Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

‘ஆல்பா மேல்’ (Alpha Males) கருத்தகமும் மனித உரிமை மீறல்களும்?

மனித உரிமை மீறல்களும்,
ஆல்பா மேல்களும்

சில நாட்களுக்கு முன்பு, அமெரிக்க தொழிலதிபர், டெஸ்லா கார், ஸ்பேஸ் எக்ஸ், டிவிட்டர்/எக்ஸ் நிறுவனங்களின் அதிபர் எலான் மஸ்க் ‘High T-Alpha Males’ என்று அவருடைய டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவு போட்டார். Men with high testosterone levels என்று இதற்கு அர்த்தம். அதாவது ஆண்களே சுயமாக சிந்திக்கும், இந்த உலகை வழிநடத்தும் தகுதிக் கொண்டவர்கள் என்று எலான் மஸ்க் கூறினார். சமூக ஊடக செல்வாக்காளர்களான (Social media influencers) ஆண்டருவ் டெய்ட் (Andrew Tate) மற்றும் அவரது சகோதரர்கள் தங்களை ‘ஆல்பா மேல்’ என்று கூறிக்கொண்டு ஆணாதிக்கத்தையும், பெண் வெறுப்பையும் இணையத்தில் பகிர்ந்துத் தள்ளியதன் மூலம் மிகப்பெரிய இளைஞர்கள் கூட்டத்தை ஈர்த்தனர். ஏறக்குறைய பத்து மில்லியன் பேர் இவர்களை டிவிட்டரில் பின்தொடர்ந்தனர். ஹஸ்லர்ஸ் பல்கலைக்கழகம் (Hustler’s university) என்ற பெயரில் இவர் பல வகுப்புகளை நடத்தினார். அதில் நூறு ஆயிரம் பேர் சேர்ந்தனர். இப்போது, இங்கிலாந்து நாட்டில் பாலியல் பலாத்காரம், மனித கடத்தல் உள்ளிட்ட வழக்குகளை ஆண்ட்ருவ் டெய்ட் மற்றும் அவரது சகோதரர்கள் எதிர்க்கொண்டுள்ளனர். புதிய தாராளமய உலகில், பொருளியல் வெற்றிகளும், அதிகாரமுமே ஒரு மனிதனின் வெற்றியை நிர்ணயிக்கும் அளவுகோல்களாக மாறி நிற்கிறது. இதன் அடிப்படையிலேயே, ஆல்பா மேல் என்கிற ஆணாதிக்க உளவியலை  நாம் புரிந்துக்கொள்ளவேண்டியவர்கள் ஆகிறோம்.

உலகமெங்கும், வலிமையின் பேராலும்,
தேசப்பற்று என்கிற பெயரிலும் வலதுசாரிகள்,
சிறுபான்மையினருக்கு எதிரான நிலைபாடுகளை அதிகரித்துக்கொண்டே இருக்கின்றனர். அது பெண்களுக்கு எதிரானதாகவும், குழந்தைகளுக்கு
எதிரானதாகவும், ஒட்டுமொத்த மனித
நேயத்திற்குமே எதிரானதாகவும் மாறிவருகிறது.
நகைமுரண் என்னவெனில் இப்படியானவர்
களை ‘ஆல்பா மேல்’ என்று இளைஞர்கள் கொண்டாடுகின்றனர். அவர்கள் சிறந்த ஆணுக்கான லட்சிய மாடல்களாக நிறுவப்படு
கின்றனர். சுயநலமும், மிதமிஞ்சிய முதலாளித்து
வமும் வெற்றிக்கான அடிப்படைகளாக உருவாக்கப்பட்டிருப்பதை காண்கிறோம்.

தியாகம், கருணை போன்ற விழுமியங்கள்
கெட்ட வார்த்தைகள் ஆக்கப்பட்டு, அவை
பலவீனத்தின் அறிகுறிகளாக காட்டப்படு
கின்றன. பொருளியல் வெற்றியும், சுயநலமும்
மட்டுமே சாதனைகளாக முன்வைக்கப்
படுகின்றன. இந்திய கிராமங்களில், ஒருகாலத்தில்
மற்றவர்களுக்காக உழைத்த, சமூகம் பற்றிச் சிந்தித்த இளைஞர்கள், சமூகத்திற்காக போராடுவதற்காக இயக்கங்களில்
சேர்ந்த தன்னலமில்லாத இளைஞர்கள் சட்டென்று காணாமல்
போனார்கள். மிதமிஞ்சிய நுகர்வு
வெறியால் ஈர்க்கப்பட்டு அதனை
முன்னெடுக்கப்படுபவர்களாக, சுயநலவாதிகளாக, பெற்றோரை
யும், மற்றவர்களையும் சுரண்டுபவர்
களாக இளைஞர்கள் மாறிவருவது
தான் இந்தக் காலகட்டத்தின்
மிகப்பெரிய சவால்.

இன்றைய இந்த சீரழிவிற்கான ஆரம்ப அறிகுறிகள் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தோன்ற துவங்கின. ஒருகாலத்தில் அதிகம் விற்கும் புத்தகங்களாக சே குவாரா பற்றிய புத்தகங்களான ‘தெ மோட்டார் சைக்கிள், டயரிஸ்’, ‘ஒரு போராளியின் வாழ்க்கை’ போன்றவையும், நெல்சன் மண்டேலாவின் ‘long walk to freedom’, காந்தியாரின் சத்யசோதனை (The story of my experiments with truth) போன்றவையும் அதிகம் கண்ணில் தென்பட்டன. லட்சியவாதமும், மானுட நேயமும் கொண்டாடப்பட்ட காலமாக அது இருந்தது. திடீரென்று ஒரு நாள் எல்லாம் மாறியது. விமான நிலையங்களின் புத்தக கடைகளில் எலான் மஸ்கும், டிரம்பும் அமர்ந்திருந்தனர். நடைமுறையில் சாத்தியமில்லாத, ஒரே பாட்டில் பணக்காரனாவது எப்படி, Atomic habits, rich dad and poor dad, Think like a billionaire போன்ற புத்தகங்கள் அந்த வரிசையில் இடம்பிடித்தன. இது மாறுதலின் காலகட்டம்.

லட்சியவாதம் இன்று கேலிக்குரியதாக மாற்றப்பட்டு, ஒவ்வொருவரும் வெற்றிகரமாவது எப்படி, மிதமிஞ்சிய செல்வத்தை அடைவது எப்படி என்கிற போட்டிக்குள் தள்ளப்பட்டனர். இதில் மனிதாபிமானம், சக மனிதர்களுக்கான கண்ணீர் இவையெல்லாம் வலிமையின்மையின் குறியீடுகளாக, இயலாமையின் அடையாளங்களாக மாற்றப்பட்டுள்ளன. இப்படி மாறபோவதற்கான அறிகுறிகள் இன்னும் முன்நோக்கி பார்த்தால், எழுத்தாளர் அயான் ராண்டு
(Ayn Rand) எழுதிய Atlas shrugged, fountain head, virtue of selfishness போன்ற புத்தகங்கள் பத்து மில்லியன் காப்பிகள் விற்றபோதே துவங்கி விட்டது. Objectivisim என்னும் புறவயவாத தத்துவத்தை முன்வைத்து, Collectivism என்னும் திரள்மையவாதத்தை நிராகரித்தது அயன் ராண்டின் எழுத்துகள். ஒரு தனி மனிதனின் மகிழ்ச்சி, தனிமனித சாதனைகள் போன்றவற்றை முன்வைத்து, மற்றவர்களுக்கான வாழ்க்கை, தியாகம் போன்ற விழுமியங்களை முற்றிலுமாக நிராகரித்தது அயான் ராண்டின் எழுத்துகள். அயான் ராண்ட் உடனடியாக இளைஞர்களின் அய்கானாக மாறிப்போனார்.

தற்போதைய இந்த ‘ஆல்பா மேல்’ உருவகங்கள்
ஒரு லட்சிய ஆணை உருவகிக்கின்றது. அந்த ஆண்
தன்னுடைய தலைமை பண்பால் மற்ற அனைவரையும் அதிகாரம் செய்யும் நிலைக்கு உயர்ந்து அனைவரையும் கட்டுப்படுத்துபவனாக ஒரு கருதுகோளை முன்வைத்தது. டேவிட் மெக் (David Mech) என்னும் அமெரிக்க உயிரியலாளர் ஓநாய்களின் குணநலன்களை ஆராய்ந்து, இந்தக் கருத்தாக்கத்தை முன்வைத்தார்.
ஓநாய் கூட்டத்தில், ஓர் ஆண் ஓநாய் தன்னுடைய கருணையில்லாத அதிகாரத்தால், சீற்றத்தால், தலைமை குணத்தால் மற்ற அனைத்து ஓநாய்களையும் கட்டுப்படுத்தி ஆக்ரமிக்கிறது. இதுவே ‘ஆல்பா மேல்’ என்று அவர் முன்வைத்தார். இந்த கருதுகோள் மனிதர்களுக்கும் பொருந்தும் என்று அவர் கருதினார். இப்படித்தான் ‘ஆல்பா மேல்’ உருவகங்கள் சமுதாயத்தில் மிகவேகமாக பரவின. பிறகு டேவிட் மேக்கே, தனது இந்தக்
கருதுகோள் சிறைப்பிடிக்கப்பட்ட ஓநாய்களுக்கு மட்டுமே பொருந்தும். சிறைப்பிடிக்கப்பட்ட சூழலில் உறவுமுறைகள் அர்த்தமிழந்து, தனி மிருகங்களாக அவை ஆகின்றன. அந்தச் சூழலில் ஒன்றை ஒன்று கட்டுப்படுத்தி அதிகாரம் செலுத்த முயன்று ஒரு ஓநாய் வெல்கிறது. ஆனால், அதன் இயல்பான காட்டு சூழலில், ஓநாய்கள் கூட்டமாகவே ஆணும், பெண்ணுமாய் தனது குடும்பத்தைப் பாதுக்காக்கிறது. அதுவே அதன் இயல்பான குணம்
என்று அவர் முன்வைத்
தார். ஆக, ஆல்பா மேல்
உருவகமே, ஒரு ஊதி,
பெரிதாக்கப்பட்ட ஒரு போலி பிம்பமே.

இப்படி உருவாக்கப்
பட்ட ஒரு போலி உருவகம் இன்றைய இளைஞர்கள் மீது செலுத்தும் ஆதிக்கம் எல்லையில்லாதது. அது ஆண்களுக்கு கொடுக்கும் மன அழுத்தமும் எல்லை
யில்லாதது. மனித உணர்வு
களுக்கு எதிரான பல
நிலைபாடுகளை அந்த
உருவகம் கொடுத்திருக்
கிறது. தங்களுடைய இயல்
பான மனித உணர்ச்சி
களைக் கூட அவர்களால்
வெளிப்படுத்த இயலாத
வண்ணம் அந்த ‘ஆல்பா மேல்’ கருதுகோள் அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்துகிறது. நெருங்கிய உறவுகளைக் காயப்படுத்தி அவர்களிடமிருந்து அன்னியப்படுத்திவிடுகிறது.

நீண்டக்கால அளவில் அவர்களுடைய மகிழ்ச்சியைப் பறித்துவிடுகிறது. இது மனிதர்களை இரு தரப்பாக மட்டும் பிரிக்கிறது. ‘ஆல்பா மேல்’ (Alpha Male), ‘பீட்டா மேல்’ (Beta Male) என்று இரு தரப்பாக மட்டுமே மனிதர்களைப் பார்க்கிறது. அப்படி பைனரியாக (வெறும் பாலின அடையாளத்துடன்) மட்டும் மனிதர்கள் இல்லை. பலதரப்பட்ட குணாம்சங்கள் கொண்ட கலவையாகவே மனிதன் இருக்கிறான். மற்றொருபுறம், முதிரா (முதிர்ச்சியடையாத) இளைஞர்கள், தங்களுக்கான சிந்தனையை வளர்த்தெடுக்கும் பருவத்தில் உள்ளவர்கள் மிக எளிதாக இந்தக் கவர்ச்சி வலையில் சிக்கிக்கொள்கிறார்கள். தங்களை ‘ஆல்பா மேல்’ என்று இணையத்தில் தமக்கு தாமே முன் வைத்துக்கொண்டு தவறான பிரச்சாரத்தில் ஈடுபடுவர்களிடம் அவர்கள் சிக்கிக்கொள்
கிறார்கள். முரட்டுத்தனமே பலம் என்று நம்ப வைக்கப்படுகிறது. பாப் கலாச்சாரத்திலும் இதே விதமான ‘ஆல்பா மேல்’ உருவகங்கள் முன்வைக்கப்படுகிறது. ஒரே ஒரு முறை இந்த இளைஞர்கள், சிறுவர்கள் இதுபோன்ற ‘ஆல்பா மேல்’
பதிவுகளை, வீடியோக்
களை இணையத்தில் பார்த்தால் போதும். தொடர்ந்து இணையத்தின்
தொழில் நுட்பம் அவர்
களுக்கு அதே போன்ற பதிவுகளை அவர்களது பக்கத்தில் நிறைக்கும். இணையத்தில் நாம்
ஒவ்வொரு விநாடியும் கண்காணிக்கப்படு
கிறோம். நாம் செல்லும் பக்கங்கள்
எல்லாம் நம்முடைய கணிப்பொறியில், கைப்பேசியில் தங்களுக்கான குக்கிகளைப் பத்திரப்படுத்திவிடுகிறது. பிறகு, நாம் இணையத்தில் எந்தப் பக்கம் சென்றாலும், முன்பு நாம் தேடிய பதிவுகளின் அடிப்படையில் நம்முடைய கண்கள் கட்டப்படும். தொடர்ந்து ‘ஆல்பா மேல்’ பதிவுகளும், அது தொடர்பான வீடியோக்களாலும் நாம் வழிநடத்தப்படுவோம்.

(தொடரும்…)