“இமய எல்லைக்கு எட்டிக் கொண்டிருக்கக் கூடிய இயக்குநர் மாரி செல்வராஜ் அவர்களுடைய இயக்கும் தன்மையும், கதை அமைப்பையும் பார்த்தபோது இது வெறும் படமல்ல, சமூகத்தின் பாடம் என்று தோன்றுகிறது… இந்தப் படங்கள் இப்பொழுது தேவைப்படு
கிறது… ஆயிரம் பொதுக் கூட்டத்தில் பேசுவதை விட, ஒரு திரைப்படம் மூலமாகச் சிறப்பாக உணர்த்த வேண்டியவர்களுக்கு உணர்த்தக்கூடிய ஓர் அற்புதமான படம்…”
இதுவரையில் யாருடைய கவனம் இதில் போகவில்லையோ, அதை இயக்குநர் மாரி செல்வராஜ் அவர்கள் செலுத்தியிருக்கிறார். அதற்காகவே ஆயிரம் பாராட்டுகள்.
அவர் வளர வேண்டும். அவருடைய சிறப்புப் படைப்பாற்றல் இந்தச் சமுதாய மாற்றத்துக்கு புரட்சிகரமாக இருக்க வேண்டும். அம்பேத்கர் அவர்களும், தந்தை பெரியார் அவர்களும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள். அந்த வகையில் பார்க்கும்போது, இன்னமும் அம்பேத்கர் தேவைப்படுகிறார். இன்னமும் பெரியார் தேவைப்படுகிறார். அம்பேத்கருடைய புகழைக்கூட குறைக்க வேண்டும் என்பதற்காக அண்மையில் கூட முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்தக் காலகட்டத்தில்தான் எதைச் சொல்லிக் கொடுக்க வேண்டுமோ அதை உங்கள் திரைப்படத்தில் சொல்லிக் கொடுத்திருக்கிறீர்கள். 3000 ஆண்டு காலக் கொடுமையை மூன்று மணி நேர திரைப்படத்திலே சொல்லியிருக்கிறீர்கள்.
– ஆசிரியர் கி.வீரமணி





