- கே : எஸ்.அய்.ஆர்க்கு எதிராக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றாதது ஏன் என்று சிலர் கேள்வி எழுப்புவது சரியா?
– ஜி.பரஞ்ஜோதி, மதுரை.
ப : சரியில்லை. எப்பொழுது, எதனை எப்படி செய்யவேண்டும் என்பது முதலமைச்சருக்கும், ‘திராவிட மாடல்’ ஆட்சிக்கும் தெளிவாகத் தெரியும். அதை அப்பொழுது செய்வார்கள்.
எதை முன்னால் செய்வது, எதை பின்னால் வலியுறுத்துவது என்பதெல்லாம் அவர்களுடைய சிறப்பு உரிமை
யாகும். மற்றவர்கள் அதை குறை கூறுவதற்கு இடமேயில்லை.
- கே : அம்மாபட்டினத்தில் நீதிமன்ற உத்தரவுப்படி இஸ்லாமிய குடியிருப்புகளை அகற்றுகின்ற அரசு, தஞ்சையில் சாஸ்திரா கல்வி நிறுவனம் ஆக்கிரமித்துள்ளதை அகற்றாதது ஏன் என்று இஸ்லாமி
யர்கள் எழுப்பும் கேள்வி சரியா?
– எல்.கார்த்திகா, கூடுவாஞ்சேரி.
ப : நூற்றுக்கு நூறு சரியானதாகும். இதில் ஒன்றிய – மாநில அரசுகள் ஏனோ பாராமுகமாக இருப்பதும், தாட்சண்யம் காட்டுவதும் சரியல்ல.
பலமுறை உயர்நீதிமன்றம், உச்சநீதி
மன்றத்தால் கண்டனங்களுக்கு ஆளானது. எனவே, அதனை இடித்து
விட்டு, தீர்வு காணுவதுதான் மிக முக்கியம்.
ஏழை, எளியவர்களிடம் மட்டும் புல்டோசர் போவது சரியா? என்ற கேள்வி பரவலாக எங்கும் இருக்கிறது.
இதில் மனுதர்ம நோக்கு இருக்கக்கூடாது!
- கே : தேர்தல் தோல்வி பயத்தால் தேர்தல் ஆணையத்தை தி.மு.க.
எதிர்க்கிறது என்று கூறி, பா.ஜ.க.வை ஆதரிக்கும் ஜி.கே.வாசன்
‘தன் கட்சியைக் கலைத்துவிட்டு பா.ஜ.க.வில் சேர்ந்துவிடலாம்’ என்ற விமர்சனத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?
– எல்.அப்துல், தஞ்சாவூர்.
ப : இனிமேல் அவர் பா.ஜ.க.வில்
சேரவேண்டுமா, என்ன? அது ஏற்கெனவே முடிந்த முடிவாயிற்றே! மாநிலங்களவை அப்படித்தானே கிடைத்தது !
- கே : அனைத்துத் துறைகளிலும் உலக அளவில் பெண்கள் படைத்து
வரும் சாதனைகள், பெரியார் விரும்பிய சமுதாயம் உருவாவதின் அடையாளம்தானே?
– வ.செந்தில், அறந்தாங்கி.
ப : கேள்வியும் நீங்களே, பதிலும் நீங்களே! நன்றி!!
- கே : விண்வெளிக்கு ராக்கெட் அனுப்பும் முன் வெங்கடாசலபதிக்கு வேண்டுதல் செய்யும் இஸ்ரோ விஞ்ஞானிகள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
– ச.தமிழ்மணி, திருச்சி.
ப : விஞ்ஞானத்தைத் தவிர அவர்கள் அஞ்ஞானத்தையும் சேர்த்துப் படித்திருக்கிறார்கள் என்பதை நாளும் நிரூபித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
பாவம், பரிதாபத்திற்குரிய விஞ்ஞானம்! அது அவர்களிடம் படும்பாடு ! பரிதாபத்திற்
குரிய நிலைதான் – எனவே, அவர்களிட
மிருந்து விஞ்ஞானத்தைக் காப்பாற்ற
வேண்டும்.
- கே : உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் ஒன்றிய அரசின்மீது சட்டப்படி எதிர்வினையாற்றினால் என்ன?
– எம்.ஜான்சன், அரவக்குறிச்சி.
ப : எதை எப்படி செய்வது என்பது உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி கவாய் அவர்களுடைய அறிவுக்கு, ஆற்றலுக்கு உரியது. தேவையில்லாததையெல்லாம் நாம் சொல்லவேண்டிய அவசியமில்லை.
பல நேரங்களில் அவர், குற்றவாளியைத் தண்டிப்பதைவிட, வெறுப்பதைவிட, அவர்களைப் பொறுப்பதும், மன்னிப்பதும்
தான் அவரிடம் மிகப்பெரிய அளவில் ஆழமாக வேரூன்றியிருக்கிறது.
மற்றவர்களை வெறுக்க, துன்புறுத்த அவருடைய மனிதத்தன்மை இடம் கொடுப்பதில்லை. அவ்வளவு பெரிய மனிதர்; அதனால், சிறிய மனிதர்
களை அவர் பொருட்படுத்தவில்லை.
- கே : தனி மனிதர்களின் குற்றச்
செயல்பாடுகளை அரசியல் ஆதாயத்திற்காக ஊதிப் பெரிதாக்
கும் அரசியல் தலைவர்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
– த.கலைமணி, செம்பாக்கம்.
ப : பாவம், பரிதாபத்திற்குரிய அவர்
களுக்கு வேறு சரக்கு இல்லை. அதனால், எதை எதையோ தேடுகிறார்கள்.
எனவே, தனிப்பட்ட இரண்டு பேருக்
கிடையில் நடக்கக்கூடிய பிரச்சினைகளை
யெல்லாம், சமுதாயப் பிரச்சினைகளாக்கி, இப்படி எதை எதையோ செய்து திசை திருப்பி, அரசியலில் கொள்கை சூன்யமான தங்களை நிலைப்படுத்திக் கொள்கிறார்கள்.
- கே : லாட்டரி அதிபரின் மருமகன் கீழ்த்தரமாக பொய்யான கருத்துகளை, வன்முறையைத் தூண்டும் வகையில், கட்டுப்பாடின்றி பேசிய பின்னும் அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன்?
– எம்.ஆரோக்கியராஜ், சேலம்.
ப : நீதிமன்றத்தில் அந்த வழக்கு இருக்கிறது. நீதிமன்ற உத்தரவு இருக்கும்போது, அரசு தன்னிச்சையாக நடவடிக்கை எடுக்காது.
ஆகவே, நீதிமன்றத்தில் அந்தப் பிரச்சினை
இருக்கும்போது, அரசின், தனி நடவடிக்கை என்பது விரும்பத்தக்கதல்ல.
- கே : ‘‘மகளிர் பாதுகாப்பிற்கு முழு மதுவிலக்கு வேண்டும்’’ என்ற திருமாவின் கருத்தை ஏற்று நடைமுறைப்படுத்துவது அரசுக்கு இயலக்கூடியதா? தங்கள் கருத்து என்ன?
– ஆர். ஹேமந்த், கும்மிடிப்பூண்டி.
ப : இன்றைய நிலையில் இயலக்கூடியது அல்ல. ஆனால், இயலக்கூடியதாக ஆக்க
நாம் எல்லோரும் முயற்சி செய்தால், நிச்சயம் வெற்றி பெறுவோம் !


