன் காட்டினார்.

அந்நூல் முழுவதும் அடிக்கோடுகள் இட்டு அவர் படித்திருந்தார். அந்தப் படியையே எனக்கு அன்பளிப்பாகக் கொடுத்தார். இப்பொழுது என் கையில் உள்ள அந்த ஏட்டின் வடிவை, கடந்த பத்து ஆண்டுகளாக என் நண்பர்களுக்குப் பெருமையுடன் காட்டியிருக்கின்றேன். திரு.வீரமணி அவர்களின் அடிக்கோடுகளைக் காண்பித்து, இந்தியாவில் மனித நேய இயக்கம் சாதித்துள்ளவற்றைக் காணுங்கள் எனச் சொல்லுவேன்.

இந்நூலின் பக்கங்களைப் பலமுறை புரட்டியுள்
ளேன். இன்று இதை கி.வீரமணி அவர்களுக்குத் திருப்பித் தர விரும்புகிறேன்.

புதுடில்லி பெரியார் மய்யத்தில் உள்ள நூலகத்தில் இந்தப் படியை வைக்கவேண்டும். டில்லியில் உள்ள புத்தகக் கடைகளில் இந்நூலின் படியினை நீங்கள் பெற முடியாது என அய்யப்பட்டு இந்த நூலை இங்கு வைக்க வேண்டும் என நான் கூறவில்லை. இதில் திரு.வீரமணி அவர்களின் சிந்தனையைப் புலப்படுத்தும் அடிக்கோடுகள் இருப்பதாலும், சுயமரியாதை இயக்கத்துடன் பன்னாட்டு மனித நேய அமைப்பு முதன் முதலில் தொடர்பு கொண்டதை அடையாளப்படுத்துவதாலும் இந்தப்படி இங்குள்ள நூலகத்தில் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.

(1.10.2000 அன்று டில்லி பெரியார் மய்யத் திறப்பு விழாவில், பன்னாட்டு மனித நேய அமைப்பின் தலைவர் லெவிஃபிராகல்)