Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

உண்மைகளை மக்கள் அறியச் செய்வது கட்டாயம்!

  1. கே : உச்சநீதிமன்ற மேனாள் தலைமை நீதிபதி கவாய் அவர்களே கடைசி நேரத்தில் நம் நம்பிக்கையைத் தகர்த்த நிலையில், எதிர்காலத்தில் மக்களாட்சியைக் காக்க என்னதான் வழி!

– வை.புகழேந்தி, காரைக்குடி.

ப : மக்களாட்சியின் மாண்பும் பாதுகாப்பும், தனிநபர்களையோ, தனித்த சில கட்சிகளைப் பொறுத்ததோ அல்ல. என்றும் மக்களைப் பொறுத்த மகத்தான சக்தி.

எனவே, எவரும் நம்பிக்கை இழக்கவில்லை – இழக்கக்கூடாது! சரியான உதாரணம். அடால்ஃப் ஹிட்லர் போன்றவர்களே! அவர்களின் சாம்ராஜ்யம் நிரந்தரமாகியதா?

 

  1. கே : பீகார் தேர்தல் சீர்கேட்டை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து, மறுதேர்தலுக்கு தீர்ப்புப் பெற முடியுமா?

– பு.தமிழ்மகன், சேலம்.

ப : வீண் கனவு; வீண் முயற்சி. மக்களை  விழிப்புணர்வு கொள்ளச் செய்யும் முயற்சியே சரியான வழி!

 

  1. கே : அரசியல் புரிதல் அறவே அற்ற அரசியல் கட்சி ஒன்றின் தலைவரை எதிர்கொண்டு அரசியல் செய்யவேண்டிய அவல நிலை பண்பட்ட அரசியல்வாதியான திராவிட நாயகருக்கு நேர்ந்துள்ளதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

– கு.மீனா, தாம்பரம்.

ப : பரிதாபத்துக்குரிய நிலவரத்தையும் வீரமும் விவேகமும் உள்ள தலைவர்களும் சந்திக்க வேண்டிய சரித்திரக் கட்டாயம் எவருக்கும், எங்கும், எப்போதும் உண்டே!

  1. கே : ஆளுநர் அதிகாரம் சார்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் தற்போது வழங்கியுள்ள ஆலோசனை, நீதியரசர் மகாதேவன் உள்ளிட்ட இரு நீதிபதிகள் முன்னர் வழங்கிய தீர்ப்பைப் பாதிக்குமா?

– எல்.சதீஷ், விழுப்புரம்.

ப : ஓரளவு முட்டுக்கட்டை போடக் கூடும்! – முழுமையாக அல்ல!

 

  1. கே : மெட்ரோ ரயில் சேவையைக் கோவை போன்ற இடங்களுக்கு அனுமதிக்க முழு விவரங்களை தமிழ்நாடு அரசு அளிக்காததே காரணம் என்று ஒன்றிய அரசு கூறும் காரணம் ஏற்புடையதா? தேவையான விவரங்களைக் கேட்டுப் பெறக்கூடாதா?

– கே.ஆதர்ஷ், திருச்சி.

ப : ஏற்புடைத்தது அல்ல – போலிக் காரணங்கள், பொருந்தாத வாதங்கள். திருந்தாத ஜென்மங்கள், செருக்கு மிகுந்த பயணங்கள்! – அவ்வளவுதான்!

 

  1. கே : எஸ்.அய்.ஆர். கள்ள ஓட்டுகளைத் தடுக்கும் என்று அ.தி.மு.க. கூறுவது சரியா?

– ஜெ.காஞ்சனா, விருகம்பாக்கம்.

ப : சிரிப்புதான் வருகுதய்யோ! அடிமைப் புத்தியின் அறியாமையின் அசல் வெளிப்பாடு இது.

  1. கே : தங்களின் பிறந்த நாள் செய்தியாக என்ன கூறுகிறீர்கள்?

– எஸ்.செந்தமிழ்ச்செல்வி, மனப்பாக்கம்.

ப : பாதையும் பயணமும் உறுதியானது! பணித் தொடருவது நமது கடமை! வாழ்வின் வெளிச்சம். -சலிப்பற்ற சமுதாயத் தொண்டு! – நமக்கு என்றுமே பிறந்த இனிய நாள் தான்!

 

  1. கே : பெண்களுக்கும் பட்டியலினத்
    தவர்க்கும் பாதுகாப்பு இல்லை; சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என்று எதிர்க்கட்சிகள் கட்டமைக்
    கும் பொய்யான கருத்தை முறியடிக்க என்ன செய்ய
    வேண்டும்?

– எல்.தங்கவேல், தாம்பரம்.

ப : உண்மைகளை ஊர் அறிய, உலகறிய. அனைத்துக் குடும்பங்களும் அறியும் வரை தொடர் பிரச்சாரம் அடர் மழையாய்ப் பொழிந்து கொண்டே இருக்க வேண்டும்.

 

  1. கே : எவ்வளவு விரைவாக முடியுமோ (as soon as) என்றாலே மிக விரைவாக என்றுதானே பொருள். அப்படியிருக்க மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் நீண்ட
    காலம் தள்ளிப்போடுவது தப்பு அல்லவா?

– ஜெ.முரளி, பம்பாய்.

ப : ஆம்! உள்நோக்கம் இருப்பதால் தான் இந்த உள்ளடி வேலைகள். பா.ஜ.க. ஆளுநர் செயல் முறையற்ற பாதுகாப்பைப் பெறுவது மகா வெட்கக்கேடு! ¦