Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

பாரதிதாசன் பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் டாக்டர் பெ.ஜெகதீசன் அவர்களுடன் நேர்காணல்

(தந்தை பெரியார் தலைமையில் சுயமரியாதைத் திருமணம்
செய்து கொண்ட, ஆசிரியர்களாகப் பணிபுரிந்த, பெற்றோருக்கு மகனாய் சுயமரியாதைக் கொள்கைக் குடும்பத்தில் பிறந்து, சுயமரியாதை,
பகுத்தறிவு உணர்வுடன் வளர்ந்து, கற்று, பல்கலைக்கழகத் துணைவேந்தர் என்ற உயர்நிலை பெற்று, ஓய்வு பெற்று இன்னமும் சுயமரியாதை, பகுத்தறிவு, சமூகநீதி சிந்தனையுடன் தன் செயல்பாடுகளைச்
செய்து வருகின்ற மானமிகு பெ.ஜெகதீசன் அவர்களை நேரில் சந்தித்து விடுத்த வினாக்களும் பெற்ற பதில் மற்றும்
விளக்கங்கள் உங்கள் பார்வைக்கு…)

“க

டந்த 20, 25 ஆண்டுகளாக நான் நாடகம் எதுவும் பார்ப்பதில்லை. கடைசி
யாக நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் நாடகம் பார்த்தது. அதற்குப் பிறகு இந்த நாடகம்தான்….” என்று சுமார் ஒருமணி நேரம் பேசினார்கள்.

மறுநாள் மதியம் கழகத் தோழர் சுப்பிரமணியம் அவர்களின் பழைய மரக்கடை சாமான்கள் விற்கும் கடையில் அமர்ந்து உணவருந்தினார்கள். அப்போது அய்யாவோடு புகைப்படம் எடுக்க நாங்கள் விரும்புகிறோம் என்று சொல்ல, “வாங்க” என்றழைத்தார்கள். அந்தக் காலத்தில் அய்யாவோடு புகைப்படம் எடுக்க நன்கொடை அளிக்க வேண்டுமென்பது நடைமுறை. நாங்கள் அதுகுறித்து யோசிக்கிறோமோ என்று கருதிய அய்யா அவர்கள், “பரவாயில்லை, வாங்க, வந்து உட்காருங்க” என்று தம் இருபுறமும் கனிவோடு காட்டினார்கள். அவ்வண்ணம் அய்யாவோடு, நான், காரைக்குடி காவல் அதிகாரி திரு.ராஜகோபால்சாமி, நாடகத்தின் இயக்குநர் பேராசிரியர் உ.பாலசுப்பிரமணியம் ஆகியோர் அமர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டோம்.

அதை அடுத்து சென்னையிலும்
‘தீ… பரவட்டும்’ நாடகத்தை நடத்தினோம். மறுநாள் அய்யாவைச் சந்தித்து விடைபெறச் சென்றபோது எங்களைப் பார்த்து அய்யா அவர்கள் கேட்டார்கள். “ரொம்பச் செலவாகி
யிருக்குமே!” என்றார்கள். எதுவும் பேசாமல் நாங்கள் நன்றிகலந்த மகிழ்ச்சியில் நின்றோம். அப்போது அய்யா மேலாளராக இருந்த சம்பந்தம் அவர்களைப் பார்த்து, “அவுங்களுக்கு ஒரு 700 ரூபாய் கொடுங்க” என்றார்.

உலகு தொழும் மாமேதை எங்களுக்களித்த அங்கீகாரமாகக் கருதி நன்றியோடு ஏற்றுக் கொண்டு விடை பெற்றோம். ‘தீ… பரவட்டும்!’ நாடகத்தின் ஆசிரியனாக எனது முதல் படைப்பிற்கு அய்யா அவர்கள் அளித்த மதிப்புறு ஏற்பளிப்பு, வாழ்த்து இது.

கேள்வி: பெரியார் கொள்கையை
ஏற்கக் காரணங்கள் என்ன?

பதில்: சுயமரியாதை உணர்வு, சமத்துவம், சமூகநீதி, தொண்டற வாழ்வு, உலக நோக்கு, ஆதிக்க எதிர்ப்பு, மூடநம்பிக்கையை ஒழிக்க வேண்டும் என்ற முனைப்பு, பகுத்தறிவைப் பரப்ப வேண்டும் என்ற ஆவல் போன்றவை பெரியாரை ஏற்க, பின்பற்ற, அவர்தம் கொள்கைகளைப் பரப்ப காரணமாயின.

கேள்வி: தங்கள் பணிக்கால அனுபவங்களை எங்களுடன் பகிரலாமா?

பதில்: பணியில் இருந்த காலம் 1964 முதல் 2000ஆம் ஆண்டு வரை (உயர் கல்வி மாணவ காலத்திலிருந்து ஆங்கிலம், தமிழில் உரையாற்றும் பயிற்சி இருந்தது. அந்த வகைகளில் பள்ளி நிகழ்வுகளிலும் பொதுக் கூட்டங்களிலும் பேசச் செல்வதுண்டு). இதில் 1969 வரை அரியலூர் வட்டம் பகுதியில் உயர்நிலைப் பள்ளிகளிலும், 1970 – 1972 வரை அழகப்பா கல்லூரியிலும், 1972 முதல் 2000 வரை சென்னையில் அரசுக் கல்லூரிகளிலும், சென்னைப் பல்கலைக்கழக ஆய்வுத் துறையிலும் பணியாற்றி 1997 முதல் 2000 வரை பாரதிதாசன் பல்கலைக்கழகத் துணை வேந்தராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றேன்.

கேள்வி : அய்யா பெரியாரின் செயல்பாடுகளில் உங்களுக்கு ஏதாவது அய்யம் ஏற்பட்டதுண்டா?

பதில்: அய்யாவின் கருத்துகளை முழுமையாக ஏற்றுக்கொண்டவன். என்றாலும், காந்தியாரின் எதிர்ப்பில் தந்தை பெரியார் இன்னும் கூடுதல் தீவிரம் காட்டாமல் இருந்தது ஏன் என்ற அய்யம் என்னுள் உண்டு. அம்பேத்கர் அளவிற்கு
காந்தியாரை அய்யா கடுமை
யாக எதிர்க்கவில்லை என்று அடிக்கடி என்னுள் கேள்வி எழும்.

இராஜகோபாலாச்சாரியாரை வெளிப்படை
யாக எதிர்த்த, கண்டித்த அளவிற்கு, காந்தியாரைக் கடுமையாக எதிர்க்காதது ஏன் என்ற எண்ணம் எனக்குள் உண்டு. வர்ணாஸ்ரம ஆதரவு நிலையில் காந்தியாரைக் கடுமையாக எதிர்த்தார். ஆனாலும், பார்ப்பனர் அல்லாத ஒரு மாபெரும் இந்தியத் தலைவரை வர்ணாஸ்ரம ஆதரவுக்காக மட்டும் கடுமையாக எதிர்க்க வேண்டாம் என்று எண்ணியிருக்கலாம் என்று எனக்குள் சமாதானமும் செய்து கொள்வேன்.

கேள்வி: அண்ணா, கலைஞர், ஆசிரியர், மு.க.ஸ்டாலின் இவர்களைப் பற்றி தங்கள் கருத்து என்ன?

பதில்: திராவிட அரசியலின் தந்தை அண்ணா. பெரியார் கொள்கைகளைத் தனது குறுகிய கால அரசியல் அதிகார வாய்ப்பைப் பயன்படுத்தி, நடைமுறைப்படுத்திய புரட்சியாளர். அரசியல்வாதிகளுக்கு அவர் வாழ்வு அரிய பாடம். பேச்சு, எழுத்து, நடிப்பு, ஆளுமை, நிர்வாகம் என்று அனைத்திலும் முத்திரைப் பதித்தவர். தந்தை பெரியாரின் தலை மாணாக்கர். மக்களால் பெரிதும் நேசிக்கப்பட்ட மாபெரும் தலைவர். உள்நாட்டுத் தலைவர்கள், உலகத் தலைவர்களாலும் நேசிக்கப்பட்டவர்.

கலைஞர் கடின உழைப்பின் அடையாளம். தமிழ்நாட்டை வடிவமைத்த சிற்பி. இன்றைக்குத் தமிழ்நாட்டில் பின்பற்றப்படும் அனைத்துத் துறை மறுமலர்ச்சிக்கும் அவரது திட்டங்களே காரணம். வீண் பழிச் சுமத்தி வீணர்கள் வீழ்த்த பலமுறை முயன்றாலும், அவற்றையெல்லாம், நெஞ்சுரத்தோடு எதிர்
கொண்டு, வென்று தன் இறுதி மூச்சுவரை சரித்திர சாதனைகள் படைத்தவர். எழுத்து, பேச்சு, இலக்கியம், திரைத்துறை, அரசியல், நிர்வாகம் அனைத்திலும் அவருக்கு இணையாக இன்னொருவரைக் காட்ட இயலாது. கலைஞர் கலைஞர்தான்.

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தந்தை பெரியாரின் சரியான வாரிசு, இனத்தின் வழிகாட்டி, திசைகாட்டி. அண்ணாவிடம் பள்ளிப் பருவத்திலே பாராட்டுப் பெற்றவர். அவரது அறிக்கைகள், ஆய்வுகள் நுட்பம் உடையவை. பெரியாரை உலகமயமாக்கியவர். 93 வயதிலும் சலிக்காது, சளைக்காது உழைப்பவர். அவர் வியப்பின் மறுபெயர் என்பது சாலப் பொருந்தும். பத்திரிகை ஆசிரியராய் உலக சாதனை படைத்தவர்.

மு.க.ஸ்டாலின் அவர்கள் திராவிட மாடல் அரசின் நாயகர். உலகமே திரும்பிப் பார்த்து திட்டங்களைச் செயல்படுத்தும் ஆற்றலாளர். மனித நேயத்தின் மறுவடிவம். அதிகம் பேசாது, செயலால் பதில் கூறும் ஆளுமை மிக்கவர். குட்டி 16 அடி பாயும் என்ற உலக வழக்குக்கு எடுத்துக்காட்டானவர். அவர் இன்னும் சாதிப்பார். தமிழ்நாடும், தமிழ் மக்களும், தமிழ் மொழியும், நாகரிகமும் அவரால் சிறக்கும்.

கேள்வி: தாங்கள் முனைவர் பட்டத்திற்கு செய்த ஆய்வு தலைப்பு என்ன?

பதில்: Ph.D. Thesis (Institution of Marriage and Social Legislations in Tamil Nadu)

கேள்வி: தாங்கள் எழுதிய நூல்கள் எவை?

பதில்: I. Books

  1. Marriage and Social Legislations in Tamil Nadu – 1990
  2. Trend setters in Making, the History of Modern India.
  3. Western – Modernisation and Challenges in Indian Society.
  4. The Trends and Theories in Modern Indian Historiography.
  5. Social Justice and Challenges in Contemporary India.
  6. Number of Articles on Social Ideologies and Institutions of Ancient and Modern India.

கேள்வி: தங்கள் குடும்பம் பற்றிக் கூறலாமா?

பதில்: எனது வாழ்விணையர் பெயர் தமிழ்க்கொடி. அவர் கல்லூரிக் கல்வி இணை இயக்குநராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

எங்களுக்கு யாழினி என்ற மகள். கதிரவன் என்ற மகன். மகள் காயிதே மில்லத் கல்லூரியில் பேராசிரியர். மகன் எம்.சி.ஏ. முடித்து அய்.டி. துறையில் பணியாற்றுகிறார்.

மகளுக்கு இனியா என்ற மகள் உள்ளார். அவர் 11ஆம் வகுப்பு படிக்கிறார்.

மகனுக்கு நிலா என்ற மகள் உள்ளார். அவர் 10ஆம் வகுப்பு படிக்கிறார்.

கேள்வி: உயர்கல்வியில் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் அதிகம் சேர்ந்து படித்து சாதிக்க தாங்கள் கூறும் ஆலோசனை என்ன?

பதில்: ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூக நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக, கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் போன்றவற்றில் வாய்ப்புகள், உரிமைகள் மறுக்கப்பட்டவர்கள்.

தந்தை பெரியார், அம்பேத்கர் போன்றவர்களின் முயற்சியால் சில பத்தாண்டுகளாக, உரிமையும் வாய்ப்பும் பெற்று மேலெழுந்து வருகிறார்கள். கலைஞர் மற்றும் அவரது திருமகனார் ஸ்டாலின் இவர்கள் உயர்கல்வியில் ஒடுக்கப்பட்டோர் மேலெழ பல வாய்ப்புகளைச் சட்டப்படி உருவாக்கியளித்தனர். என்றாலும், இன்னும் நாம் போராடிப் பெற வேண்டியவை பல உள்ளன. அதற்கு இளைஞர்கள் போதை, சினிமா மயக்கத்தில், ஆர்வத்திலிருந்து விடுபட்டு தெளிவு பெற வேண்டும்.

கல்விதான் உயர, வாய்ப்புகளைப் பெற ஒரே வழி என்பதை உள்ளத்தில் உறுதியாகப் பதித்துக் கொண்டு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.

படிப்பு என்பது படிப்பது அல்ல. எதைப் படித்தாலும் ஆய்வுக் கண்ணோட்டத்தில் படிக்க வேண்டும். நூலகங்களைப் பெரிதும் பயன்படுத்த வேண்டும். காரல் மார்க்ஸ், அம்பேத்கர், அண்ணா போன்றவர்களை இதற்கு முன் மாதிரியாகக் கொள்ள வேண்டும்.

ஆங்கிலப் புலமையை உருவாக்கிக் கொள்வது கட்டாயம். பல்நாட்டுத் தொடர்புக்கும், ஆளுமைத் திறனுக்கும் அது கட்டாயம். பேசிப்பழக வேண்டும். கூச்சப்படக் கூடாது.

அகில இந்திய அளவில் சிறந்த கல்வி நிறுவனங்களில் ஒடுக்கப்பட்ட மாணவர்களுக்கு வாய்ப்புகளை வழங்க வேண்டும்.

பொது விடுதிகளை உருவாக்கி, எல்லா தரப்பு மாணவர்களும் சேர்ந்து பழக வாய்ப்புத் தர வேண்டும். அது சமுதாய மாற்றத்திற்குப் பெரிதும் பயன்படும்.

(தொடரும்…)