சுயமரியாதை இயக்கமானது அரசியல்களின் பேரால் நமது நாட்டிலுள்ள பல கட்சிகளைப் போலல்லாமல் அன்னியர்களிடம் இருந்து யாதொரு விதமான சிறு விஷயத்தையும் எதிர்பாராமல் மக்களின் அறிவை விளக்கி அவரவர்களின் மனப்பான்மையை மாற்றுவதன் மூலமே உண்மையான விடுதலையையும், சமத்துவத் தையும் தன் மதிப்பையும் உண்டாக்க கூடியதான ஒரு இயக்கமாகும். இவ்வியக்கத்தின் முக்கிய கொள்கையெல் லாம் கட்டுப்பட்டு அடைப்பட்டிருக்கும் அறிவுக்கு விடு தலையை உண்டாக்குவதேயாகும். ஆதலால் சுயமரி யாதை இயக்கம் என்பதை அறிவு விடுதலை இயக்கம் என்றே சொல்லலாம்.
– தந்தை பெரியார்,
குடிஅரசு 25.08.1929





