“உதவித் தொகை வேண்டாம்’’, ‘‘பாதுகாப்பு வேண்டும்’’ என்ற முழக்கமிடும் கானொளியை பலர் பார்த்திருக்கலாம்.
மதிய உணவு திட்டம் கல்வி வளர்ச்சியில் செய்துள்ள பங்களிப்பும், இடஒதுக்கீடும் சமூக அடுக்குகளின் படி நிலையை உடைத்து மேம்பாட்டை கட்டமைத்தன என்ற தமிழ்நாட்டில் வளர்ச்சியில் நலத் திட்டங்களின் பங்களிப்பை பற்றிய எந்த புரிதலும் இல்லாதவர்கள் தான் இப்படி பேசி திரிய முடியும். உதவித் தொகை, ஊக்கத் தொகை என்ற வார்த்தைகளே 2021க்கு பிறகு தான் உரிமைத் தொகையானது..
“உதவித் தொகைக்கும் – உரிமை தொகைக்கும் இடையே ஆன அரசியல்” அர்த்தங்கள் தெரியாத ஒரு கூட்டம், உரிமை தொகை வேண்டாம் என்று இப்படி பேசுவது அபத்தத்தின் உச்சம்.
பெண்கள் பாதுகாப்பையும் பாலின சமத்துவத்தையும் நோக்கிய சமூகத்தை உருவாக்குவது ஓர் அரசின் கடமை . அதே நேரத்தில் பெண்கள் தங்களுடைய பாலியல் பண்டங்கள் என்ற சில ஆண்களின் பார்வையை மாற்ற, சமூக ரீதியான மாற்றங்களை உருவாக்குவது தான் முக்கிய கோரிக்கையாக இருக்க முடியுமே தவிர, “உரிமை தொகை வேண்டாம் பாதுகாப்பு கொடு” என்னும்படியான கோரிக்கைகள்.. சில ஆண்கள் தப்பு பண்ணிகிட்டே இருப்பாங்க.. அரசு பாதுகாப்பு மட்டும் கொடுத்தால் போதும் .. என்று தவறிழைக்கும் ஆண்களுக்கு தான் மறைமுகமாக வலு சேர்க்கும்.
Gender Equality,Gender pay gap , Gender Advocacy, Gender sensitivity இப்படி எந்த புரிதலும் இல்லாதவர்கள் தான் உரிமைத் தொகை வேண்டாம் பாதுகாப்பு வேண்டும் மாதிரியான கோரிக்கைகளை வைக்க முடியும்.
இளம் பெண்கள் அவர்களில் சிலர் அரசின் ஏதோ ஒரு திட்டத்தின் பயனாளிகளாக இருந்து கொண்டே இப்படியான கோரிக்கைகளை வெற்று கூச்சலுக்கு வைப்பது சரியான புரிதலான அரசியல் அல்ல.
இது எல்லாவற்றையும் விட 2021க்கு
பிறகு இந்தியா முழுவதும் நடந்த தேர்தல்களில் மகளிர் உரிமைத் தொகை பிரதானமானது . அனைத்து அரசியல் கட்சிகளின் வாக்குறுதிகளும் உரிமைத் தொகையை மையப்படுத்தியே ஏன் இருக்கிறது என்பதையாவது சிந்திக்க வேண்டும். v


