‘‘நம்முடைய முதலமைச்சர் அவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று, முதலீடுகளை வாங்கிக் கொண்டிருக்கின்றார். ஆனால், அவர் முதலீடுகளை வாங்குவது மட்டுமல்ல; முதலீடு செய்துவிட்டும் வந்திருக்கிறார்.
உடனே சொல்வார்கள், ‘‘பார்த்தீர்களா, அவர் ஏதோ சொந்தக் காரணத்திற்காக, வியாபாரம் செய்வதற்காக வெளிநாட்டில் முதலீடு செய்வதற்காகப் போயிருக்கிறார்?’’ என்று! ஆமாம், முதலீடுதான் செய்திருக்கிறார். ஆனால், என்ன முதலீடு தெரியுமா?
பெரியார் என்ற முதலீட்டை, லண்டனில் உள்ள ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் செய்திருக்கிறார். ‘‘உலகம் பெரியார் மயம்; பெரியார் உலக மயம்’’ என்று சொல்லி, பெரியாரை முதலீடு செய்திருக்கிறார். எதிரிகள் அவரிடம் கிட்டே போக முடியாது. அப்படிப்பட்ட தனிச்சிறப்பு பெரியாருக்கு உண்டு.’’
(05.09.2025 அன்று உரத்தநாடு தெற்கு ஒன்றியம் தொண்டராம்பட்டில் தமிழர் தலைவர் ஆற்றிய உரையிலிருந்து…)
கேள்வி: எதிர்க்கட்சித் தலைவர் திரு. எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் உங்களுடைய வெளிநாட்டு பயணம் என்பது உங்களுடைய முதலீட்டிற்காக நடத்தினார் என்ற விமர்சனத்தை முன்வைத்திருக்கிறார். அதைப் பற்றி…
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் பதில்: ஒரு வகையில் அவர் சொல்வது முதலீடு செய்யப் போனதைப்பற்றி திரித்துச் சொல்லியிருக்கிறார். என்னைப் பொருத்தவரை சொல்ல விரும்புவது, சுயமரியாதைக் கொள்கையில் முதலீடு செய்துவிட்டு வந்திருக்கிறேன். தந்தை பெரியாரின் உணர்வுகளை பெரியாரைப் பற்றி அந்த நாட்டில் முதலீடு செய்துவிட்டு வந்திருக்கிறேன். அதுதான் உண்மை. அந்த அடிப்படையில் சொல்லியிருப்பார் என்று நினைக்கிறேன்.
8.9.2025 அன்று காலை தனது அய்ரோப்பியப் பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் இருந்து)





