Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

கவிதை – இங்கிலீஷ்லிருந்து . . .

கவிதை – இங்கிலீஷ்லிருந்து . . .

மன்னிப்புக் கோருகிறேன் – நஜ்ரின் ஃபஸல்

மிகக் கடுமையான தண்டனைக்கு உள்ளாக வேண்டிய மாபெரும் குற்றம் ஒன்றை இழைத்துவிட்டதற்காக!

தவறான குரோமோசோம்களோடு (பெண்ணாகப் ) பிறக்க நேர்ந்ததற்காக நான் வருந்துகிறேன். என் தரப்பு நியாயம் என்னவெனில்  XX விரும்புகிறாயா, XY வேண்டுமா என்று தேர்வு செய்யுமாறு

என்னிடம் கேட்கப்படவில்லை! எனது சொந்த விருப்பம் XY அதுதான் வீதிகளில் வெப்பமூட்டுகிறது என்பது என் காதில் விழுகிறது.

எனது மார்பு தட்டையாக இல்லாது போனதற்காக நான் மன்னிப்புக் கோருகிறேன். எனது இடுப்புகள் வளைந்திருப்பதற்காகவும்!

எனக்குப் புரியாதிருக்கிறது

எனது உடல் கவனத்தை ஈர்க்கிறது என்பது. சொல்லப் போனால்
கவனத்தைக் கோருவதாகவும் இருக்கிறது.

மன்னிக்கவும் உங்களது முரட்டுத்தனமான கடந்து போதலை ஒரு பவ்வியமான புன்னகையோடு நான் எதிர்கொள்ளாது போய்விட்டேன்.

ஆனால், இப்போது எனக்கு நன்றாகவே புரிகிறது பொதுவிடங்களில் நான் தோன்றுவதற்காக மன்னிப்புக் கோருகிறேன். என் மீது ஒரு முரட்டுத் தாக்குதல் நிகழாதிருக்க வேண்டுமானால் நான் எவ்வளவு எச்சரிக்கையோடு நடந்து கொண்டிருக்க வேண்டும்…

ஒவ்வொரு முறை நான் வீட்டை விட்டு வெளியே காலடி எடுத்து வைக்கும் போதும் உங்களுக்குள் இருக்கும் குகை மனிதனை உசுப்பி விடுகிறேன் என்பதற்காக நான் மன்னிப்புக் கோருகிறேன்.

எனது சகோதரி தனக்கு உரிமைகள் வேண்டும் என்று கேட்டதால் அவற்றை அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியதற்காக நான் மன்னிப்புக் கோருகிறேன்.

அது அவளது குற்றம் அல்லவா!

//புது தில்லி மாணவிக்கு நிகழ்ந்த கொடூரத்திற்கு அவளே பொறுப்பு என்று சிலர் (அதிலும் பெண்மணி ஒருவர்) சொன்னதில் ஏற்பட்ட அதிர்ச்சியில், மீடியா மற்றும் கம்யூனிகேஷன் ஸ்டடீஸ் இறுதியாண்டு மாணவியான நஜ்ரீன் ஃபஸல் எழுதிய இந்தக் கவிதை தி ஹிந்து நாளேட்டின் ஞாயிறு திறந்த பக்கத்தில் (03-02-2013) வெளியாகி உள்ளது. //

தமிழில்: எஸ்.வி.வேணுகோபாலன்