Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

“வீர” சிவாஜியின் “கோழை” வரலாறு

ிவாஜி அந்தப் பார்ப்பனத் தூதனுக்கு உரிய மரியாதைக் கொடுத்து வரவேற்று, அவனைத் தனியே சந்தித்தான். ‘உலகில் பிராமண குலம்தான் உயர்ந்த குலம். அத்தகைய சீலம் வாய்ந்த குலத்தில் உதித்த பிராமணராகிய தங்களை நான் மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன். இந்து மதத்தையும், சனாதன தர்மத்தையும் பார்ப்பனர்களையும், பசுக்களையும் காப்பதே என் கடமை என பாடுபடுகிறேன். அப்சல்கான் புரந்தரில் விட்டோபா கோயிலையும் வழியில் இருந்த மற்ற கோயில்களை இடித்ததையும் தாங்கள் உணராதவர் அல்லர். இந்து தர்மத்தின் வீழ்ச்சியை உண்மையான பிராமணனான உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது என நம்புகிறேன். அதனால் அப்சல்கானை அழிக்க
நீங்கள் உதவ வேண்டும் என வேண்டினான். அப்படி செய்தால் ஏராளமான பொன்னும், பொருளும், நிலங்களும் தருவதாக ஆசை காட்டினான். அதை ஏற்றுக் கொண்ட கிருஷ்ணாஜி
பாஸ்கர், சிவாஜியோடு சேர்ந்து சதி வலை விரித்தான். (ஆதாரம்: பார்ப்பனர் சூழ்ச்சியும், மன்னர்கள் வீழ்ச்சியும். கோ.இமயவரம்பன்.)

சிவாஜி, கிருஷ்ணாஜி பாஸ்கரிடம் மேற்கொண்டு ஒரு உதவியை வேண்டினான் ‘அப்சல்கானிடம் தாங்கள் திரும்பிச் சென்று பயத்தின் காரணமாகச் சிவாஜி மூளைக் கோளாறு அடைந்தவனாக இருக்கின்றான் அவன் உடனடியாக சரணடைய விரும்பினாலும், தங்கள் முகாமுக்கு வரவே அஞ்சுகிறான். எனவே அஞ்சா நெஞ்சமும், ஆற்றல் மிக்கவருமான தாங்களே நேரில் சென்று, அந்தக் கோழையின் சரணாகதியை ஏற்று கைது செய்வதே மேல் என சாதுரியமாகப் பேசி அப்சல்கானை இங்கு வர உடன்படச் செய்ய வேண்டும்” என்றும் கேட்டுக் கொண்டான். அப்சல்கானின் தூதனாக வந்த பார்ப்பனத் துரோகி கிருஷ்ணாஜி சிவாஜிக்கு அப்படியே செய்வதாக வாக்களித்தான் என்ற துரோகம் வரலாறு (ஆதாரம்: பார்ப்பனர் சூழ்ச்சியும், மராட்டிய மன்னர்கள் வீழ்ச்சியும். கோ.இமயவரம்பன்.)

கிருஷ்ணாஜி பாஸ்கர், அப்சல்கானிடம் வந்து “சிவாஜி சமாதான உடன்படிக்கைக்கு இசைந்து விட்டான். அவன் மிகவும் பயந்த கோழையாக மூளைக் கோளாறுடையவனாகவும் இருக்கிறான். இங்கு வந்து தங்களைச் சந்திக்க அஞ்சுகிறான். எனவே நாம் அவன் இருப்பிடம் சென்று அவனை கைது செய்து விடலாம். படை எடுத்து செல்வதும், பொருட் செலவும், உயிரிழப்பும் இல்லாமலும், மற்ற தொல்லைகள் ஏதும் இல்லாமல் அவனை அடக்க இது
நல்வாய்ப்பு” என்று கபட மொழி பகன்றான். அதை நம்பிய அப்சல்கானும், கிருஷ்ணாஜி பாஸ்கர் மேல் இருந்த அளவற்ற நம்பிக்கையாலும் அவன் ஆலோசனைக்கு உட்பட்டு சிவாஜியைத் தனியாக, அவனிடத்திலேயே சென்று சந்திக்க ஒத்துக் கொண்டான். (ஆதாரம்: பார்ப்பனர் சூழ்ச்சியும், மன்னர்கள் வீழ்ச்சியும் புலவர்.கோ.இமயவரம்பன்)

அப்சல்கானுக்கும், சிவாஜிக்கும் பிரதாப்கா
ருக்கு அருகில் உள்ள “பார்” என்ற இடத்தில் நடந்தது. துரோகி கிருஷ்ணாஜி பாஸ்கர் இடம், நேரம் எல்லாம் குறித்தான். சிவாஜி, கவச
உடையை உள்ளே அணிந்து
அதை மறைக்கும் வண்ணம்
மேலாடை அணிந்திருந்
தான். உள்ளே குறுவாள் ஒன்றையும் மறைத்து வைத்திருந்தான் தொப்பிக்
குள்ளும் இரும்புக் கவசமும்
அணிந்திருந்தான். இடக்கையில் தெரியாதவாறு
“பாக்நாக்” என்ற (புலி நகம்) இரும்பால் ஆன ஆயுதத்தை கையில் மறைத்து வைத்துக் கொண்டு அப்சல்கானைச் சந்திக்கச் சென்றான் இஸ்லாமிய முறையில் அப்சல்கான் அவனை அனைத்து வரவேற்க முயன்றபோது பாக்நாக்கால் அவன் வயிற்றைக் கிழித்தும், மறைத்து வைத்த குறுங்கத்தியால் குத்தியும் சிவாஜி அவனைக் கொன்றான். அப்சல்கான் சிவாஜியின் கழுத்தை நெறிக்க முயன்றான். ஆனால், அவன் முயற்சி வெற்றி பெறவில்லை. இறந்து விழுந்தான். அவன் அலறல் கேட்டு, அவனுடன் வந்த மெய்காவலர்களையும் சிவாஜி கொன்றான். இந்தச் சதிச்செயல் நடந்தபோது இதற்கு காரணமான துரோகிப் பார்ப்பான் கிருஷ்ணாஜி பாஸ்கரும் அந்த இடத்திலேயே இருந்தான். (ஆதாரம்: பார்ப்பனர் சூழ்ச்சியும், மன்னர்கள் வீழ்ச்சியும். கோ. இமயவரம்பன்)

அப்சல்கானின் கொலைக்குப் பின் தலைமை இல்லாமல் இருந்த அவன் படையைச் சிவாஜி நிர்மூலமாக்கினான். ஆயுதங்களையும், அவர்கள் கொணர்ந்த அளவற்ற பொருள்களையும் கொள்ளை அடித்தான். சிவாஜியின் இந்த வெற்றி, அவனைத் தக்காணத்தின் பெரும் வீரனாக உருவாகக் காரணமானது சிவாஜி இந்த வெற்றியைத் தொடர்ந்து கொங்கணம், கோல்காபூர்மீது படையெடுத்து – பான்ஹலா, வசந்தகர், கெல்னா, பங்க்னா ஆகிய கோட்டைகளைப் பிடித்து அங்குள்ள பெருஞ்செல்வத்தைக் கொள்ளையடித்து அவற்றோடு 1660 ஜனவரி மாதக் கடைசியில் தலைநகர் ரெய்கருக்கு திரும்பினான். 1664இல், சிவாஜி அவுரங்கசீப்பின் அரசுப் பிரதிநிதியாக இருந்த ஷெயிஸ்டகானை வென்று சூரத்தைத் தாக்கிக் கொள்ளையடித்தான். ஒரு கோடி ரூபாய்க்கு மேல் கொள்ளையடித்ததாக ஒரு வரலாற்றுக் குறிப்பு உள்ளது.இது போன்றே 240 கோட்டைகளுக்கு மேல் சிவாஜி வென்றான்.ஒவ்வொரு கோட்டையிலும், தலைவனாக இருந்தவன்
மராட்டிய தளபதியாக இருந்தவன் (பார்ப்பனரல்லாதவன்). ஆனால் கோட்டையின் நிருவாகியாக சகல அதிகாரம் பொருந்தியவனாக மராட்டிய பார்ப்பனனாகவும்,காவல் பொறுப்பில் மாவல் வீரனும் என மூன்று ஜாதியினரும் இருக்கும்படி சிவாஜி ஏற்பாடு செய்திருந்தான் (ஆதாரம்: பார்ப்பனர் சூழ்ச்சியும், மன்னர்கள் வீழ்ச்சியும். கோ.இமயவரம்பன்.)

அரசனாக முடிசூட்டிக் கொள்ளாவிடினும், நிருவாகம் சிவாஜியாலேயே நடத்தப்பட்டது. தான் பிடித்தக் கோட்டைகளில் நிருவாகம் செய்ய நியமிக்கப்பட்டவர்கள் தவிர்த்து, அவன் தங்கியிருந்த “ரெய்கார்’’ கோட்டையில் தனக்கு ஆலோசனை கூற 8 அமைச்சர்கள் அடங்கிய ஒரு குழுவினை ஏற்படுத்தி இருந்தான். இந்த 8 அமைச்சர்களில் ஒரு போர்துறை அமைச்சரைத் தவிர மற்ற 7 அமைச்சர்களும் பார்ப்பனர்களாகவே இருந்தனர். அவன் வென்ற கோட்டைகளிலும் நிருவாகத்தில் பார்ப்பனர்களாகவும், ரெய்காரிலும் பார்ப்பன அமைச்சர்களே ஆதிக்கம் செலுத்திய நிலையில் மராட்டியத்தில் பார்ப்பனர் அதிகாரம் கொடி கட்டி பறந்தது. ஏற்கனவே தன் தாயாராலும், குருவாலும், காப்பாளாராலும் இந்துமத வெறியையும், பார்ப்பனர்கள்தான் சமூகத்தின் உயர்வானவர்கள் என்ற எண்ணத்தில் வளர்ந்த காரணத்தால் பார்ப்பனர்கள் அடிமையாகவே சிவாஜி மாறிப்போனான் கோடிக்கணக்கான ரூபாய்களுக்கு அதிபதியாக இருந்த மராட்டிய மாவீரன் அவ்வளவு செல்வத்தையும் இழக்கும் நிலையை இதே பார்ப்பனர்கள் ஏற்படுத்
தினர் என்ற சோகத்தை சிவாஜி சந்தித்தான். (ஆதாரம்: சிவாஜி முடிசூட்டலும், பார்ப்பனி
யமும். சர்.ஏ.இராமசாமி முதலியார்.)

மராட்டியத்தின் ஆரிய திராவிடப் போராட்டம் சிவாஜி காலத்திலேயே உண்டான ஒன்று பார்ப்பனர்
களைச் சிவாஜி எவ்வளவு உயர்ந்த நிலையில் வைத்
திருந்தாலும், பார்ப்பனர்கள் சிவாஜியை மிகவும் கேவலமாகவே நடத்
தினர். சுற்றிலும் முஸ்லிம்
மன்னர்கள் இருந்தாலும், தன் மாறுபட்ட அணுகுமுறையாலும்(கொரில்லா போர் முறையால்), போர்த் தந்திரங்களாலும் பரந்துப்பட்ட ஒரு நிலப்பரப்பினை கொண்ட ஓர் “இந்து” அரசினை (மராட்டிய அரசை) நிறுவினாலும், அரசனாக முடிசூட்டிக் கொள்ள பார்ப்பனர்கள் விடவில்லை. முடிசூட்டிக் கொள்ளாததால் பீஜப்பூர்,கோல் கொண்டா சுல்தான்களும், அவுரங்கசீப்பும் அவனை ஒரு கொள்ளைக்காரன் என்ற நிலையிலேயே எண்ணியிருந்தனர்.அவுரங்கசீப்போ ஒரு படி மேலே போய் சிவாஜியை மோசடிக்காரன் என்றும், முகலாய பகுதிகளை மோசடியாக அபகரித்துக் கொண்ட மூர்க்கன். (ஆதாரம்: பார்ப்பனர் சூழ்ச்சியும், மன்னர்கள் வீழ்ச்சியும்.)

சிவாஜியின் முன்னோர்கள் நிலத்தை உழுது பயிர் செய்யும் உழவர்கள், சாஸ்திரப்படியும். அக்கால நடப்புப் படியும் அவர்கள் இனத்தால் சூத்திரர்கள் இனத்தால் சத்ரியனானவர்களே அரசனாக முடியும் என்ற பார்ப்பனர்களால் ஏற்படுத்தப்பட்ட சமூக அமைப்பு இருந்ததால், சூத்திரனான சிவாஜி மன்னனாக முடி சூட்டிக் கொள்வதற்கு பார்ப்பனர்கள் முட்டுக்கட்டைப் போட்டனர். சிவாஜி அரசனாவதற்கு மராட்டியத்தின் மற்ற மேல் ஜாதிக்காரர்களும் பார்ப்பனர்களால் தூண்டப்பட்டு எதிர்த்தனர். அப்பேர்ப்பட்ட மாவீரன் எளிமையாக மராட்டியப் பேரரசை நிறுவியவன், பார்ப்பனர்களைப் பூதேவர்களாகவே நினைத்து வழிபட்டவன் பார்ப்பனர்களால், ஜாதியின் பேரால்  சிறுமைப்படுத்தப்
பட்டதும், “சூத்திரன்’’ எனக் கேவலப்படுத்தப்பட்டதும், அதனால் மன்னனாக முடியாமல் வாய்ப்பு மறுக்கப்பட்டதும் மராட்டியத்தில் அன்றே (1650) நிகழ்ந்தது. (ஆதாரம்:  ‘சிவாஜி முடி
சூட்டலும், பார்ப்பனியமும்’ சர்.ஏ.இராமசாமி முதலியார்.)

‘சூத்திர’ப் பிறப்பால் அரசப் பதவி ஏற்க முடியாத நிலையில் மாட்டிக் கொண்ட”மலை எலி”, மாவீரன் சிவாஜி,ஒரு மராட்டியக் குடிமகன் என்ற அளவிலே மதிக்கப்பட்டானே ஒழிய.அவன் சொந்த நாட்டு மக்களிடம் கூட அரச மரியாதையையோ, விசுவாசத்தையோ பெற முடியவில்லை. மற்ற மன்னர்களிடம் “மன்னன்” என்ற முறையில் உடன்படிக்கைகளில் கையொப்பமிடவோ, வேறு ‘‘அரசாணை’’களைப் பிறப்பிக்கவோ முடியவில்லை. படைத் தலைவன் என்ற நிலையிலேயே சொந்த மக்களாலும், கொள்ளைக்காரன் என்ற மற்ற மன்னர்களாலும் நினைக்கின்ற நிலையே இருந்ததனால் “அரசனாக” முடி சூட்டிக் கொள்ள வேண்டும் என சிவாஜி நினைத்தான். (ஆதாரம்: ‘பார்ப்பனர் சூழ்ச்சியும், மன்னர்கள் வீழ்ச்சியும், கோ, இமயவரம்பன்)

தொடரும்…